சி.மௌனகுரு: Difference between revisions
Line 5: | Line 5: | ||
மட்டக்களப்பு மாநிலத்தில் அமிர்தகழி அருகே சீலாமுனை என்னும் கூத்துக்கலைகளுக்குப் பெயர் பெற்ற ஊரில் சின்னையா- முத்தம்மா இணையருக்கு 9 ஜூன் 1943 ல் இரண்டாவது மகனாக பிறந்தவர் மௌனகுரு. அவருக்கு சகோதரிகள் மூவர். மௌனகுருவின் ஆரம்பக்கல்வி அமிர்தகழி மெதடிஸ்த மிஷன் பாடசாலையில் தொடங்கியது ( இன்று அமிர்தகழி மகாவித்திலாயம்) ஆரம்ப வகுப்பிலிருந்து ஐந்தாது வகுப்புவரை(1948 - 1953) அங்கே பயின்றபின் புலமைப்பரிசில் பெற்று வந்தாறுமூலை மத்திய கல்லூரிக்குச் சென்றார். | மட்டக்களப்பு மாநிலத்தில் அமிர்தகழி அருகே சீலாமுனை என்னும் கூத்துக்கலைகளுக்குப் பெயர் பெற்ற ஊரில் சின்னையா- முத்தம்மா இணையருக்கு 9 ஜூன் 1943 ல் இரண்டாவது மகனாக பிறந்தவர் மௌனகுரு. அவருக்கு சகோதரிகள் மூவர். மௌனகுருவின் ஆரம்பக்கல்வி அமிர்தகழி மெதடிஸ்த மிஷன் பாடசாலையில் தொடங்கியது ( இன்று அமிர்தகழி மகாவித்திலாயம்) ஆரம்ப வகுப்பிலிருந்து ஐந்தாது வகுப்புவரை(1948 - 1953) அங்கே பயின்றபின் புலமைப்பரிசில் பெற்று வந்தாறுமூலை மத்திய கல்லூரிக்குச் சென்றார். | ||
வந்தாறுமூலை வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை இடைநிலைக் கல்வி கற்றார். அப்போது வகுப்புத் தலைவராக, விடுதித் தலைவராக, விபுலாநந்த இல்ல விளையாட்டுத் தலைவராக , பாடசாலைத் தலைவராக, தமிழ் மன்றத் தலைவராக இந்துமன்றத்தலைவராக, விடுதி உணவுப் பகுதிப் பொறுப்பாளராக, சாரணர் இயக்கத் தலைவராக- முன்னணி மாணவராக திகழ்ந்தார். கைப்பந்தாட்டம், காற்பந்தாட்டம் முதலிய குழுக்களிலும் பங்கேற்றார் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தமிழில் | வந்தாறுமூலை வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை இடைநிலைக் கல்வி கற்றார். அப்போது வகுப்புத் தலைவராக, விடுதித் தலைவராக, விபுலாநந்த இல்ல விளையாட்டுத் தலைவராக , பாடசாலைத் தலைவராக, தமிழ் மன்றத் தலைவராக இந்துமன்றத்தலைவராக, விடுதி உணவுப் பகுதிப் பொறுப்பாளராக, சாரணர் இயக்கத் தலைவராக- முன்னணி மாணவராக திகழ்ந்தார். கைப்பந்தாட்டம், காற்பந்தாட்டம் முதலிய குழுக்களிலும் பங்கேற்றார் . | ||
மௌனகுரு பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பயின்று தமிழில் பட்டம் பெற்றார். பல்கலைக் கழகத்தில் க.கணபதிப்பிள்ளை, எஸ். செல்வநாயகம், சு. வித்தியானந்தன், க.கைலாசபதி, எஸ். சதாசிவம், சி. தில்லைநாதன், ச. தனஞ்செயராஜசிங்கம், க. இந்திரபாலா, வி. சிவசாமி, சி.பத்மநாதன்,பஸ்தியாம்பிள்ளை ,பாலகிருஷ்ணன் போன்ற புகழ்பெற்ற ஆசிரியர்கள் அமைந்தனர். பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதுமாணி (எம்.ஏ) பட்டத்தையும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி டிப்ளோமா பட்டத்தையும் பெற்றார். | |||
== கல்விப்பணிகள் == | == கல்விப்பணிகள் == | ||
முதுகலைப் பட்டம் பெற்ற பின் மௌனகுரு 1967 லிருந்து 1968 வரை செயின்ட் மகளிர் உயர்தரக் கல்லூரியிலும் செயின்ட். மைக்கேல் கல்லூரியிலும் அரசினர் கல்லூரி (இன்று இந்துக்கல்லூரி)யிலும் ஆசிரியராக உயர்வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் மொழி பயிற்றுவித்தார். அரச ஆசிரியர் நியமனம் பெற்றபின் 1968ல் கல்முனை சாஹிராக் கல்லூரியிலும், 1969ல் கல்முனை வெஸ்லிக் கல்லூரியிலும் 1970ல் வந்தாறுமூலை மத்திய கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.1972 | முதுகலைப் பட்டம் பெற்ற பின் மௌனகுரு 1967 லிருந்து 1968 வரை செயின்ட் செயிண்ட் வின்செண்ட் மகளிர் உயர்தரக் கல்லூரியிலும் செயின்ட். மைக்கேல் கல்லூரியிலும், மட்டக்களப்பு அரசினர் கல்லூரி (இன்று இந்துக்கல்லூரி) யிலும் ஆசிரியராக உயர்வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் மொழி பயிற்றுவித்தார். அரச ஆசிரியர் நியமனம் பெற்றபின் 1968ல் கல்முனை சாஹிராக் கல்லூரியிலும், 1969ல் கல்முனை வெஸ்லிக் கல்லூரியிலும் 1970ல் வந்தாறுமூலை மத்திய கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.1972 முதல் 1976 வரை கொழும்பில் கல்வி அமைச்சின் பாடவிதான அபிவிருத்தி நிலையத்தில் பாட நூல் எழுத்தாளராக பணியாற்றினார். | ||
