under review

சந்திரா சரவணமுத்து: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(Added First published date)
 
Line 40: Line 40:
* [https://noolaham.net/project/75/7475/7475.pdf "இசை நாடகக் கூத்து - மூத்த கலைஞர் வரலாறு" செல்லையா - மெற்றாஸ்மயில்]
* [https://noolaham.net/project/75/7475/7475.pdf "இசை நாடகக் கூத்து - மூத்த கலைஞர் வரலாறு" செல்லையா - மெற்றாஸ்மயில்]
*[https://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE,_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81 ஆளுமை சந்திரா சரவணமுத்து நூலகம்]
*[https://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE,_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81 ஆளுமை சந்திரா சரவணமுத்து நூலகம்]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|15-Nov-2022, 13:38:27 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:நாடகக் கலைஞர்கள்]]
[[Category:நாடகக் கலைஞர்கள்]]

Latest revision as of 16:35, 13 June 2024

சந்திரா சரவணமுத்து (நன்றி: செல்லையா மெற்றாஸ்மயில்)

சந்திரா சரவணமுத்து (ஆகஸ்ட் 12, 1939) ஈழத்து இசை நாடகக் கலைஞர். நாடகங்களில் நடனம் ஆடினார். இந்தியாவிலும், இலங்கையிலும் நாடகங்களில் நடித்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

கேரள மாநிலம் திரிசூரில் ஆகஸ்ட் 12, 1939-ல் சந்திரா பிறந்தார். பொள்ளாச்சி மிஷன் பாடசாலையில் ஐந்து ஆண்டுகள் பயின்றார். சந்திராவின் தந்தை இசையில் ஆர்வம் கொண்டவர், புல்லாங்குழல் வாசிப்பவர். சந்திராவையும் அவர் சகோதரியையும் சிறு வயது முதலே இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள், நாட்டியங்கள் பார்க்க தந்தை அழைத்துச் சென்றார். சந்திரா இயல்பாகவே பாடும் திறனுடையவர். பத்து வயது முதல் கோயமுத்தூரிலுள்ள 'பாய்ஸ் கம்பெனி'யில் (ஐயப்ப தமிழ் நாடக சபா) சேர்ந்து பரத நாட்டியம், நாடகம் பயின்றார். நாடகங்களில் நடித்தார். இலங்கைக்கு நாடகம் நடிக்கச் சென்றபோது அங்கு நாடகம் நடித்து வந்த ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞரான வே. சரவணமுத்துவை மணந்தார். மஞ்சத்தடி இணுவிலில் வாழ்ந்தார்.

கலைவாழ்க்கை

தன் 11 வயதில் சந்திரா சீதா கல்யாணத்தில் சிறு பாத்திரம் தாங்கி நடித்து நாடக உலகில் பிரவேசித்தார். சந்திராவும் சகோதரியும் மாடன் தியேட்டரில் படம் நடிப்பதற்காக சேலம் செனறார்கள். அங்கே லஷ்மி விஜயம் என்ற படத்தில் குழுநடனத்தில் ஆடினார். சிறு கட்டங்களில் நடித்தார். அதன் பின் பொள்ளாச்சி நகரிலுள்ள சிறு நாடக கம்பெனி ஒன்றில் இணைந்து நாடகம் நடித்து வந்தார். 1949-ல் சின்னத்துரை சந்திராவையும், சகோதரியையும் இலங்கைக்கு நாடகங்களில் நடனத்திற்காக அழைத்து வந்தார். நாடகங்கள், நடனங்கள் போன்றவற்றில் இசையமைத்து கொண்டிருந்த சரவணமுத்துவை அங்கு சந்தித்தார்.

சரவணமுத்துவை திருமணம் செய்து கொண்ட பின் முப்பத்தியைந்து ஆண்டுகள் இலங்கையில் இருவரும் சேர்ந்து பல்வேறு நாடகங்களில் நடித்தனர். சந்திரா சரித்திர நாடகங்களும் சமூக நாடங்களும் நடித்து வந்தார். சந்திரா செல்லமுத்து நடித்த சமூக நாடகமான வீரமைந்தன் மனோகரா தியேட்டரில் அரங்கேறியபோது பாராட்டுக்களைப் பெற்றார்.

இணைந்து நடித்தவர்கள்

பாராட்டுக்கள்

  • வீரமைந்தன் நாடகத்திற்காக 'ரசிக ரஞ்சன சபா' மூலம் கலையரசு சொர்ணலிங்கம் நற்சான்றிதழ்கள், பரிசில்கள் வழங்கிப் பாராட்டினார்.

நடித்த நாடகங்கள்

  • நந்தனார் - வேதியன் மனைவி
  • சத்தியவான் சாவித்திரி - சாவித்திரி
  • வள்ளி திருமணம் - வள்ளி
  • ஸ்ரீவள்ளி - வள்ளி
  • பவளக்கொடி- அல்லி, பவளக்கொடி
  • கண்ணகி - கண்ணகி, மாதவி
  • சம்பூர்ண ராமாயணம் - சீதை
  • நல்லதங்காள் - நல்லதங்காள்
  • அசோக்குமார் - காஞ்சனா
  • ஞானசெளந்தரி - ஞானசெளந்தரி
  • அரிச்சந்திரா - சந்திரமதி
  • பாமாவிஜயம் - ருக்மணி
  • வீரமைந்தன்
  • சங்கிலியன்
  • அத்தைமகள்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:38:27 IST