ஆர்.பொன்னம்மாள்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 10: Line 10:
ஆர். பொன்னம்மாள் இளமையிலேயே தோழிகளிடம் கதைகள் சொல்லும் வழக்கம் கொண்டிருந்தார். தோழி ருக்மிணியிடம் சொன்ன ஒரு கதையை அவர் ஊக்கப்படுத்தியதனால் எழுதி தமிழ்நாடு இதழ் நடத்திவந்த சிறுகதைப்போட்டிக்கு அனுப்பினார். 1957ல் இரட்டைப்பரிசு என்னும் அக்கதை பரிசுபெற்றது. அன்புமனம், இன்பரகசியம், விதி சிரித்தது, சந்தேகப்பேய், கண் திறந்தது போன்ற கதைகளை தமிழ்நாடு இதழிலேயே எழுதினார். அதன்பின் திருமணமாகி குழந்தைகள் ஆனபின் எழுதுவது நின்றுவிட்டது. நீண்ட இடைவேளைக்குப்பின் 1976ல் தினமணி வார இதழுடன் இணைந்து தமிழ்நாடு குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதைப்போட்டிக்கு கடவுளின் கருணை என்னும் கதையை அனுப்பி பரிசுபெற்றார்.  

மீண்டும் சிலகாலம் எழுதாமலிருந்த ஆர்.பொன்னம்மாள்  1983 ல் கோகுலம் சிறார் இதழ் நடத்திய சிறுகதைப்போட்டியில் கருணைவிழிகள் என்னும் கதைக்காக தங்கப்பதக்கம் பெற்றார். அதன்பின் தொடர்ச்சியாக குழந்தைகளுக்கான கதைகளும், ஆன்மிகக்கதைகளும்,பெண்களின் உலகம் சார்ந்த கதைகளும் எழுதத் தொடங்கினார்.
மீண்டும் சிலகாலம் எழுதாமலிருந்த ஆர்.பொன்னம்மாள்  1983 ல் கோகுலம் சிறார் இதழ் நடத்திய சிறுகதைப்போட்டியில் கருணைவிழிகள் என்னும் கதைக்காக தங்கப்பதக்கம் பெற்றார். அதன்பின் தொடர்ச்சியாக குழந்தைகளுக்கான கதைகளும், ஆன்மிகக்கதைகளும்,பெண்களின் உலகம் சார்ந்த கதைகளும் எழுதத் தொடங்கினார். கோகுலம் போன்ற சிறுவர் இதழ்களிலும் காமகோடி போன்ற ஆன்மிக இதழ்களிலும் தொடர்ந்து எழுதினார்.
 
ஆர்.பொன்னம்மாள் எழுதிய முதல் நூல் கடவுளின் கருணை சிறார் சிறுகதை தொகுதி பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அவருடைய மிகச்சிறந்த நூலாக ஆயிரம் பக்கங்களுக்குமேல் நீளும் பாண்டுரங்க மகிமை என்னும் நூல் கருதப்படுகிறது. கிரி டிரேடிங் கம்பெனி இந்நூலை வெளியிட்டிருக்கிறது. 
 
== நூல்கள் ==
 
====== சிறுவர் நூல்கள் ======
 
* கருணைவிழிகள்
* பறவைகள் பலவிதம்
* பொன்மனம்
* திருக்குறள் கதைகள்
* பாட்டி சொன்ன கதைகள்
 
====== பக்திநூல்கள் ======
 
* நாராயணீயம்
* தேவி திருவிளையாடல்
* கருடபுராணம்
* ஸ்ரீமத் பாண்டுரங்க விஜயம்
* பாண்டுரங்க மகிமை
* நாலாயிர திவ்ய பிரபந்த விளக்கம்
* பரமாச்சாரியாள் பாதையில்
* சிவலீலை
*

Revision as of 09:01, 24 March 2022

ஆர்.பொன்னம்மாள் (1937- ) தமிழ் ஆன்மிக எழுத்தாளர்.