1977ல் யாழ் கல்வி வலயத்தில் ஆசிரிய ஆலோசகராக இருந்தார். | 1977ல் யாழ் கல்வி வலயத்தில் ஆசிரிய ஆலோசகராக இருந்தார்.யாழ்ப்பாணம் உஸ்மானியாக் கல்லூரியிலும் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். 1981 ல் பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளராகி இரண்டு ஆண்டுகள் ஆசிரிய மாணவர்களுக்குத் தமிழ் போதித்தார். 1984 முதல் 1988 வரையும் யாழ் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகவும், 1989லிருந்து 1991 வரை சிரேஷ்ட விரிவுரையாளராகவும் பணியாற்றினார். 1992ல் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறை ஆரம்பிக்கப்பட்ட போது மௌனகுரு அதில் பங்கேற்று விரிவுபடுத்தினார். நுண்கலைத் துறைத்தலைவராக கலை, பண்பாட்டுத்துறை பீடாதிபதியாக, பதில் துணைவேந்தராக, சுவாமி விபுலானந்தர் இசை நடன வளாகத்தின் இணைப்பாளராக நூலகக் குழுத்தலைவராக, தமிழ்ச் சங்கப் போஷகராக பல தளங்களில் பணியாற்றினார். | ||
== தனிவாழ்க்கை == | == தனிவாழ்க்கை == | ||
மௌனகுருவின் மாணவியாக பயின்றவர் சித்ரலேகா. கொழும்பில் வாழ்ந்த காலத்தில் சித்ரலேகாவை மௌனகுரு மணம்புரிந்துகொண்டார். சித்திரலேகா மட்டக்களப்பில் வாழ்ந்த தமிழறிஞரும், சமூகத் தொண்டருமான திரு. பி. வி. கணபதிப்பிள்ளையின் மூத்தமகள். இலங்கைப் பல்கலைக்கழகம் - கொழும்பு வளாகத்தின் தமிழ்த்துறைச் சிறப்புப் பட்டதாரி. அக்காலத்தில் இலங்கை வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்தவர் | மௌனகுருவின் மாணவியாக பயின்றவர் சித்ரலேகா. கொழும்பில் வாழ்ந்த காலத்தில் சித்ரலேகாவை மௌனகுரு மணம்புரிந்துகொண்டார். சித்திரலேகா மட்டக்களப்பில் வாழ்ந்த தமிழறிஞரும், சமூகத் தொண்டருமான திரு. பி. வி. கணபதிப்பிள்ளையின் மூத்தமகள். இலங்கைப் பல்கலைக்கழகம் - கொழும்பு வளாகத்தின் தமிழ்த்துறைச் சிறப்புப் பட்டதாரி. அக்காலத்தில் இலங்கை வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்தவர். மௌனகுரு- சித்ரலேகா இணையருக்கு ஒரு மகன், சித்தாந்தன். | ||
== அரசியல் வாழ்க்கை == | |||
பள்ளிநாட்களிலேயே மௌனகுரு தமிழரசுக் கட்சியின் அரசியலில் ஈடுபாடு கொண்டு சட்டமறுப்புப் போராட்டங்களில் பங்குபெற்றார்.வந்தாறு மூலையிலிருந்து இரண்டாயிரம் மாணவர்களைத் திரட்டி மட்டக்களப்பு அலுவலகத்துக்கு ஊர்வலமாகச் சென்று பகிரங்க பிரம்படி தண்டனை பெற்றார். சட்டமறுப்புப் போராட்டங்களை நடத்திய, மட்டக்களப்பு தமிழ் மாணவ மன்றத் தலைவராக இருந்து செயற்பட்டார். ’தெருவெல்லாம் தமிழ் முழக்கம்' - இயக்கத்து உறுப்பினராகவும் இருந்தார். இவ்வியக்கம் ஊர் ஊராகச் சென்று பாடல்களால் தமிழ் உணர்வூட்டியது. கவிஞர் காசிஆனந்தன், முழக்கம் முருகப்பா ஆரையூர் அமரன், மாஸ்டர் சிவலிங்கம், வித்துவான் சா.இ. கமலநாதன் என்று பலர் அதில் செயல்பட்டனர். கொழும்பு சென்றபின் மௌனகுரு இடதுசாரி இயக்கங்களின் ஆதரவாளராக மாறிச் செயல்பட்டார். பேராதனை பல்கலைக்கழக வளாகத்தி நிகழ்ந்த மார்க்ஸிய வகுப்புகளுக்குச் சென்ற மௌனகுரு [[க.கைலாசபதி]]க்கு அணுக்கமான மாணவரானார். வியட்நாம் மீது அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக பேராதனையிலிருந்து கண்டிக்கு சென்ற பாதயாத்திரையில் முன்னணிப் பங்கெடுத்தார். | |||
