first review completed

அவள் கிச்சன்: Difference between revisions

From Tamil Wiki
(Page Created: Para Added: Images Added: Link Created: Proof Checked.)
 
No edit summary
Line 1: Line 1:
[[File:Aval Kitchen.jpg|thumb|அவள் கிச்சன் இதழ்]]

அவள் கிச்சன், (2013) விகடன் குழுமத்தின் சார்பாக வெளிவந்த மாத இதழ். சமையல் குறிப்புகள், சுகாதாரம், திருவிழாச் சமையல்கள், பண்டிகை காலச் சமையல்கள் எனப் பல்வேறு வகைச் சமையல் குறிப்புகளை, ரெசிப்பிகளை வெளியிட்டது. ஜூன், 2020-ல் நின்று போனது
அவள் கிச்சன், (2013) விகடன் குழுமத்தின் சார்பாக வெளிவந்த மாத இதழ். சமையல் குறிப்புகள், சுகாதாரம், திருவிழாச் சமையல்கள், பண்டிகை காலச் சமையல்கள் எனப் பல்வேறு வகைச் சமையல் குறிப்புகளை, செய்முறைகளை வெளியிட்டது. ஜூன், 2020-ல் நின்று போனது

== வெளியீடு ==
== வெளியீடு ==
Line 7: Line 7:

== உள்ளடக்கம் ==
== உள்ளடக்கம் ==
தமிழ் நாட்டுச் சமையல்கள், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பிரபலமான சமையல் பண்டங்களின் செய்முறைக் குறிப்புகள், வெளிநாட்டில் புகழ்பெற்ற சமையல் குறிப்புச் செய்முறைகள், ரெசிப்பிஸ், ஆரோக்கியமான உணவு வகைகள் எனப் பல்வேறு செய்திகளைத் தாங்கி அவள் கிச்சன் இதழ் வெளிவந்தது. அட்டையின் முகப்பில் ‘அம்மாவின் கைமணம்’ என்ற வாசகம் இடம் பெற்றது.
தமிழ் நாட்டுச் சமையல்கள், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பிரபலமான சமையல் பண்டங்களின் செய்முறைக் குறிப்புகள், வெளிநாட்டில் புகழ்பெற்ற சமையல் குறிப்புச் செய்முறைகள், ஆரோக்கியமான உணவு வகைகள் எனப் பல்வேறு செய்திகளைத் தாங்கி அவள் கிச்சன் இதழ் வெளிவந்தது. அட்டையின் முகப்பில் ‘அம்மாவின் கைமணம்’ என்ற வாசகம் இடம் பெற்றது.

ஹோட்டல் சுவையோடு வீட்டிலேயே சமைப்பது எப்படி, அல்வா முதல் குல்ஃபி வரை கேரட்டைப் பயன்படுத்தி எப்படி இனிப்பு வகைகளைச் செய்வது, குக்கரில் கேக் செய்வதன் நுட்பங்கள், விதம் விதமாகச் சமோசாக்கள் செய்யும் வழிமுறைகள், புதுவகை தீபாவளிப் பலகாரங்கள் செய்முறை, விதம் விதமான உப்புமாக்கள், கான்டினென்டல் ரெசிப்பிகள், எலெக்ட்ரிக் ரைஸ் குக்கர் ரெசிப்பிக்கள், அரேபியன் ரெசிப்பிகள், பத்தியச் சமையல், சிறுதானியச் சமையல், பண்டிகை காலப் பலகாரங்கள், கிராமத்துச் சமையல்கள், செட்டிநாட்டு சமையல், கொங்குநாட்டுச் சமையல், உணவே மருந்து, சுவைக்கத் தூண்டும் சாட் வகைகள் என இதழ்தோறும் பல்வேறு ரெசிப்பிஸ்கள், உணவுத் தயாரிப்பு முறைகளைப் பற்றிய கட்டுரைகளை அவள் கிச்சன் இதழ் வெளியிட்டது.

