under review

விச்சுளிப்பாய்ச்சல்: Difference between revisions

From Tamil Wiki
Line 19: Line 19:
“பாகொன்று சொல்லியைப் பார்த்தமை
“பாகொன்று சொல்லியைப் பார்த்தமை
யாலன்று பாண்டியன்முன்
யாலன்று பாண்டியன்முன்
நோகின்ற சிற்றிடை வேழம்
நோகின்ற சிற்றிடை வேழம்
கூத்தி கொடிவரையில்
கூத்தி கொடிவரையில்
சாகின்றபோது தமிழ் சேர்
சாகின்றபோது தமிழ் சேர்
அயன்றைச் சடையன்றன்மேல்
அயன்றைச் சடையன்றன்மேல்
மாகுன்றெனச் சொன்ன பாமாலை
மாகுன்றெனச் சொன்ன பாமாலை
யுந் தொண்டை மண்டலமே”
யுந் தொண்டை மண்டலமே”

Revision as of 16:35, 23 March 2022

விச்சுளிப்பாய்ச்சல் கழையாட்டத்தில் ஒரு ஆட்டம்.

பெயர்க்காரணம்

வில்லில் இருந்து விரைந்து செல்லும் அம்பு விச்சுளி. அவ்வாறு பாய்ந்து செல்லும் பறவை விச்சுளிபறவை. மீன் குத்திப் பறவையின் பெயர். சுள் என்றால் விரைந்து எனப் பொருள்.

வரலாறு

கழைக்கூத்தினுள் “விச்சுளிப் பாய்ச்சல்” இருந்ததாக தனிப்பாடல் கூறுகிறது. மரண அபாயம் மிக்கது. உயிரைப் பெரிதாக மதிக்காதவர்கள் மட்டுமே நிகழ்த்துவது. தொண்டை மண்டலம் புழல் கோட்டம் சடையநாத வள்ளல் விறலியர் வகுப்பினரை ஆதரித்து வந்தார். அதில் விச்சுளிப் பாய்ச்சல் அறிந்தவள் காமினி. மதுரை மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க அவள் அடுத்தடுத்து இரண்டு முறை விச்சுளிப் பாய்ச்சல் செய்து உயிர்விட்ட வரலாறை தனிப்பாடல்கள் வழி அறியலாம்.

கூத்து பற்றி

ஓரிடத்தில் இருந்து வெளியேறி மீண்டும் விண்ணேறி ஓரிடத்தில் தாவிப் பிடித்து பற்றுவது விச்சுளிப் பாய்ச்சல். கூத்தாடுபவர் கழை மீது ஏறி அதிலிருந்த படியே பல வித்தைகள் செய்து காட்டுவர். பின் யோகப் பயிற்சியால் மூச்சினை அடக்கித் தம் உடலின் பளுவை கயிற்றின் பளுவிற்கு சமன் செய்து கொண்டு வர வேண்டும். பின்னர், கயிற்றினின்று மேலே தாவி, பறவை போல சிறகு விரித்து முப்பது நொடிகளில் அந்திரத்தில் காட்டிய பின்னர் கணப்பொழுதும் யோசிக்காமல் கயிற்றுக்கு வந்து விட வேண்டும். இந்த அபாய வித்தையை ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல் செய்யக் கூடாது. மீறிச் செய்தால் மரணம் நிகழும் என்பது இவ்வித்தையப் பயிற்றுவிக்கும் ஆசான்களின் முதல் எச்சரிக்கை.

”உயர்ந்த மூங்கிலின் நுனியில் இருந்து கொண்டு தன் காதணியாகிய தோட்டை நழுவ நிட்டு அது நிலத்தில் விழுவதற்கு முன் கீழ் நோக்கிப் பாய்ந்து அதைத் தன் காதில் பற்றிக் கொண்டு முன்னைய நிலையில் இருப்பது.” என க.அ. ராமசாமிப்புலவர் தன் தமிழ்ப்புலவர் வரிசை நூலில் கூறியுள்ளார்.

தொண்டை மண்டலச் சதகம்

தொண்டை மண்டலத்தின் பெருமைகளைக் கூறும் நூறு பாடல்களில் முக்கியமான விச்சுளி வித்தையை விளக்கும் பாடல் 33வது பாடலாக உள்ளது.

“பாகொன்று சொல்லியைப் பார்த்தமை
யாலன்று பாண்டியன்முன்
நோகின்ற சிற்றிடை வேழம்
கூத்தி கொடிவரையில்
சாகின்றபோது தமிழ் சேர்
அயன்றைச் சடையன்றன்மேல்
மாகுன்றெனச் சொன்ன பாமாலை
யுந் தொண்டை மண்டலமே”

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.