ஆசிரியப்பணியில் நுழைந்ததும் தொழிற்சங்கச் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டார். தோழர் கிருஷ்ணன்குட்டி ,கவிஞர் சுபத்திரன், சாருமதி முதலானோருடன் இணைந்து சமூகப்பணிகளிலும் ஈடுபட்டார். | |||
== இலக்கியவாழ்க்கை == | == இலக்கியவாழ்க்கை == | ||
கல்லூரி நாட்களில் கவிதையெழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்த சி.மௌனகுரு ’பட்டப்பகலில் பாவலர்க்குத் தோன்றுவது' என்ற தலைப்பில் நிகழ்ந்த கவியரங்கில் வாசித்த கவிதையில் ஈழத் தமிழர் தனிநாடு பெற்று, படை கொண்டு புலிக் கொடியுடன் வாழ்வதாக பாடி முதல் பரிசு பெற்றார். அப்போது நிகழ்ந்த சிறுகதைப் போட்டியில் ’சலனம்' என்ற சிறுகதைக்கு மூன்றாம் பரிசு பெற்றார். | |||
== நிகழ்த்துகலை பங்களிப்பு == | == நிகழ்த்துகலை பங்களிப்பு == | ||
மெளனகுருவின் தந்தையும் கிராமியக் கலைகளில் பயிற்சி கொண்டவர். அவரிடமிருந்து நிகழ்த்துகலைகள் மேல் மௌனகுரு ஆர்வமும் அடிப்படைக் கல்வியும் கொண்டார். கல்லூரியில் நிகழும் நாடகங்களில் முக்கிய பாத்திரங்களையேற்று நடித்து சிறந்த நடிப்புக்கான பரிசுகளைப் பலமுறை வென்ற மௌனகுரு கல்லூரியில் அரங்கேற்றிய பாசுபதம் கூத்தில் சிவவேடன் வேடமேற்றதை கண்டு கவரப்பட்ட பேராசிரியர் சு.வித்தியானந்தன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் திறந்த வெளியரங்கில் 1959இல் மேடையேற்றினார். பேராதனை பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் 1962ல் கர்ணன்போர் கூத்தை நடத்தி அதி கர்ணனாக நடித்தார். 1963ல் நொண்டிநாடகத்தில் செட்டியாகவும், 1965ல் இராவணேசன் நாடகத்தில் இராவணன் ஆகவும் நடித்தார். 1966ல் இவரது பல்கலைக்கழக வாழ்வு நிறைவுற்ற போதிலும் அப்போது தயாரான 'வாலிவதை' -கூத்துக்கும் உதவி செய்து விட்டே வெளியேறினார். | |||
ஈழத்துக் கூத்து ஆய்வுகளி மையமான திகழ்ந்த பேராசிரியர் சு.வித்தியானந்தனுக்குத் துணையாக மௌனகுரு கூத்து நூல்களைச் சுருக்கி வடிவமைத்தார். புதிய கூத்துக்களைக் எழுதினார். மட்டக்களப்பில் அண்ணாவிமாரைத் தேடிப்பிடித்து கொடுத்தார். மாணவர்களுக்குக் கூத்தாட்டம் பழக்கினார். கூத்தாட்ட அலங்கார உடைகள் வடிவமைக்க உதவினார். | |||
கொழும்பில் ஆசிரியப் பணியில் இருக்கையில் தீண்டாமைக்கு எதிராக மௌனகுரு முயற்சியால் 'சங்காரம்' எனும் நாடகம் தயாரிக்கப்பட்டது. 1969ல் மட்டக்களப்பில் உருவான நாடக சபா மூலம் கொழும்பு லும்பினி அரங்கில் தொழிற்சங்கவாதி திரு.எஸ். சண்முகதாசன் தலைமையில் சங்காரம் மேடையேற்றப்பட்டு கூத்து மரபில் புதுமாற்றம் என்று விமர்சகர்களால் வரவேற்கப்பட்டது. | |||
கொழும்பில் இருக்கையில் இலங்கை வானொலியில் 'சங்கநாதம்' எனும் இளைஞர் நிகழ்ச்சியையும் 'கிராம சஞ்சிகை' எனும் நிகழ்ச்சியையும் தயாரிக்கும் பொறுப்பு மௌனகுருவுக்குக் கிடைத்தது. வானொலியில் உரைச்சித்திரங்கள் சிறப்புச் சொற்பொழிவுகள் எழுதினார். வானொலிக்கு மெல்லிசைப்பாடல்களை எழுதினார். ’சின்னச் சின்னக் குருவிகள்’ ’சேருவோம் ஒன்று சேருவோம்’ என்னும் பாடல்கள் புகழ்பெற்றவை. | |||
திருமதி கார்த்திகா கணேசருடன் இணைந்து வடமோடி ஆட்டங்களையும் பரத நாட்டிய ஆட்டங்களையும் கலந்து 'இராமயணம்' நாட்டிய நாடகத்தை உருவாக்கினார். [[தாசீசியஸ்]], சுந்தரலிங்கம், சிவானந்தன், சுஹைர் அப்துல் ஹமீத் போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றினார். தாசீசியஸ் தயாரித்தளித்த புதியதொரு வீடு, கந்தன் கருணை ஆகிய நாடகங்களில் பங்கேற்று நடித்தார்.1971லிருந்து 1977 வரை இலங்கைக் கலைக் கழகத்தின் நாடகக் குழுவிலும் இசைக்குழுவிலும் உறுப்பினராக இருந்தார். தர்ம பூரீபண்டார நாயக்கா, சைமன் நவவத்தேகம, தர்மசேன பத்திரராஜ, சுனில் ஆரியரத்தின, சுனில் விஜயறிவர்த்தன, AJ. குணவர்த்தனா முதலிய சிங்கள கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றினார் | |||
