ரா. செந்தில்குமார்: Difference between revisions

From Tamil Wiki
Line 37: Line 37:


நூல்பட்டியல் : இசூமியின் நறுமணம் சிறுகதை தொகுப்பு (2021)
நூல்பட்டியல் : இசூமியின் நறுமணம் சிறுகதை தொகுப்பு (2021)
====== சிறுகதைகள்  ======
*


== உசாத்துணை ==
== உசாத்துணை ==

Revision as of 03:49, 25 January 2022

ரா.செந்தில்குமார்
ரா.செந்தில்குமார்

ரா. செந்தில்குமார் ஒரு தமிழ் எழுத்தாளர். சிறுகதைகளையும் கட்டுரைகளையும் எழுதி வருகிறார். ஜப்பானில் வசித்து வரும் செந்தில்குமார் புதிய கதைகளங்களிலும் பண்பாட்டு பின்புலங்களிலும் ஏற்படும் உராய்வுகளை கதையாக்குகிறார். தமிழகத்தை கதை களமாக கொண்ட கதைகள் நிலப்பிரபுத்துவத்திற்கு பின்பான காலகட்டத்தில் சென்ற காலத்து நிலப்பிரபுத்துவ ஆளுமைகளின் வீழ்ச்சியை பதிவு செய்கின்றன.

பிறப்பு, கல்வி

செந்தில்குமார், ஜூலை 23, 1976 அன்று அன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பி.எஸ். ராமலிங்கம்- ரெத்னா இணையருக்கு மகனாக பிறந்தார். பள்ளி இறுதி வரை மன்னார்குடி தேசிய மேல் நிலைப்பள்ளியில் பயின்றார். பூண்டி ஸ்ரீபுஷ்பம் கல்லூரியில் இளங்கலை கணிப்பொறியியலும், சென்னை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதுகலை கணிப்பொறியியலும் கற்றார்.

தனி வாழ்க்கை

மனைவி பெயர் : காயத்ரி

மணமான நாள் : 26-04-2004

குழந்தைகள் பெயர் : கவின் (மகன் 14), காவியா (மகள் 8)

முதல் படைப்பு : சிறிய வயதில் கோகுலம் இதழில் வெளியான கதை. மடத்து வீடு சிறுகதை - பதாகை இணைய இதழ்

பிரசுரமான ஆண்டு : 2016

இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் : ஜெயமோகன், தி.ஜானகிராமன், வண்ணதாசன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி. ரஷ்ய இலக்கியவாதியான லியோ டால்ஸ்டாய்.

அரசியல் செயல்பாடுகள் : கல்லூரி காலத்தில், சிறிது காலம் இந்திய கம்யுனிஸ்ட் கட்சியில் ஈடுபாடு தொடர்ந்து திராவிட இயக்கம் சார்ந்து சில செயல்பாடுகள்.

இதர செயல்பாடுகள் : முழுமதி கல்வி அறக்கட்டளை மூலம் தமிழகத்திலுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவி, தமிழகத்திலுள்ள ஈழத்தமிழர் முகாம்களிலுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவி. பின் தங்கிய கிராமங்களிலுள்ள அரசு பள்ளிகளை தத்தெடுத்து மாதிரி பள்ளிகளாக்க உதவி.

இலக்கிய வாழ்க்கை

இலக்கிய செயல்பாடுகள் :  பள்ளி காலத்தில் சிட்டுக்குருவி என்னும் தலைப்பில் கையெழுத்து பத்திரிக்கை நடத்தியது.  தொடர்ந்து ஜெயகாந்தன் மூலம் தமிழிலக்கியத்தில் ஈடுபாடு ஏற்பட்டு தொடர் வாசிப்பு.   தமிழக இலக்கியவாதிகளான எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், ஜெயமோகன், லீனா மணிமேகலை போன்றோரை ஜப்பானுக்கு அழைத்து பல்வேறு இலக்கிய கூட்டங்களை நடத்தியது.

இணையம் : www.manavelipayanam.blogspot.com

இலக்கிய இடம், மதிப்பீடு

நூல்கள்

நூல்பட்டியல் : இசூமியின் நறுமணம் சிறுகதை தொகுப்பு (2021)

சிறுகதைகள்

உசாத்துணை