கடல்புறா: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 13: Line 13:

== வரலாற்றுப்பின்புலம் ==
== வரலாற்றுப்பின்புலம் ==
முதலாம் குலோத்துங்க சோழன் ( 1070 -1122 ) அநபாயன் என கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறார். சோழ இளவரசிக்கு வேங்கி நாட்டை ஆண்ட கீழைச் சாளுக்கிய மன்னன் ராஜராஜ நரேந்திரனின் மகனாக கங்கைகொண்ட சோழபுரம் அரண்மனையில் பிறந்த இவரை இராசேந்திர சோழர் வாரிசாக தத்தெடுத்துக்கொண்டார் என கலிங்கத்துப்பரணி குறிப்பிடுகிறது. ஆனால் ராஜேந்திரசோழன் மறைந்தபின் இளவரசனாகிய அநபாயன் ஆட்சிக்கு வரவில்லை. ராஜேந்திர சோழனின் இன்னொரு மகன் அதிராஜேந்திரனுக்குபின் பொயு 1070 ல் குலோத்துங்க சோழன் என்னும் பெயரில் ஆட்சிக்கு வந்தார். அதிராஜேந்திரன் நோயாளியாக இருந்தமையால் அநபாயன் தத்தெடுக்கப்பட்டிருக்கலாம். அதிராஜேந்திரன் மிகச்சில ஆண்டுகளே அரசராக இருந்தார்.
முதலாம் குலோத்துங்கனின் காலத்தில் சோழநாட்டு எல்லைகள் மிகப்பெரியதாக அகன்றிருந்தன. எனவே  எல்லைநாடுகளில் எல்லாம் போர்கள் நிகழ்ந்தன. உள்நாட்டில் வலங்கை இடங்கை பூசல்கள் உருவாயின.  ஆனால் சோழர்காலத்தின் சிறந்த மன்னர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இளவரசன் ராஜேந்திர சோழன், அரையன் காளிங்கராயர், சேனாதிபதி இருங்கோவேள், அரையன் சயந்தன் கருணாகரப் பல்லவன் உடையன் ஆதித்தன், அருள்மொழி ராஜாதிராஜ வானதிராயர்,  அழகிய மணவாள நம்பி, ராஜ ராஜ மதுராந்தகன் ஆகிய ஆற்றல்மிக்க படைத்தளபதிகள் இவருக்கு இருந்தனர். சாளுக்கியநாடு, சேரநாடு, ஈழம்,வெங்கி ஆகியநாடுகளை போரில் வென்று அடக்கினார்.
குலோத்துங்கன் இரண்டு கலிங்கப்போர்களை நடத்தினார். சோழநாட்டுக்கு அணுக்கமான வெங்கியை கைப்பற்ற கலிங்கர்கள் முயன்றபோது சோழர்படைகள் இளவரடர் விக்ரம சோழன்  தலைமையில் காளிங்கராயர், கருணாகர தொண்டைமான் துணைவர படைகொண்டு சென்று கலிங்கர்களை வென்று துரத்தினர். இரண்டாவது கலிங்கப்போர் கருணாகரப் பல்லவன், அரையன் காளிங்கராயர், அரையன் ராஜ நாராயணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இப்போரைப் பற்றி ஜெயங்கொண்டார் எழுதிய கலிங்கத்துப் பரணி விரிவாக பாடுகிறது. இப்போரில் கலிங்கம் முழுமையாக அழிக்கப்பட்டதாகச் சொல்கிறது.

== கதைச்சுருக்கம் ==
== கதைச்சுருக்கம் ==

Revision as of 00:50, 19 March 2022

கடல்புறா
கடல்புறா குமுதம் ஓவியம் லதா
கடல்புறா

கடல்புறா (1974 ) சாண்டில்யன் எழுதிய வரலாற்று சாகச நாவல். கலிங்கத்துப் பரணி குறுங்காவியத்தின் கதைநாயகனாகிய கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தை வென்ற பின்னணியில் இந்நாவல் அமைந்துள்ளது

எழுத்து, வெளியீடு

கடல்புறா 1974ல் குமுதம் இதழில் தொடராக வெளிவந்தது. வானதி பதிப்பத்தால் நூலாக்கப் பட்டது.