மட்டக்களப்பு வடமோடி தாளக்கட்டை அடிப்படையாகக் கொண்டு திரு.பரராசசிங்கம், பேராசிரியர் மகேஸ்வரன் ஆகியோருடன் இணைந்து யுனெஸ்கோ (Unesco) வுக்காக ஒருபாடல் தயாரித்து வெளியிட்டார்.அகில இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க நாடகக் குழுவின் செயலவை உறுப்பினராகவும் தேர்வுசெய்யப்பட்டு பணியாற்றினார். | |||
1979ல் யாழ் பல்கலைக்கழகத்தில் புதியதொரு வீடு'நாடகம் நடிக்கப்பட்டு பல கிராமங்களுக்கும் அது கொண்டு செல்லப்பட்டது. யாழ்ப்பாணத்தில் செயற்பட்டு வந்த நாடக அரங்குக் கல்லூரியுடன் இணைந்து நடிகர்களுக்கு கூத்துப் பயிற்சி அளித்தார். நாடக அரங்குக் கல்லூரியின் சார்பாக 'சங்காரம், அபசுரம், குருஷேத்திரோபதேசம்' ஆகிய நாடகங்கள்த் தயாரித்தார்.யாழ்ப்பாண அவைக்காற்று கலைக்கழகத்துடன் இணைந்து அதி மானிடன், தலைவர் ஆகிய நாடகங்களை உருவாக்கினார். | |||
1983 ல் யாழ்ப்பாணக் கலாசாரப் பேரவையுடன் யாழ்.பல்கலைக்கழக நுண்கலைத்துறை இணைந்து நடத்திய பெரிய அளவிலான நாடகப் பயிற்சிப் பட்டறை அமைப்பாளராக இருந்து செயற்பட்டார். விடுமுறை நாட்களில் (சனி, ஞாயிறு) ஏறத்தாழ ஒருவருடம் இப்பயிற்சிக் பட்டறை நிகழ்ந்தது. இதன் மூலம் இன்றைய பல முன்னணி நாடகக் கலைஞர்கள் யாழ்ப்பாணத்தில் உருவாயினர். | |||
அங்கிருந்த காலங்களில் பல ஊர்களிலும் நாடகப் பயிற்சிப் பட்டறைகளும், எழுத்துப் பயிற்சிப் பட்டறைகளும் நாடகக் கருத்தரங்குகளும் எற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வந்தன. யுத்தத்தின் சூழலுக்குள்ளும் குண்டுகள் வெடிப்பிற்குள்ளும் நாடக முயற்சிகளும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது ஒரு குறிப்பிடத்தக்க விடயம். | |||
சங்காரம், இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம், சடங்கிலிருந்து நாடகம் வரை, தப்பி வந்த தாடி ஆடு, ஈழத்து நாடக வரலாற்றில் யாழ் மஹாஜனக் கல்லூரி, ஏழு நாடகங்கள், மெளனகுருவின் மூன்று நாடகங்கள் ஆகியன யாழ்ப்பாணத்திலிருந்த போது வெளியிடப்பட்ட இவரது நூல்கள். | |||
மட்டக்களப்பு - புதுப்பொலிவு | |||
இவரது வாழ்வில் வந்தாறுமூலை எப்போதும் ஒரு தனித்த இடத்தைப் பெற்று வந்துள்ளது. அங்குள்ள மத்திய மகாவித்தியாலயத்திலிருந்தே இவர் பல்கலைக்கழகம் தெரிவானவர். பிற்பட்ட காலத்தில் இதுவே கிழக்குப் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. இது ஆங்கில மொழி மூல விவசாய விஞ்ஞானம், அரபு, இஸ்லாமிய பீடங்களை உள்ளடக்கிய தேசியப் பல்கலைக் கழகமாகவே வடிவமைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. கிழக்குப் பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களதும், இந்துக்களதும் அபிலாசைகள் சிறிதேனும் கவனத்திற் கொள்ளப்படவில்லை. | |||
கிழக்குப் பல்கலைக்கழகமாகத் தொடங்கி பத்து ஆண்டுகளுக்குப்பின் 1992இல் தமிழ் மொழித்துறையை ஆரம்பிக்கும் அழுத்தங்கள் ஏற்பட்டபோது அத்துறைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இவரும் இவரது துணைவியாருமே இத்துறையை வளர்க்கப் பொருத்தமானவர்கள் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. அதுவே இறுதியாகவும் கை கூடிற்று. யாழ். மட்டக்களப்பு பிரயாணம், தகவல் தொடர்புகள் தடைப்பட்டிருந்த ஒரு கால கட்டத்தில் மிகவும் சிரமப்பட்டு இவர்களது விண்ணப்பம் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டது நினைவிலுள்ளது. | |||
== நூல்கள் == | == நூல்கள் == |
Revision as of 11:34, 27 March 2022
சி.மௌனகுரு (9 ஜூன் 1943 ) சின்னையா மௌனகுரு. நாடகப்பேராசிரியர், நிகழ்கலை ஆய்வாளர், தெருக்கூத்து ஆசிரியர், தெருக்கூத்து நடிகர், ஈழ இலக்கிய வரலாற்றசிரியர், எழுத்தாளர்.
