பா.பிதலிஸ்: Difference between revisions
(Created page with "thumb|பிதலிஸ் பா.பிதலிஸ் (15-நவம்பர்-1951- 16-மார்ச் 2022ல்) தமிழ் இலக்கியச் செயல்பாட்டாளர். கன்யாகுமரி மாவட்ட இலக்கியக் களத்தில் செயல்பட்டவர். ஒளிவெள்ளம் என்னும் சிற்றிதழை நட...") |
No edit summary |
||
Line 6: | Line 6: | ||
== தனிவாழ்க்கை == | == தனிவாழ்க்கை == | ||
பிதலிஸ் பேக்கரி கடை நடத்தியதோடு கணக்காளர் பணியும் செய்து வந்தார் | பிதலிஸ் பேக்கரி கடை நடத்தியதோடு கணக்காளர் பணியும் செய்து வந்தார்.பிதலீஸின் மனைவி மேரி ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர். | ||
== இலக்கியப் பணிகள் == | == இலக்கியப் பணிகள் == |
Revision as of 19:26, 18 March 2022
பா.பிதலிஸ் (15-நவம்பர்-1951- 16-மார்ச் 2022ல்) தமிழ் இலக்கியச் செயல்பாட்டாளர். கன்யாகுமரி மாவட்ட இலக்கியக் களத்தில் செயல்பட்டவர். ஒளிவெள்ளம் என்னும் சிற்றிதழை நடத்தினார். தனியார் நூலகம் ஒன்றும் அமைத்திருந்தார்
பிறப்பு, கல்வி
பிதலிஸ்நாகர்கோயில் ஆசாரிப்பள்ளம் ஊரில் 15-நவம்பர்-1951 ல் பிறந்தார். பி.எஸ்சி வேதியியல் படித்து இதழியலில் முதுகலை பட்டமும் பெற்றவர்
தனிவாழ்க்கை
பிதலிஸ் பேக்கரி கடை நடத்தியதோடு கணக்காளர் பணியும் செய்து வந்தார்.பிதலீஸின் மனைவி மேரி ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர்.
இலக்கியப் பணிகள்
பா.பிதலிஸ் நாகர்கோயில் நகரில் இலக்கியச் செயல்பாடுகளில் தொடர்ந்து இருபத்தைந்து ஆண்டுக்காலம் ஈடுபட்டிருந்தார். 2002 முதல் ஒளிவெள்ளம் என்னும் சிற்றிதழை நடத்தினார். இலவச நூலகம் ஒன்றை தன் இல்லத்தில் அமைத்திருந்தார். அங்கே வாசிக்க வருபவர்களுக்கு பயணப்படியும் அளித்தார்.நாகர்கோயில் எழுத்தாளர் சங்க பணிகளிலும் ஈடுபட்டிருந்தார்
மறைவு
பிதலிஸ் 16- மார்ச்-2022ல் மறைந்தார்