first review completed

பத்தாங் காலி தமிழ்ப்பள்ளி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 18: Line 18:
200 ஆண்டுகால தமிழ்க்கல்வியின் மேம்புகழ், மலேசியக் கல்வி அமைச்சு, 2016
200 ஆண்டுகால தமிழ்க்கல்வியின் மேம்புகழ், மலேசியக் கல்வி அமைச்சு, 2016


{{First Review Completed}}
{{First review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:மலேசிய பண்பாடு]]
[[Category:மலேசிய பண்பாடு]]

Revision as of 00:10, 1 June 2024

பள்ளிச்சின்னம்

பத்தாங் காலி தமிழ்ப்பள்ளி மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தின் உலு சிலாங்கூர் மாவட்டத்தில் இருக்கும் பத்தாங் காலி தோட்டத்தில் அமைந்திருக்கும் தமிழ்ப்பள்ளி. இப்பள்ளியின் மலேசியக் கல்வி அமைச்சுப் பதிவெண் BBD5041.

பள்ளி வரலாறு

பத்தாங் காலி தமிழ்ப்பள்ளி 1947-ல் தொடங்கப்பட்டது. தொடக்கக் காலத்தில் பத்தாங் காலி தமிழ்ப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 25. 1956-ம் ஆண்டு கோல குபு பாரு வட்டாரத்தில் இருந்த தமிழ்ப்பள்ளியும் பத்தாங் காலி தமிழ்ப்பள்ளியுடன் இணைக்கப்பட்டது. ஒருங்கிணைந்த பத்தாங் காலி தமிழ்ப்பள்ளியின் செயற்பட்டுக்காக ரி.ம 25,000 செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. 1960-ம் ஆண்டு இப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்தது. 1961-ல் பள்ளி வாரியத் தலைவரும் தோட்ட நிர்வாகியுமான ஜே.ஏ.போஸ்டரின் முயற்சியால் பெறப்பட்ட ரி.ம 16,000 ஐ கொண்டு இணைக்கட்டிடம் கட்டப்பட்டது. 1968- ம் ஆண்டு பள்ளிக்கு நீர் வசதியும் 1974 -ம் ஆண்டு மின்சார வசதியும் ஏற்படுத்தப்பட்டன. 1981- ம் ஆண்டு தலைமையாசிரியர் அலுவலகம், ஆசிரியர் அறை, வைப்பறை, கழிப்பறை ஆகியவை கொண்ட இணைக்கட்டிடம் எழுப்பப்பட்டது. 1998-ம் ஆண்டு இரு மாடிகளைக் கொண்ட பள்ளிக்கான புதிய கட்டிடத்தில் பள்ளி செயற்படத் தொடங்கியது.

பள்ளிக்கட்டிடம்

பள்ளி முகவரி

Sekolah Jenis Kebangsaan (T) Ladang Batang Kali
Ladang Batang Kali
Selangor, Malaysia

பள்ளிக் கட்டிடம் அண்மைத்தோற்றம்

உசாத்துணை

200 ஆண்டுகால தமிழ்க்கல்வியின் மேம்புகழ், மலேசியக் கல்வி அமைச்சு, 2016



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.