பிறப்பு, கல்வி
மட்டக்களப்பு மாநிலத்தில் அமிர்தகழி அருகே சீலாமுனை என்னும் கூத்துக்கலைகளுக்குப் பெயர் பெற்ற ஊரில் சின்னையா- முத்தம்மா இணையருக்கு 9 ஜூன் 1943 ல் இரண்டாவது மகனாக பிறந்தவர் மௌனகுரு. அவருக்கு சகோதரிகள் மூவர். மௌனகுருவின் ஆரம்பக்கல்வி அமிர்தகழி மெதடிஸ்த மிஷன் பாடசாலையில் தொடங்கியது ( இன்று அமிர்தகழி மகாவித்திலாயம்) ஆரம்ப வகுப்பிலிருந்து ஐந்தாது வகுப்புவரை(1948 - 1953) அங்கே பயின்றபின் புலமைப்பரிசில் பெற்று வந்தாறுமூலை மத்திய கல்லூரிக்குச் சென்றார்.
வந்தாறுமூலை வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை இடைநிலைக் கல்வி கற்றார். அப்போது வகுப்புத் தலைவராக, விடுதித் தலைவராக, விபுலாநந்த இல்ல விளையாட்டுத் தலைவராக , பாடசாலைத் தலைவராக, தமிழ் மன்றத் தலைவராக இந்துமன்றத்தலைவராக, விடுதி உணவுப் பகுதிப் பொறுப்பாளராக, சாரணர் இயக்கத் தலைவராக- முன்னணி மாணவராக திகழ்ந்தார். கைப்பந்தாட்டம், காற்பந்தாட்டம் முதலிய குழுக்களிலும் பங்கேற்றார் .
மௌனகுரு பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பயின்று தமிழில் பட்டம் பெற்றார். பல்கலைக் கழகத்தில் க.கணபதிப்பிள்ளை, எஸ். செல்வநாயகம், சு. வித்தியானந்தன், க.கைலாசபதி, எஸ். சதாசிவம், சி. தில்லைநாதன், ச. தனஞ்செயராஜசிங்கம், க. இந்திரபாலா, வி. சிவசாமி, சி.பத்மநாதன்,பஸ்தியாம்பிள்ளை ,பாலகிருஷ்ணன் போன்ற புகழ்பெற்ற ஆசிரியர்கள் அமைந்தனர். பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதுமாணி (எம்.ஏ) பட்டத்தையும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி டிப்ளோமா பட்டத்தையும் பெற்றார்.
கல்விப்பணிகள்
முதுகலைப் பட்டம் பெற்ற பின் மௌனகுரு 1967 லிருந்து 1968 வரை செயின்ட் செயிண்ட் வின்செண்ட் மகளிர் உயர்தரக் கல்லூரியிலும் செயின்ட். மைக்கேல் கல்லூரியிலும், மட்டக்களப்பு அரசினர் கல்லூரி (இன்று இந்துக்கல்லூரி) யிலும் ஆசிரியராக உயர்வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் மொழி பயிற்றுவித்தார். அரச ஆசிரியர் நியமனம் பெற்றபின் 1968ல் கல்முனை சாஹிராக் கல்லூரியிலும், 1969ல் கல்முனை வெஸ்லிக் கல்லூரியிலும் 1970ல் வந்தாறுமூலை மத்திய கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.1972 முதல் 1976 வரை கொழும்பில் கல்வி அமைச்சின் பாடவிதான அபிவிருத்தி நிலையத்தில் பாட நூல் எழுத்தாளராக பணியாற்றினார்.