Line 26: Line 26:
* [https://www.vikatan.com/avalkitchen அவள் கிச்சன் இதழ்]  

* [https://www.facebook.com/avalkitchen அவள் கிச்சன் ஃபேஸ்புக் பக்கம்]  

{{Ready for review}}
{{First review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 06:13, 9 March 2024

அவள் கிச்சன் இதழ்

அவள் கிச்சன், (2013) விகடன் குழுமத்தின் சார்பாக வெளிவந்த மாத இதழ். சமையல் குறிப்புகள், சுகாதாரம், திருவிழாச் சமையல்கள், பண்டிகை காலச் சமையல்கள் எனப் பல்வேறு வகைச் சமையல் குறிப்புகளை, செய்முறைகளை வெளியிட்டது. ஜூன், 2020-ல் நின்று போனது

வெளியீடு

அவள் கிச்சன் என்னும் அவள் விகடன் கிச்சன், சமையல் குறிப்புகளையும், சுகாதாரக் குறிப்புகளையும், ஆரோக்கியமாகச் சமைப்பது பற்றிய தகவல்களையும் வெளியிட்ட மாத இதழ். விகடன் குழுமத்திலிருந்து 2013 முதல் வெளிவந்தது. அவள் கிச்சன் ஜூன் 2020 இதழின் விலை ரூபாய் 80/-

முட்டை மிட்டாய் செய்முறை

உள்ளடக்கம்

தமிழ் நாட்டுச் சமையல்கள், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பிரபலமான சமையல் பண்டங்களின் செய்முறைக் குறிப்புகள், வெளிநாட்டில் புகழ்பெற்ற சமையல் குறிப்புச் செய்முறைகள், ஆரோக்கியமான உணவு வகைகள் எனப் பல்வேறு செய்திகளைத் தாங்கி அவள் கிச்சன் இதழ் வெளிவந்தது. அட்டையின் முகப்பில் ‘அம்மாவின் கைமணம்’ என்ற வாசகம் இடம் பெற்றது.

ஹோட்டல் சுவையோடு வீட்டிலேயே சமைப்பது எப்படி, அல்வா முதல் குல்ஃபி வரை கேரட்டைப் பயன்படுத்தி எப்படி இனிப்பு வகைகளைச் செய்வது, குக்கரில் கேக் செய்வதன் நுட்பங்கள், விதம் விதமாகச் சமோசாக்கள் செய்யும் வழிமுறைகள், புதுவகை தீபாவளிப் பலகாரங்கள் செய்முறை, விதம் விதமான உப்புமாக்கள், கான்டினென்டல் ரெசிப்பிகள், எலெக்ட்ரிக் ரைஸ் குக்கர் ரெசிப்பிக்கள், அரேபியன் ரெசிப்பிகள், பத்தியச் சமையல், சிறுதானியச் சமையல், பண்டிகை காலப் பலகாரங்கள், கிராமத்துச் சமையல்கள், செட்டிநாட்டு சமையல், கொங்குநாட்டுச் சமையல், உணவே மருந்து, சுவைக்கத் தூண்டும் சாட் வகைகள் என இதழ்தோறும் பல்வேறு ரெசிப்பிஸ்கள், உணவுத் தயாரிப்பு முறைகளைப் பற்றிய கட்டுரைகளை அவள் கிச்சன் இதழ் வெளியிட்டது.

மெனு ராணி செல்லம் அளித்த ரெசிப்பி செய்முறைகள், செஃப் லக்ஷ்மி வெங்கடேஷ் அளித்த குறிப்புகள், சங்க காலச் சமையல், கிச்சன் கைடு, கிச்சன் டிபிஸ், ஃபுட் எக்ஸ்பர்ட்ஸ் புரொஃபைல் எனப் பல பகுதிகள் மாதம் தோறும் வெளியாகின.

விருதுகள்

அவள் விகடன் கிச்சன் யம்மி அவார்ட்ஸ் என்பதை அறிமுகம் செய்தது, சிறந்த சமையல் குறிப்புகளுக்கும், சமையல் கலைஞர்களுக்கும், சமையல் செய்முறைகளுக்கு விருதளித்துச் சிறப்பித்தது. வாழ்நாள் சாதனையாளர் விருது, சிறந்த சைவ ஹோட்டலுகான விருது, சிறந்த அசைவ ஹோட்டலுக்கான விருது, சிறந்த பாரம்பரிய உணவு விடுதிக்கான விருது, சிறந்த பிரியாணி ஹோட்டலுக்கான விருது எனப் பல பிரிவுகளில் விருதளித்தது.

நிறுத்தம்

தவிர்க்க முடியாத சூழல்களால் அவள் கிச்சன் இதழ் நிறுத்தப்பட்டது. ஜூன் 1, 2020 தேதியிட்ட இதழுக்குப் பிறகு அவள் கிச்சன் இதழ் வெளிவரவில்லை.

மதிப்பீடு

உணவு தயாரிப்பு மற்றும் சமையலுக்கென்றே தமிழில் வெளியான முதல் மாத இதழாக அவள் கிச்சன் இதழ் அறியப்படுகிறது.

உசாத்துணை

🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.