பொய்யாமொழிப் புலவர்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "பொய்யாமொழிப் புலவர் புலவர் ஒரு தமிழ்ப் புலவர். அபிதான சிந்தாமணி, புலவர் புராணம், தமிழ் நாவலர் சரிதம் போன்ற நூல்களில் இவர் பற்றிய குறிப்புகள் உள்ளன. == வாழ்க்கைக் குறிப்பு == பொய்...")
 
No edit summary
Line 6: Line 6:
== இலக்கியவாழ்க்கை ==
== இலக்கியவாழ்க்கை ==
பொய்யாமொழிப் புலவர் என்ற பெயர் இவருக்கு இவரின் ஆசிரியரால் வழங்கப்பட்டது. பல தனிப்பாடல்களை இயற்றியுள்ளார். தஞ்சைவாணன் கோவை எனும் கோவை நூல் சிறப்புப் பெற்ற ஒரு கோவை இலக்கியம். இந்நூல் தஞ்சைவாணன் என்னும் அரசன் மீது பாடப்பட்டது. இந்நூலில் உள்ள ஒவ்வொரு பாடலுக்கும், தஞ்சைவாணனின் மனைவி பொன்னாலான தேங்காய்களைப் பரிசாக வழங்கினார். அரசன் இத்தேங்காய்களின் மூன்று கண்களிலும் விலையுயர்ந்த இரத்தினங்களை வைத்துப் பரிசளித்தான்.

[[File:தியாகராஜ பாகவதர் நடித்த சிவகவி.png|thumb|239x239px|தியாகராஜ பாகவதர் நடித்த சிவகவி]]

== இவரைப் பற்றிய திரைப்படம் ==
== இவரைப் பற்றிய திரைப்படம் ==

Revision as of 11:47, 17 March 2022

பொய்யாமொழிப் புலவர் புலவர் ஒரு தமிழ்ப் புலவர். அபிதான சிந்தாமணி, புலவர் புராணம், தமிழ் நாவலர் சரிதம் போன்ற நூல்களில் இவர் பற்றிய குறிப்புகள் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

பொய்யாமொழிப் புலவர் தொண்டை மண்டலம் துறையூரைச் சேர்ந்தவர். இவர் வாழ்ந்தகாலம் பற்றித் தெளிவு இல்லை. பன்னிரண்டு அல்லது பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவராக இருக்கலாம்.இவர் வயிரபுரம் ஆசானிடம் கல்வி பயின்றார்.

இலக்கியவாழ்க்கை

பொய்யாமொழிப் புலவர் என்ற பெயர் இவருக்கு இவரின் ஆசிரியரால் வழங்கப்பட்டது. பல தனிப்பாடல்களை இயற்றியுள்ளார். தஞ்சைவாணன் கோவை எனும் கோவை நூல் சிறப்புப் பெற்ற ஒரு கோவை இலக்கியம். இந்நூல் தஞ்சைவாணன் என்னும் அரசன் மீது பாடப்பட்டது. இந்நூலில் உள்ள ஒவ்வொரு பாடலுக்கும், தஞ்சைவாணனின் மனைவி பொன்னாலான தேங்காய்களைப் பரிசாக வழங்கினார். அரசன் இத்தேங்காய்களின் மூன்று கண்களிலும் விலையுயர்ந்த இரத்தினங்களை வைத்துப் பரிசளித்தான்.

தியாகராஜ பாகவதர் நடித்த சிவகவி

இவரைப் பற்றிய திரைப்படம்

பொய்யாமொழிப் புலவரைப் பற்றிய திரைப்படம், 1943இல் “சிவகவி” என்னும் பெயரில் எம்.கே. தியாகராஜ பாகவதர் பாடி நடித்து வெளிவந்தது.

நூல் பட்டியல்

  • தஞ்சைவாணன் கோவை

உசாத்துணை