1977ல் யாழ் கல்வி வலயத்தில் ஆசிரிய ஆலோசகராக இருந்தார்.யாழ்ப்பாணம் உஸ்மானியாக் கல்லூரியிலும் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். 1981 ல் பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளராகி இரண்டு ஆண்டுகள் ஆசிரிய மாணவர்களுக்குத் தமிழ் போதித்தார். 1984 முதல் 1988 வரையும் யாழ் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகவும், 1989லிருந்து 1991 வரை சிரேஷ்ட விரிவுரையாளராகவும் பணியாற்றினார். 1992ல் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறை ஆரம்பிக்கப்பட்ட போது மௌனகுரு அதில் பங்கேற்று விரிவுபடுத்தினார். நுண்கலைத் துறைத்தலைவராக கலை, பண்பாட்டுத்துறை பீடாதிபதியாக, பதில் துணைவேந்தராக, சுவாமி விபுலானந்தர் இசை நடன வளாகத்தின் இணைப்பாளராக நூலகக் குழுத்தலைவராக, தமிழ்ச் சங்கப் போஷகராக பல தளங்களில் பணியாற்றினார்.
தனிவாழ்க்கை
மௌனகுருவின் மாணவியாக பயின்றவர் சித்ரலேகா. கொழும்பில் வாழ்ந்த காலத்தில் சித்ரலேகாவை மௌனகுரு மணம்புரிந்துகொண்டார். சித்திரலேகா மட்டக்களப்பில் வாழ்ந்த தமிழறிஞரும், சமூகத் தொண்டருமான திரு. பி. வி. கணபதிப்பிள்ளையின் மூத்தமகள். இலங்கைப் பல்கலைக்கழகம் - கொழும்பு வளாகத்தின் தமிழ்த்துறைச் சிறப்புப் பட்டதாரி. அக்காலத்தில் இலங்கை வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்தவர். மௌனகுரு- சித்ரலேகா இணையருக்கு ஒரு மகன், சித்தாந்தன்.
அரசியல் வாழ்க்கை
பள்ளிநாட்களிலேயே மௌனகுரு தமிழரசுக் கட்சியின் அரசியலில் ஈடுபாடு கொண்டு சட்டமறுப்புப் போராட்டங்களில் பங்குபெற்றார்.வந்தாறு மூலையிலிருந்து இரண்டாயிரம் மாணவர்களைத் திரட்டி மட்டக்களப்பு அலுவலகத்துக்கு ஊர்வலமாகச் சென்று பகிரங்க பிரம்படி தண்டனை பெற்றார். சட்டமறுப்புப் போராட்டங்களை நடத்திய, மட்டக்களப்பு தமிழ் மாணவ மன்றத் தலைவராக இருந்து செயற்பட்டார். ’தெருவெல்லாம் தமிழ் முழக்கம்' - இயக்கத்து உறுப்பினராகவும் இருந்தார். இவ்வியக்கம் ஊர் ஊராகச் சென்று பாடல்களால் தமிழ் உணர்வூட்டியது. கவிஞர் காசிஆனந்தன், முழக்கம் முருகப்பா ஆரையூர் அமரன், மாஸ்டர் சிவலிங்கம், வித்துவான் சா.இ. கமலநாதன் என்று பலர் அதில் செயல்பட்டனர். கொழும்பு சென்றபின் மௌனகுரு இடதுசாரி இயக்கங்களின் ஆதரவாளராக மாறிச் செயல்பட்டார். பேராதனை பல்கலைக்கழக வளாகத்தி நிகழ்ந்த மார்க்ஸிய வகுப்புகளுக்குச் சென்ற மௌனகுரு க.கைலாசபதிக்கு அணுக்கமான மாணவரானார். வியட்நாம் மீது அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக பேராதனையிலிருந்து கண்டிக்கு சென்ற பாதயாத்திரையில் முன்னணிப் பங்கெடுத்தார்.
ஆசிரியப்பணியில் நுழைந்ததும் தொழிற்சங்கச் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டார். தோழர் கிருஷ்ணன்குட்டி ,கவிஞர் சுபத்திரன், சாருமதி முதலானோருடன் இணைந்து சமூகப்பணிகளிலும் ஈடுபட்டார்.
இலக்கியவாழ்க்கை
கல்லூரி நாட்களில் கவிதையெழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்த சி.மௌனகுரு ’பட்டப்பகலில் பாவலர்க்குத் தோன்றுவது' என்ற தலைப்பில் நிகழ்ந்த கவியரங்கில் வாசித்த கவிதையில் ஈழத் தமிழர் தனிநாடு பெற்று, படை கொண்டு புலிக் கொடியுடன் வாழ்வதாக பாடி முதல் பரிசு பெற்றார். அப்போது நிகழ்ந்த சிறுகதைப் போட்டியில் ’சலனம்' என்ற சிறுகதைக்கு மூன்றாம் பரிசு பெற்றார்.
