under review

கம்பன் புதிய பார்வை: Difference between revisions

From Tamil Wiki
m (Created/Updated by Je)
m (Created/Updated by Je)
Line 36: Line 36:
* [https://www.tamilvu.org/ta/library-nationalized-html-naauthor-40-235695 அ.ச.ஞானசம்பந்தன் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்]
* [https://www.tamilvu.org/ta/library-nationalized-html-naauthor-40-235695 அ.ச.ஞானசம்பந்தன் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்]


{ready for review}
{{ready for review}}


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 10:20, 7 April 2022

கம்பன் புதிய பார்வை

கம்பன் புதிய பார்வை ( ) அ.ச.ஞானசம்பந்தன் எழுதிய நூல். கம்பராமாயணம் பற்றிய பக்திசார்ந்த மரபான பார்வையை மாற்றி அதை சமூகவியல், உளவியல் கோணத்தில் அணுகிய நூல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஒழுக்கவியல் சார்ந்த பழைய பார்வை கொண்டது என்றும் சுட்டப்படுகிறது

எழுத்து, வெளியீடு

தமிழறிஞர் அ.ச.ஞானசம்பந்தன் 1984 ஜூலை 18, 19 ஆம் தேதிகளில் சென்னை ஏ.வி.எம்.ராஜேஸ்வரி அரங்கில் ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் நினைவுப் பேருரையை கம்பன் புதியபார்வை என்னும் தலைப்பில் நிகழ்த்தினார். அவ்வுரை 1985ல் கங்கை புத்தகநிலையத்தாரால் நூலாக்கப்பட்டது.

விருது

இந்நூல் 1985 ஆண்டுக்கான சாகித்ய அக்காதமி விருது பெற்றது.

உள்ளடக்கம்

இந்நூல் பத்து துணைத்தலைப்புகள் கொண்டது. கம்பனின் வரலாற்றுப் பின்புலம் கம்பனின் விழுமியங்கள் ஆகியவற்றை ஆராய்கிறது

  • கம்பனுக்கு மூலம் யார்?
  • கம்பனுக்கு முன்
  • பக்தி இயக்கம்
  • கம்பனின் அரிமா நோக்கு
  • கம்பன் கண்ட நாடு
  • கம்பன் கண்ட மன்னன்
  • கடவுள் மனிதனாகப் பிறந்தால்
  • கம்பன் கண்ட பரம்பொருள்
  • கவிக்கு நாயகர்
  • கம்பன் கண்ட விழுப்பொருள்
கம்பன் புதியபார்வை

இலக்கிய இடம்

அ.ச.ஞானசம்பந்தனின் இந்நூல் கம்பனைப் பற்றிய பின்னாளைய பார்வைகள் அனைத்திலும் பெரும் செல்வாக்கு செலுத்தியது. கம்பன் இந்துமதம் சார்ந்த பார்வையை, பக்தியை முன்வைப்பவர் என்றும் வடவர் கருத்தை முன்வைப்பவர் என்றும் சொல்லப்பட்டு வந்த சூழலில் கம்பன் உலகுதழுவிய மானுட அறத்தை முன்வைக்கும் பெருங்கவிஞர் என வாதிட்டது. கம்பன் பேசுபவை நல்லாட்சி, நல்ல நாடு எனும் அடிப்படை விழுமியங்களையே என அ.ச.ஞானசம்பந்தன் விளக்குகிறார்

இணைப்பு

நூல் முழுமையாகவே இணைய நூலகத்தில் உள்ளது

(பார்க்க கம்பனும் மில்ட்டனும் ஒரு புதிய பார்வை )

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.