under review

வஞ்சி மாலை: Difference between revisions

From Tamil Wiki
(Page Created by ASN)
(Para Added and Edited: Link Created: Proof Checked.)
Line 11: Line 11:
- எனப் [[புறப்பொருள் வெண்பாமாலை|புறப்பொருள் வெண்பா மாலை]], வஞ்சித் திணையின் இலக்கணம் கூறுகிறது.
- எனப் [[புறப்பொருள் வெண்பாமாலை|புறப்பொருள் வெண்பா மாலை]], வஞ்சித் திணையின் இலக்கணம் கூறுகிறது.


== வஞ்சியின் இரு வகைகள் ==
== வஞ்சியின் வகைகள் ==
வஞ்சி மாலை, வரலாற்று வஞ்சி, செருக்கள வஞ்சி என இருவகைப்படும்.
வஞ்சி மாலை, வரலாற்று வஞ்சி, செருக்கள வஞ்சி என இருவகைப்படும்.


Line 43: Line 43:
* [https://www.tamilvu.org/slet/l0I00/l0I00pka.jsp?pno=480 முத்து வீரியம்: தமிழ் இணையக் கல்விக்கழக நூலகம்]
* [https://www.tamilvu.org/slet/l0I00/l0I00pka.jsp?pno=480 முத்து வீரியம்: தமிழ் இணையக் கல்விக்கழக நூலகம்]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{Ready for review}}

Revision as of 21:52, 4 February 2024

வஞ்சி மாலை தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. வஞ்சிப் பூவைச் சூடிக் கொண்டு பகைவர்களுடன் போர் புரிவதைப் பற்றிக் கூறுவது வஞ்சி மாலை.

வஞ்சி மாலை விளக்கம்

மண்ணாசை கொண்ட மன்னன் ஒருவன், மற்றோர் நாட்டைக் கவர்வதற்காக அந்நாட்டின் மன்னுடன் வஞ்சி மாலை சூடியவாறு போர் புரிவதைக் கூறுவது வஞ்சி மாலை.

வஞ்சி மாலை இலக்கணம்

வாடாவஞ்சி தலைமலைந்து
கூடார்மண் கொளல்குறித்தன்று

- எனப் புறப்பொருள் வெண்பா மாலை, வஞ்சித் திணையின் இலக்கணம் கூறுகிறது.

வஞ்சியின் வகைகள்

வஞ்சி மாலை, வரலாற்று வஞ்சி, செருக்கள வஞ்சி என இருவகைப்படும்.

வரலாற்று வஞ்சி

குலமுறை, பிறப்பு முதலியவற்றின் சிறப்பையும் கீர்த்தியையும் வஞ்சிப்பாவால் கூறுவது வரலாற்று வஞ்சி.

இது குறித்து முத்துவீரியம்,

விழுமிய குலமுறை பிறப்புமேம் பாட்டின்
பலசிறப் பிசையையும் வஞ்சிப் பாவால்
வழுத்தல் வரலாற்று வஞ்சியா மென்ப.

என்கிறது.

செருக்கள வஞ்சி

போர்க் களத்தில் இறந்த குதிரை, யானை போன்றவற்றின் உடலையும், மனிதர்களின் உடலையும், நாய், பேய், பிசாசு, காகம், கழுகு ஆகியன உண்டுகளித்துப் பாடிய சிறப்பைப் பாடுவது செருக்கள வஞ்சி.

இது குறித்து முத்துவீரியம்,

போர்க்களத் திறந்த புரவி நால்வாய்
மக்களுடலையும் வாயசங் கழுகு
பேய்நாய் பசாசம் பிடுங்கிப் பருகிக்
களித்துப் பாடிய சிறப்பைக் காட்டல்
செருக்கள வஞ்சியாஞ் செப்புங் காலே.

என்று குறிப்பிட்டுள்ளது.

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.