நிகழ்த்துகலை பங்களிப்பு
மெளனகுருவின் தந்தையும் கிராமியக் கலைகளில் பயிற்சி கொண்டவர். அவரிடமிருந்து நிகழ்த்துகலைகள் மேல் மௌனகுரு ஆர்வமும் அடிப்படைக் கல்வியும் கொண்டார். கல்லூரியில் நிகழும் நாடகங்களில் முக்கிய பாத்திரங்களையேற்று நடித்து சிறந்த நடிப்புக்கான பரிசுகளைப் பலமுறை வென்ற மௌனகுரு கல்லூரியில் அரங்கேற்றிய பாசுபதம் கூத்தில் சிவவேடன் வேடமேற்றதை கண்டு கவரப்பட்ட பேராசிரியர் சு.வித்தியானந்தன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் திறந்த வெளியரங்கில் 1959இல் மேடையேற்றினார். பேராதனை பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் 1962ல் கர்ணன்போர் கூத்தை நடத்தி அதி கர்ணனாக நடித்தார். 1963ல் நொண்டிநாடகத்தில் செட்டியாகவும், 1965ல் இராவணேசன் நாடகத்தில் இராவணன் ஆகவும் நடித்தார். 1966ல் இவரது பல்கலைக்கழக வாழ்வு நிறைவுற்ற போதிலும் அப்போது தயாரான 'வாலிவதை' -கூத்துக்கும் உதவி செய்து விட்டே வெளியேறினார்.
ஈழத்துக் கூத்து ஆய்வுகளி மையமான திகழ்ந்த பேராசிரியர் சு.வித்தியானந்தனுக்குத் துணையாக மௌனகுரு கூத்து நூல்களைச் சுருக்கி வடிவமைத்தார். புதிய கூத்துக்களைக் எழுதினார். மட்டக்களப்பில் அண்ணாவிமாரைத் தேடிப்பிடித்து கொடுத்தார். மாணவர்களுக்குக் கூத்தாட்டம் பழக்கினார். கூத்தாட்ட அலங்கார உடைகள் வடிவமைக்க உதவினார்.
கொழும்பில் ஆசிரியப் பணியில் இருக்கையில் தீண்டாமைக்கு எதிராக மௌனகுரு முயற்சியால் 'சங்காரம்' எனும் நாடகம் தயாரிக்கப்பட்டது. 1969ல் மட்டக்களப்பில் உருவான நாடக சபா மூலம் கொழும்பு லும்பினி அரங்கில் தொழிற்சங்கவாதி திரு.எஸ். சண்முகதாசன் தலைமையில் சங்காரம் மேடையேற்றப்பட்டு கூத்து மரபில் புதுமாற்றம் என்று விமர்சகர்களால் வரவேற்கப்பட்டது.
கொழும்பில் இருக்கையில் இலங்கை வானொலியில் 'சங்கநாதம்' எனும் இளைஞர் நிகழ்ச்சியையும் 'கிராம சஞ்சிகை' எனும் நிகழ்ச்சியையும் தயாரிக்கும் பொறுப்பு மௌனகுருவுக்குக் கிடைத்தது. வானொலியில் உரைச்சித்திரங்கள் சிறப்புச் சொற்பொழிவுகள் எழுதினார். வானொலிக்கு மெல்லிசைப்பாடல்களை எழுதினார். ’சின்னச் சின்னக் குருவிகள்’ ’சேருவோம் ஒன்று சேருவோம்’ என்னும் பாடல்கள் புகழ்பெற்றவை.
திருமதி கார்த்திகா கணேசருடன் இணைந்து வடமோடி ஆட்டங்களையும் பரத நாட்டிய ஆட்டங்களையும் கலந்து 'இராமயணம்' நாட்டிய நாடகத்தை உருவாக்கினார். தாசீசியஸ், சுந்தரலிங்கம், சிவானந்தன், சுஹைர் அப்துல் ஹமீத் போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றினார். தாசீசியஸ் தயாரித்தளித்த புதியதொரு வீடு, கந்தன் கருணை ஆகிய நாடகங்களில் பங்கேற்று நடித்தார்.1971லிருந்து 1977 வரை இலங்கைக் கலைக் கழகத்தின் நாடகக் குழுவிலும் இசைக்குழுவிலும் உறுப்பினராக இருந்தார். தர்ம பூரீபண்டார நாயக்கா, சைமன் நவவத்தேகம, தர்மசேன பத்திரராஜ, சுனில் ஆரியரத்தின, சுனில் விஜயறிவர்த்தன, AJ. குணவர்த்தனா முதலிய சிங்கள கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றினார்
மட்டக்களப்பு வடமோடி தாளக்கட்டை அடிப்படையாகக் கொண்டு திரு.பரராசசிங்கம், பேராசிரியர் மகேஸ்வரன் ஆகியோருடன் இணைந்து யுனெஸ்கோ (Unesco) வுக்காக ஒருபாடல் தயாரித்து வெளியிட்டார்.அகில இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க நாடகக் குழுவின் செயலவை உறுப்பினராகவும் தேர்வுசெய்யப்பட்டு பணியாற்றினார்.
