first review completed

நியு கொக்னட் தோட்டத்தமிழ்ப்பள்ளி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
நியு கொக்னட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மலேசியாவின் பேராக் மாநிலத்தின் பாகான் டத்தோ மாவட்டத்தில் அமைந்திருக்கும் தமிழ்ப்பள்ளி. இப்பள்ளியின் மலேசியக் கல்வி அமைச்சுப் பதிவெண்  ABDB012
நியு கொக்னட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மலேசியாவின் பேராக் மாநிலத்தில் பாகான் டத்தோ மாவட்டத்தில் அமைந்திருக்கும் தமிழ்ப்பள்ளி. இப்பள்ளியின் மலேசியக் கல்வி அமைச்சுப் பதிவெண்  ABDB012
[[File:LOGO NEW.jpg|thumb|பள்ளிச்சின்னம்]]

===பள்ளி வரலாறு===
===பள்ளி வரலாறு===
[[File:BUILDING COC.jpg|thumb|பள்ளிக் கட்டிடம்]]

நியு கொக்னட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 1930-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தோட்டத் தொழிலாளர் குடியிருப்பில் இருந்த வீடொன்றில் பள்ளி தொடங்கப்பட்டது. ஓராசிரியர் பள்ளியாக 20 மாணவர்களைக் கொண்டு இயங்கத் தொடங்கியது. 1935-ம் ஆண்டு பள்ளிக்கான கட்டிடம் எழுப்பப்பட்டது. முதல் வகுப்பு தொடங்கி மூன்றாம் வகுப்பு வரையிலான 25 மாணவர்கள் ஒரே வகுப்பறையில் கல்வி பயின்றனர். 1942-ம் ஆண்டு தொடங்கி 1945-ம் ஆண்டு வரையிலான ஜப்பானியர் ஆட்சிக் காலத்தில் நியு கொக்னட் தமிழ்ப்பள்ளி முடங்கியிருந்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்பாக பள்ளி மாணவர் எண்ணிக்கை 32 ஆக உயர்வு கண்டது.

===கட்டிட வரலாறு===
===கட்டிட வரலாறு===

Revision as of 07:53, 11 June 2024

நியு கொக்னட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மலேசியாவின் பேராக் மாநிலத்தில் பாகான் டத்தோ மாவட்டத்தில் அமைந்திருக்கும் தமிழ்ப்பள்ளி. இப்பள்ளியின் மலேசியக் கல்வி அமைச்சுப் பதிவெண்  ABDB012

பள்ளிச்சின்னம்

பள்ளி வரலாறு

பள்ளிக் கட்டிடம்

நியு கொக்னட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 1930-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தோட்டத் தொழிலாளர் குடியிருப்பில் இருந்த வீடொன்றில் பள்ளி தொடங்கப்பட்டது. ஓராசிரியர் பள்ளியாக 20 மாணவர்களைக் கொண்டு இயங்கத் தொடங்கியது. 1935-ம் ஆண்டு பள்ளிக்கான கட்டிடம் எழுப்பப்பட்டது. முதல் வகுப்பு தொடங்கி மூன்றாம் வகுப்பு வரையிலான 25 மாணவர்கள் ஒரே வகுப்பறையில் கல்வி பயின்றனர். 1942-ம் ஆண்டு தொடங்கி 1945-ம் ஆண்டு வரையிலான ஜப்பானியர் ஆட்சிக் காலத்தில் நியு கொக்னட் தமிழ்ப்பள்ளி முடங்கியிருந்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்பாக பள்ளி மாணவர் எண்ணிக்கை 32 ஆக உயர்வு கண்டது.

கட்டிட வரலாறு

பள்ளி முகப்பு வளாகம்

1951-ம் ஆண்டு 52’ x 26’ பரப்பளவிலான புதிய வகுப்பறை கட்டப்பட்டது. இரண்டு ஆசிரியர்கள் பணியாற்ற முதல் வகுப்பு முதல் ஆண்டு தொடங்கி ஆறாம் வகுப்பு வரையில் 52 மாணவர்களும் பயிலத்தொடங்கினர். 1980-ம் ஆண்டு பள்ளி மாணவர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு கண்டதால், வகுப்பறைப் பற்றாக்குறை சிக்கல் ஏற்பட்டது. இச்சிக்கலைக் களைய, தோட்ட மண்டபத்தில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் தொடர தோட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.1989-ம் ஆண்டில் புதிய பள்ளி எழுப்புவதற்கான 35000 மலேசிய வெள்ளிக்கான கல்வி அமைச்சு நிதியுதவியைப் பள்ளி பெற்றது. கல்வி அமைச்சின் நிதியுதவியையும் பொது மக்களின் நிதியாதரவையும் பெற்று 60000 வெள்ளி செலவில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் செப்டம்பர் 12,1992 அன்று செயல்படத் தொடங்கியது. 1996-ம் ஆண்டு பள்ளியைச் சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டுப் புதிய சிற்றுண்டிச்சாலைக் கட்டிடமும் கட்டப்பட்டது.

பள்ளித்தலைமையாசிரியர் பட்டியல்

எண் பெயர் பணியாற்றிய ஆண்டு
1.       பி.கிருஷ்ணன் மே 5, 1955 - மார்ச் 18, 1986
2.       ஸ்ரீ ராமுலு அக்டோபர் 16, 1997 - 1997
3.       பி.அரண் 1997 - மார்ச் 25, 2005
4.       சரசு மார்ச் 25, 2005 – மே 31, 2006
5.       எம்.பரமேஸ்வரி ஜூன் 1, 2006 – டிசம்பர் 15., 2008
6.       அ.தமிழ்ச்செல்வன் டிசம்பர் 16, 2008 – ஜூன் 16, 2009
7.       ஆர் கணேசன் ஜூன் 16, 2009-2017
8.       அ.தமிழ்ச்செல்வன் 2017
9.       பி.பாண்டியன் 2017-2021
10.    பிலோமினா 2021-

பள்ளி முகவரி

Sekolah Jenis Kebangsaan (T) Ladang New Coconut
Ladang New Coconut
36300, Sungai Sumun
Negeri Perak, Malaysia

உசாத்துணை

  • மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வியின் மேம்புகழ், மலேசியக்கல்வி அமைச்சு, 2016
  • பள்ளி இதழ், 2023

🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.