கழுகுமலை முருகன் கோயில்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
[[File:கழுகாச்சலமூர்த்தி கோயில்.png|thumb|கழுகாச்சலமூர்த்தி கோயில்]]
கழுகுமலை முருகன் கோயில் (கழுகாசலமூர்த்தி கோயில்) முருகனுக்கு அர்பணிக்கப்பட்ட குடைவரைக் கோயில்.  
கழுகுமலை முருகன் கோயில் (கழுகாசலமூர்த்தி கோயில்) முருகனுக்கு அர்பணிக்கப்பட்ட குடைவரைக் கோயில்.  



Revision as of 16:00, 21 March 2022

கழுகாச்சலமூர்த்தி கோயில்

கழுகுமலை முருகன் கோயில் (கழுகாசலமூர்த்தி கோயில்) முருகனுக்கு அர்பணிக்கப்பட்ட குடைவரைக் கோயில்.

அமைவிடம்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியிலிருந்து 22 கிமீ தொலைவில் கழுகுமலை பேரூராட்சியில் அமைந்துள்ள கோயில். ஊரின் மையப் பகுதியிலிருந்து 1 கி.மீ. தொலைவிலுள்ளது.

பெயர்க்காரணம்

சம்பாதி என்ற கழுகு முனிவர் முருகனை வழிபட்டதால் இந்த ஊர் ‘கழுகு மலை’ என்று பெயர் பெற்றது.

அமைப்பு

கோவிலின் கருவறையும், அர்த்த மண்டபமும் கழுகு மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ள குகைவரைக்கோயில். மலையே கோபுரமாக உள்ளது. இக்கோயில் மூலவராக முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோர் உள்ளனர். கழுகாச்சலமூர்த்தி மேற்கு பார்த்தும், வள்ளி தெற்கு பார்த்தும் , தெய்வானை வடக்கு பார்த்தும் உள்ளனர். நான்கு அடி உயரத்தில் கழுகாச்சலமூர்த்தி திருமேனி உள்ளது. முருகனுக்கும் சிவனுக்கும் தனி பள்ளியறை உள்ளது.

சிற்பங்கள்

கழுகாச்சலமூர்த்தி முகம் ஒன்று, கரம் ஆறு, தன் இடக்காலை மயிலி கழுத்திலும் வலது காலை தொங்கவிட்டும் கையில் கதிர்வேலுடன் காட்சி தருகிறார். பிற கோயில்களைப்போல் அசுரன் மயிலாக அல்லாமல் இந்திரன் மயிலாக உள்ளார். இத்தலத்தில் குருவும், செவ்வாயும் இருப்பதால் மங்கள ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது.

சிறப்புகள்

அருணகிரிநாதர் தமது திருப்புகழில் கழகுமலை முருகனைப் பாடியுள்ளார். கந்த புராணத்தின் ஆசிரியர் காச்சியப்பர், குமரன் மேற்கு முகமாக உள்ள தலங்கள் மூன்று என்றும் அதில் ராஜபோகமாக வீற்றீருக்கும் தலம் கழுகுமலை என்கிறார்.

கழுகுமலை முருகன் கோயில் எதிரே எட்டயாபுரம் சமஸ்தான மன்னரின் சிறு அரண்மனை அமைந்துள்ளது. இக்கோவிலிலுள்ள முருகன் எட்டையபுர மன்னர்களின் குலதெய்வமாக வழிபடப்பட்டார். இம்மன்னர்களின் திருப்பணிகள் பல இக்கோவிலில் உள்ளன.

திருவிழா

வைகாசி விசாகத்தன்று வசந்தமணடபம் பத்து நாள் விழாவக்கக் கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டியில் பதின்மூன்று நாளும், தைப்பூசத்தில் பத்து நாளும், பங்குனி உத்திரம் பதின்மூன்று நாளும் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

உசாத்துணை