உடையார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 5: Line 5:

== கதைச்சுருக்கம் ==
== கதைச்சுருக்கம் ==
தன் சிறியதந்தை மதுராந்தகன் என்னும் உத்தமசோழனுக்கு முடிசூட்டியபின் சோழநாடெங்கும் சுற்றிவருகிறார் பின்னாளில் ராஜராஜ சோழன் என முடிசூட்டிக்கொள்ளப்போகும் அருண்மொழித்தேவர். அப்போது  சிதம்பரம் நடராஜர் சன்னிதியில் திருஞானசம்மந்தரின் பதிகம் படிய ஒரு தாசியை கண்டு விரும்பி அவளை தன்னுடன் அழைத்துச்செல்கிறார். பின்னாளில் அவர் அவருடைய நான்காம் மனைவியாகிய பஞ்மான் தேவி ஆகிறார். தான் முடிசூட்டிக் கொண்டபின் ஓர் ஆலயம் அமைக்கவேண்டும் என்னும் கனவு ராஜராஜசோழனுக்கு இருக்கிறது. அதற்கான
தன் சிறியதந்தை மதுராந்தகன் என்னும் உத்தமசோழனுக்கு முடிசூட்டியபின் சோழநாடெங்கும் சுற்றிவருகிறார் பின்னாளில் ராஜராஜ சோழன் என முடிசூட்டிக்கொள்ளப்போகும் அருண்மொழித்தேவர். அப்போது  சிதம்பரம் நடராஜர் சன்னிதியில் திருஞானசம்மந்தரின் பதிகம் படிய ஒரு தாசியை கண்டு விரும்பி அவளை தன்னுடன் அழைத்துச்செல்கிறார். பின்னாளில் அவர் அவருடைய நான்காம் மனைவியாகிய பஞ்மான் தேவி ஆகிறார். தான் முடிசூட்டிக் கொண்டபின் ஓர் ஆலயம் அமைக்கவேண்டும் என்னும் கனவு ராஜராஜசோழனுக்கு இருக்கிறது. அதற்கான வரைபடங்களுடன் வந்து வெள்ளத்தில் மாட்டிக்கொண்டு அனிருத்த பிரம்மராயரால் மீட்கப்படும் ராஜராஜி என்னும் தலைக்கோலியான தாசி இன்னொரு கதாபாத்திரம். ராஜராஜசோழன் முடிசூட்டிக்கொண்டபின் பல்வேறு எதிர்ப்புகள், சிக்கல்களைச் சந்தித்து வென்று பெரியகோயிலை கட்டுகிறார்.
 
பெரிய  கோவிலைக் சிற்பி குஞ்சரமல்லர் தன் மாணவர்களுடன் களம்வரைந்து நார்த்தாமலையிலிருந்து பாறைகளை கொண்டு வந்து  பணியை தொடங்குகிறார். அதற்கு வரும் தடைகளை தன் மந்திரவல்லமையாலும் மதித்திறமையாலும் கருவூர்த்தேவர் வெல்கிறார். பல்வேறு சமூகங்களை ஒருங்கிணைத்து அப்பணியை முன்னெடுக்கவேண்டியுள்ளது. அவர்களுக்கிடையே பூசல்கள் உருவாகின்றன. கோயில்கட்ட நிதிப் பற்றாக்குறை உருவாகும்போது மேலைச்சாளுக்கிய நாட்டுடன் போர்மூண்டு பெரும் செல்வம் கொள்ளையாகவும் கப்பமாகவும் கிடைக்கிறது. கோயில் கட்டிமுடிக்கப்படும்போது சிவலிங்கத்தை நிறுவுவதில் ஆகமச் சிக்கல் உருவாக அதை கருவூர்த்தேவர் தீர்த்து வைக்கிறார்.
 
கோயிலில் 108 வகையான நாட்டிய கரணங்களை பஞ்சவன் மாதேவியை மாதிரியாகக்கொண்டு சிலை வடிக்கிறார்கள். 81 கரணங்கள் முடிந்த நிலையில் பாண்டிய ஆபத்துதவிகள் சிலர் ராஜராஜரைக் கொல்ல முயற்சிகிறார்கள், நச்சுத்தாக்குதலில் அரசரை காப்பாற்ற முயன்று காயம்பட்டு நோயுற்று உருக்குலைந்த பஞ்சவன்மாதேவி கோர உருவை அடைகிறார். கோயில் கட்டி முடித்தபின் அனைவருக்கும் உரிய முறையில் மறுகடன்கள் செய்யப்படுகின்றன. அனைத்து குலங்களுக்கும் இடமுள்ள வகையில் விழாக்கள் ஒருக்கப்படுகின்றன
 
கோயில் கட்டியதும் தன் மகன் ராஜேந்திர சோழனுக்கு முடி சூட்டிவிட்டு உடையார்குடி என பின்னாளில் பெயர்பெற்ற ஊருக்குச் சென்று அங்கே தனித்துவாழ்ந்து உயிர்விடுகிறார் ராஜராஜன். அவர் உடலில் இருந்து ஒளிவடிவமாக உயிர் பிரிந்து தஞ்சை கோவில் கோபுரத்திற்கு செல்கிறது. 

== உசாத்துணை ==
== உசாத்துணை ==

Revision as of 14:03, 23 March 2022

உடையார் ( ) பாலகுமாரன் எழுதிய வரலாற்று நாவல். ராஜராஜ சோழன் தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய பின்புலத்தில் சோழர்கால வாழ்க்கைமுறை, மதம் ஆகியவற்றை பேசுபொருளாக்கி எழுதப்பட்டது

எழுத்து,வெளியீடு

இந்நாவலின் முதல் பகுதி இதயம் பேசுகிறது வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் விசா பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. ஆறுபகுதிகள் கொண்ட இந்நாவலில் எஞ்சியவை நேரடியாக நூல்வடிவம் பெற்றன. பாலகுமாரன் இந்நாவலை சொல்லி பதிவுசெய்து எழுதவைத்ததாக குறிப்பிட்டிருக்கிறார்

கதைச்சுருக்கம்

உசாத்துணை