ஆதாரங்கள்

முன்னுரையில் சாண்டில்யன் ‘போஜன் எழுதிய 'யுக்தி கல்பதரு" என்ற மரக்கல அமைப்புபற்றிய நூல், ராசிரியர் ராதாமுகுத் முகர்ஜி எழுதிய 'இந்தியன் ஷிப்பிங்" என்ற நூல், கடாரத்தின் சரித்திரம் மற்றும் சைலேந்தர்களின் வம்சாவளி ஆகியவற்றைச் சொல்லும் டாக்டர் மஜும்தாரின் ஸ்வர்ணத்வீபம், வீரராஜேந்திரன் காலத்தில் ஏற்பட்ட கடாரப் போரப் பற்றிய சில குறிப்புகளை அளிக்கும் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, டாக்டர் எஸ். கிரிஷ்ணசாமி ஐயங்கார், திரு. பி.டி.ஸ்ரீனிவாச ஐயங்கார் ஆகியோரின் வரலாற்று நூல்கள் ஆகியவற்றை ஆதாரமாக கொண்டதாகச் சொல்கிறார்இவர்கள் வரலாற்று நூல்களில்லிருந்தும் எடுத்துக் கொண்டேன்.

’முதலாம் குலோத்துங்கனாக முடி சூடிய அநபாயன் கி.பி. 1063வது வருஷத்திலிருந்து 1070ம் வருஷம் வரை ஸ்ரீவிஜய சாம்ராஜ்ய அரியணைக்கு நடந்த போட்டியைத் தீர்ப்பதிலும் அங்கு அமைதியை நிலை நிறுத்துவதிலும் ஈடுபட்டிருந்தான். 1077வது வருஷத்தில் தமிழர் தூது கோஷ்டியொன்று சீனாவை அடைந்தது. அதன் தலவன் பெயர் 'தேவகுலோ." இந்த தேவகுலோ என்ற சொற்கள் குலோத்துங்கனைக் குறிக்கும்’ என்று சாண்டில்யன் குறிப்பிடுகிறார். குலோத்துங்கனின் தளபதி கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தை வென்ற கதையைச் சொல்லும் கலிங்கத்துப் பரணி நூலும் தனக்கு ஆதாரமாகியது என்கிறார்

வரலாற்றுப்பின்புலம்

முதலாம் குலோத்துங்க சோழன் ( 1070 -1122 ) அநபாயன் என கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறார். சோழ இளவரசிக்கு வேங்கி நாட்டை ஆண்ட கீழைச் சாளுக்கிய மன்னன் ராஜராஜ நரேந்திரனின் மகனாக கங்கைகொண்ட சோழபுரம் அரண்மனையில் பிறந்த இவரை இராசேந்திர சோழர் வாரிசாக தத்தெடுத்துக்கொண்டார் என கலிங்கத்துப்பரணி குறிப்பிடுகிறது. ஆனால் ராஜேந்திரசோழன் மறைந்தபின் இளவரசனாகிய அநபாயன் ஆட்சிக்கு வரவில்லை. ராஜேந்திர சோழனின் இன்னொரு மகன் அதிராஜேந்திரனுக்குபின் பொயு 1070 ல் குலோத்துங்க சோழன் என்னும் பெயரில் ஆட்சிக்கு வந்தார். அதிராஜேந்திரன் நோயாளியாக இருந்தமையால் அநபாயன் தத்தெடுக்கப்பட்டிருக்கலாம். அதிராஜேந்திரன் மிகச்சில ஆண்டுகளே அரசராக இருந்தார்.