1979ல் யாழ் பல்கலைக்கழகத்தில் புதியதொரு வீடு'நாடகம் நடிக்கப்பட்டு பல கிராமங்களுக்கும் அது கொண்டு செல்லப்பட்டது. யாழ்ப்பாணத்தில் செயற்பட்டு வந்த நாடக அரங்குக் கல்லூரியுடன் இணைந்து நடிகர்களுக்கு கூத்துப் பயிற்சி அளித்தார். நாடக அரங்குக் கல்லூரியின் சார்பாக 'சங்காரம், அபசுரம், குருஷேத்திரோபதேசம்' ஆகிய நாடகங்கள்த் தயாரித்தார்.யாழ்ப்பாண அவைக்காற்று கலைக்கழகத்துடன் இணைந்து அதி மானிடன், தலைவர் ஆகிய நாடகங்களை உருவாக்கினார்.
1983 ல் யாழ்ப்பாணக் கலாசாரப் பேரவையுடன் யாழ்.பல்கலைக்கழக நுண்கலைத்துறை இணைந்து நடத்திய பெரிய அளவிலான நாடகப் பயிற்சிப் பட்டறை அமைப்பாளராக இருந்து செயற்பட்டார். விடுமுறை நாட்களில் (சனி, ஞாயிறு) ஏறத்தாழ ஒருவருடம் இப்பயிற்சிக் பட்டறை நிகழ்ந்தது. இதன் மூலம் இன்றைய பல முன்னணி நாடகக் கலைஞர்கள் யாழ்ப்பாணத்தில் உருவாயினர். அங்கிருந்த காலங்களில் பல ஊர்களிலும் நாடகப் பயிற்சிப் பட்டறைகளும், எழுத்துப் பயிற்சிப் பட்டறைகளும் நாடகக் கருத்தரங்குகளும் எற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வந்தன. யுத்தத்தின் சூழலுக்குள்ளும் குண்டுகள் வெடிப்பிற்குள்ளும் நாடக முயற்சிகளும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது ஒரு குறிப்பிடத்தக்க விடயம். சங்காரம், இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம், சடங்கிலிருந்து நாடகம் வரை, தப்பி வந்த தாடி ஆடு, ஈழத்து நாடக வரலாற்றில் யாழ் மஹாஜனக் கல்லூரி, ஏழு நாடகங்கள், மெளனகுருவின் மூன்று நாடகங்கள் ஆகியன யாழ்ப்பாணத்திலிருந்த போது வெளியிடப்பட்ட இவரது நூல்கள். மட்டக்களப்பு - புதுப்பொலிவு இவரது வாழ்வில் வந்தாறுமூலை எப்போதும் ஒரு தனித்த இடத்தைப் பெற்று வந்துள்ளது. அங்குள்ள மத்திய மகாவித்தியாலயத்திலிருந்தே இவர் பல்கலைக்கழகம் தெரிவானவர். பிற்பட்ட காலத்தில் இதுவே கிழக்குப் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. இது ஆங்கில மொழி மூல விவசாய விஞ்ஞானம், அரபு, இஸ்லாமிய பீடங்களை உள்ளடக்கிய தேசியப் பல்கலைக் கழகமாகவே வடிவமைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. கிழக்குப் பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களதும், இந்துக்களதும் அபிலாசைகள் சிறிதேனும் கவனத்திற் கொள்ளப்படவில்லை. கிழக்குப் பல்கலைக்கழகமாகத் தொடங்கி பத்து ஆண்டுகளுக்குப்பின் 1992இல் தமிழ் மொழித்துறையை ஆரம்பிக்கும் அழுத்தங்கள் ஏற்பட்டபோது அத்துறைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இவரும் இவரது துணைவியாருமே இத்துறையை வளர்க்கப் பொருத்தமானவர்கள் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. அதுவே இறுதியாகவும் கை கூடிற்று. யாழ். மட்டக்களப்பு பிரயாணம், தகவல் தொடர்புகள் தடைப்பட்டிருந்த ஒரு கால கட்டத்தில் மிகவும் சிரமப்பட்டு இவர்களது விண்ணப்பம் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டது நினைவிலுள்ளது.
நூல்கள்
- நாடகம் நான்கு (நாடகம்) (1980) இணை ஆசிரியர்
- 20ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம் (1984) இணை ஆசிரியர்
- சடங்கிலிருந்த நாடகம் வரை (1985)
- தப்பி வந்த தாடி ஆடு. (1987) (நாடகம்)
- மெளனகுருவின் மூன்று நாடகங்கள் (1987)
- ஈழத்தத் தமிழ் நாடக மரபில் யாழ்ப்பாண மகாஜனக் கல்லூரி. (1989) (பாவலர் தெ.அ.துரையாப்பிள்ளை நினைவுப் பேருரை)
- பழையதம் புதியதம் (1992)
- சுவாமி விபுலாநந்த அடிகளாரின் கலை இலக்கியக் கொள்கைகள். (1992)(சுவாமி விபுலாநந்ந அடிகளாரின் நினைவுப் பேருரை.)
- சுவாமி விபுலாநந்தர் காலமும் கருத்தும். (1992)
- சங்காரம் (நாடகம்) ஆற்றுகையும் தாக்கமும் (1993)
- ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு (1993
- கால ஓட்டத்தினூடே ஒரு கவிஞன் நீலாவாணன் (1996)
- நடிப்பு முறைமைகள் பற்றிய எண்ணக்கருக்கள் (1996)
- கலை இலக்கியக் கட்டுரைகள் (1997)