under review

தம்மம் தந்தவன்: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: ‍)
(Added First published date)
 
Line 40: Line 40:
* [https://www.shankarwritings.com/2019/12/blog-post_21.html விலாஸ் சாரங்கின் தம்மம் தந்தவன், ஷங்கர்ராமசுப்ரமணியன்]
* [https://www.shankarwritings.com/2019/12/blog-post_21.html விலாஸ் சாரங்கின் தம்மம் தந்தவன், ஷங்கர்ராமசுப்ரமணியன்]
* [https://www.jeyamohan.in/160836/ தம்மம் தந்தவன் - லோகமாதேவி | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)]
* [https://www.jeyamohan.in/160836/ தம்மம் தந்தவன் - லோகமாதேவி | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|15-Nov-2022, 13:35:02 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 14:00, 13 June 2024

புத்தரின் வாழ்வை புதிய நோக்கில் விவரிக்கும் ' The Dhamma man' எனும் ஆங்கில நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பே 'தம்மம் தந்தவன்'. இதை ஆங்கிலத்தில் எழுதியவர் விலாஸ் சாரங். தமிழில் காளிப்ரஸாத் மொழிபெயர்த்துள்ளார்.

பதிப்பு

விலாஸ் சாரங்

இந் நாவலின் முதற்பதிப்பு நற்றிணை பதிப்பகத்தால் ஜூன் 2019-ல் வெளியிடப்பட்டது.

ஆசிரியர்

விலாஸ் சாரங் 1942-ம் ஆண்டு கர்னாடக மாநிலத்தில் உள்ள கார்வார் நகரத்தில் பிறந்தார். மராத்திய மொழியில் உயர்கல்வியும், மும்பையிலுள்ள எல்பின்ஸ்டோன் கல்லூரியில் மேற்படிப்பையும், பாம்பே (மும்பை) பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். பின்னர் ப்ளூமிங்டனில் ( இண்டியானா, அமெரிக்கா) ஒப்பீட்டு இலக்கியத்தில் தம் இரண்டாவது முனைவர் பட்டத்தையும் பெற்றார். பாஸ்ரா பல்கலைக்கழகத்திலும் (ஈராக்), பாம்பே (மும்பை) பல்கலைக்கழகத்திலும், குவைத் பல்கலைக்கழகத்திலும் ஆங்கிலம் பயிற்றுவித்தார். நவீனத்துவ பார்வை கொண்ட முக்கியமான எழுத்தாளரான இவர், மராத்தி, ஆங்கிலம் என இருமொழிகளிலும் தொடர்ந்து எழுதி வந்தார். ஏப்ரல்14, 2015-ல் மறைந்தார்.

தமிழில் மொழிபெயர்த்த காளிப்ரஸாத்தின் சொந்த ஊர் மன்னார்குடி. சென்னையில் வசிக்கிறார். சிறுகதை மற்றும் கட்டுரை ஆசிரியர். நாவல் மற்றும் சிறுகதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார்.

கதைச்சுருக்கம்

கபிலவஸ்துவை தலைநகராகக் கொண்ட சாக்கிய அரசர் சுத்தோதனரின் பட்டத்தரசி மாயாவிற்கு தன் தாய்வீட்டிற்கு செல்லும் வழியிலேயே பிரசவ வலி ஏற்படுவதிலிருந்து இந்நாவல் தொடங்குகிறது. தொடர்ந்து சித்தார்த்தரின் பிறப்பு, வளர்ப்பு, அவரின் கேள்விகள், குடும்ப் வாழ்க்கை, மெய்மைக்கான அவரின் தேடல்கள், அதற்காக அவர் விலக்கியவை, தொடர்ந்தவை என்று விரிகிறது. தேடலின் முடிவில் ஒரு வைகாசி முழுநிலவு நாளில் போதிசத்துவனாக உறங்கி புத்தராக விழிப்பதையும் அதற்கு பிறகான புத்தரின் தம்ம உபதேசங்களையும், சீடர்களுடான அவரின் வாழ்வையும், கடைசியில் புத்தரின் மரணம் வரையிலும் விவரித்து இந்நாவல் முடிகிறது.

காளிப்ரஸாத்

கதை மாந்தர்

  • சுத்தோதனர் - சாக்கிய நாட்டின் அரசர் (சித்தார்த்தனின் தந்தை)
  • மாயாதேவி - சாக்கிய நாட்டின் பட்டத்தரசி (சித்தார்தனின் தாய்)
  • பிம்பாதேவி (யசோதரா) - சித்தார்த்தனின் மனைவி
  • ராகுலன் - சித்தார்த்தனின் மகன்
  • சுதத்தா - அரண்மனை சேவகர்
  • கலா உதயன் - சித்தார்த்தனின் பால்ய கால நண்பன்
  • அஸிதர் - சாக்கிய நாட்டின் ராஜகுருவாக இருந்தவர்
  • மாரன் - வேட்கையின் கடவுள்
  • பிம்பிசாரர் - மகத நாட்டின் அரசர்
  • கோசலா தேவி - மகத நாட்டின் அரசி (பிம்பிசாரரின் மனைவி)
  • அலரா கலாமா - குருகுல ஆசிரியர்
  • சரிபுத்தா - புத்தரின் மூத்த மாணவர்
  • அம்பாபாலி - கணிகை
  • தேவதத்தன் - புத்தரின் மைத்துனன்
  • அஜாதசத்ரு - மகதத்தின் இளவரசன் (பிம்பிசாரரின் மகன்)
  • ஆனந்தன் - புத்தரின் சீடர்

நூல் பின்புலம்

புத்தரைப் பற்றிய புத்தகங்கள் பெரும்பாலும் அறிவார்ந்தவை, சில அலட்சியமானவை என்கிறார் விலாஸ் சாரங். வரலாற்று ஆய்வாளர்களால் நாடகீயத் தருணங்களை உணர்ச்சிகளாக தொகுக்க முடியவில்லை எனவும் அவர்கள் தகவல்களால் நிரப்புவதாகவும் அதனால் ஏற்பட்ட திருப்தியின்மையின் காரணமாகவும், நுண்ணுணர்வுள்ள வாசகர்களுக்காகவும் இந்நாவலை எழுதியதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

இலக்கிய இடம்

மாபெரும் ஆளுமைகளை ஒரு பீடத்தின் மீது இருத்தி எழுதுவதால் வாசகர்கள் அவர்களை அணுகுவதில் ஒரு இடைவெளி ஏற்படுகிறது. இந்நாவலில் விலாஸ் சாரங், புத்தரை சாதாரண மனிதனாகவும், உணர்ச்சிகளுடனும், உணர்ச்சிகள் இல்லாமலும் அவரின் அலைக்கழிதல்களுடனும் சித்தரித்துள்ளார். இதனால் புத்தரை மேலும் அணுகி அறிவது சாத்தியமாகிறது. இடையிடையே ஆசிரியர் அளிக்கும் மேலதிக விமர்சனங்களும், இதன் மொழிநடையும் ஒரு சிறந்த வாசிப்பனுபவத்தை அளிக்கிறது என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.

பொருத்தமான சொற்களுடன் தொய்வில்லாத நடையில் சிறப்பாக‌ தமிழில் மொழியாக்கத்துக்காக இந்நாவல் பாராட்டப்பட்டுள்ளது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:35:02 IST