முதலாம் குலோத்துங்கனின் காலத்தில் சோழநாட்டு எல்லைகள் மிகப்பெரியதாக அகன்றிருந்தன. எனவே எல்லைநாடுகளில் எல்லாம் போர்கள் நிகழ்ந்தன. உள்நாட்டில் வலங்கை இடங்கை பூசல்கள் உருவாயின. ஆனால் சோழர்காலத்தின் சிறந்த மன்னர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இளவரசன் ராஜேந்திர சோழன், அரையன் காளிங்கராயர், சேனாதிபதி இருங்கோவேள், அரையன் சயந்தன் கருணாகரப் பல்லவன் உடையன் ஆதித்தன், அருள்மொழி ராஜாதிராஜ வானதிராயர், அழகிய மணவாள நம்பி, ராஜ ராஜ மதுராந்தகன் ஆகிய ஆற்றல்மிக்க படைத்தளபதிகள் இவருக்கு இருந்தனர். சாளுக்கியநாடு, சேரநாடு, ஈழம்,வெங்கி ஆகியநாடுகளை போரில் வென்று அடக்கினார்.

குலோத்துங்கன் இரண்டு கலிங்கப்போர்களை நடத்தினார். சோழநாட்டுக்கு அணுக்கமான வெங்கியை கைப்பற்ற கலிங்கர்கள் முயன்றபோது சோழர்படைகள் இளவரடர் விக்ரம சோழன் தலைமையில் காளிங்கராயர், கருணாகர தொண்டைமான் துணைவர படைகொண்டு சென்று கலிங்கர்களை வென்று துரத்தினர். இரண்டாவது கலிங்கப்போர் கருணாகரப் பல்லவன், அரையன் காளிங்கராயர், அரையன் ராஜ நாராயணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இப்போரைப் பற்றி ஜெயங்கொண்டார் எழுதிய கலிங்கத்துப் பரணி விரிவாக பாடுகிறது. இப்போரில் கலிங்கம் முழுமையாக அழிக்கப்பட்டதாகச் சொல்கிறது.

கதைச்சுருக்கம்

கதைநாயகன் சோழர் படைத்தளபதி கருணாகரத் தொண்டைமான். ஸ்ரீவிஜய நாட்டில் இருந்து சோழர்களின் உதவி தேடி வந்த இளவரசனுக்கும் அவர் மகளுக்கும் சோழ இளவரசரான அநபாயன் என்னும் முதலாம் குலோத்துங்கன் உதவுகிறான். அநபாயரின் தோழரான அமீர் என்ற அராபியரும் அவரது ஆசானாகிய அகூதா என்ற சீனரும் உடன் நின்ற்கின்றனர்.

கலிங்கத்தில் கருணாகர பல்லவன் மேற்கொண்ட சவால்கள், அதனை அநபாய சோழனின் துணையோடு எவ்வாறு முறியடித்தான் என்பதிலிருந்து கதை தொடங்குகிறது. அகூதாவின் உதவியால் கடற்போரின் நுணுக்கங்களை அறிந்து, அகூதாவிடம் பரிசாகப் பெற்ற கப்பலை, தனக்கேற்றவாறு மாற்றி கடல் புறாவை உருவாக்குகிறான்.

கடல்புறாவின் உதவியால் கடல் கொள்ளைக்காரர்களிடமிருந்து சோழ நாட்டு வணிகர்களை காப்பாற்றுகிறான். கடல் மோகினித்தீவில் மஞ்சளழகியை சந்திக்கிறான். மஞ்சளழகி அவனிடம் காதல் வயப்படுகிறாள். தன் கடமையை முன்னிட்டும், காஞ்சனாவின் நினைவாலும் மஞ்சளழகியை ஏற்க முடியாமல் விலகுகிறான். ஆனாலும் அவளை மறக்க முடியாமல் வருந்துகிறான்.

பின் தற்செயலாக காஞ்சனாவை கடல் கொள்ளைக்காரர்களிடமிருந்து காப்பாற்றுகிறான். ஸ்ரீவிஜயத்தைக் கைப்பற்றி சோழப் புலிக்கொடியை பறக்கவிடுகிறான். போரில் தோற்ற ஜெயவர்மனின் வேண்டுகோளின் பேரில் வீரராஜேந்திரசோழர் மஞ்சளழகியையும் கருணாகர பல்லவனுக்கு மணமுடித்து வைக்கிறார்.

உசாத்துணை

http://tamilaivugal.org/TamilPhd/TamilKallooriAayvugal?collegeResearchId=370

கடல்புறா முன்னுரை