பிறப்பு, கல்வி

ஆர்.பொன்னம்மாள் சென்னை திருவல்லிக்கேணியில் 21 மே 1937ல் ராமசுப்ரமணியம் லக்ஷ்மி இணையருக்கு பிறந்தார். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே கல்விகற்றார். பொருளாதார நெருக்கடியால் குடும்பம் கல்லிடைக்குறிச்சிக்கு இடம்பெயர்ந்த போது படிப்பு நின்றது. பின்னர் தானாகவே இதழ்களை படித்து இலக்கிய அறிமுகமும் மொழிப்பயிற்சியும் பெற்றார்.

தனிவாழ்க்கை

ஆர்.பொன்னம்மாள் 1958ல் ராமசுப்ரமணியத்தை மணந்தார். கணவரின் உதவியுடன் சம்ஸ்கிருதம், சோதிடம் ஆகியவற்றை கற்று அவற்றை தொழில் என வீட்டிலிருந்தே செய்தார்

இலக்கியவாழ்க்கை

ஆர். பொன்னம்மாள் இளமையிலேயே தோழிகளிடம் கதைகள் சொல்லும் வழக்கம் கொண்டிருந்தார். தோழி ருக்மிணியிடம் சொன்ன ஒரு கதையை அவர் ஊக்கப்படுத்தியதனால் எழுதி தமிழ்நாடு இதழ் நடத்திவந்த சிறுகதைப்போட்டிக்கு அனுப்பினார். 1957ல் இரட்டைப்பரிசு என்னும் அக்கதை பரிசுபெற்றது. அன்புமனம், இன்பரகசியம், விதி சிரித்தது, சந்தேகப்பேய், கண் திறந்தது போன்ற கதைகளை தமிழ்நாடு இதழிலேயே எழுதினார். அதன்பின் திருமணமாகி குழந்தைகள் ஆனபின் எழுதுவது நின்றுவிட்டது. நீண்ட இடைவேளைக்குப்பின் 1976ல் தினமணி வார இதழுடன் இணைந்து தமிழ்நாடு குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதைப்போட்டிக்கு கடவுளின் கருணை என்னும் கதையை அனுப்பி பரிசுபெற்றார்.

மீண்டும் சிலகாலம் எழுதாமலிருந்த ஆர்.பொன்னம்மாள் 1983 ல் கோகுலம் சிறார் இதழ் நடத்திய சிறுகதைப்போட்டியில் கருணைவிழிகள் என்னும் கதைக்காக தங்கப்பதக்கம் பெற்றார். அதன்பின் தொடர்ச்சியாக குழந்தைகளுக்கான கதைகளும், ஆன்மிகக்கதைகளும்,பெண்களின் உலகம் சார்ந்த கதைகளும் எழுதத் தொடங்கினார். கோகுலம் போன்ற சிறுவர் இதழ்களிலும் காமகோடி போன்ற ஆன்மிக இதழ்களிலும் தொடர்ந்து எழுதினார்.

ஆர்.பொன்னம்மாள் எழுதிய முதல் நூல் கடவுளின் கருணை சிறார் சிறுகதை தொகுதி பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அவருடைய மிகச்சிறந்த நூலாக ஆயிரம் பக்கங்களுக்குமேல் நீளும் பாண்டுரங்க மகிமை என்னும் நூல் கருதப்படுகிறது. கிரி டிரேடிங் கம்பெனி இந்நூலை வெளியிட்டிருக்கிறது.

நூல்கள்

சிறுவர் நூல்கள்
  • கருணைவிழிகள்
  • பறவைகள் பலவிதம்
  • பொன்மனம்
  • திருக்குறள் கதைகள்
  • பாட்டி சொன்ன கதைகள்
பக்திநூல்கள்
  • நாராயணீயம்
  • தேவி திருவிளையாடல்
  • கருடபுராணம்
  • ஸ்ரீமத் பாண்டுரங்க விஜயம்
  • பாண்டுரங்க மகிமை
  • நாலாயிர திவ்ய பிரபந்த விளக்கம்
  • பரமாச்சாரியாள் பாதையில்
  • சிவலீலை