ஜார்ஜ் ஜோசப்: Difference between revisions
No edit summary |
|||
| Line 13: | Line 13: | ||
* எமரால்ட் (2024, சீர்மை) | * எமரால்ட் (2024, சீர்மை) | ||
===== மொழிபெயர்ப்பு ===== | ===== மொழிபெயர்ப்பு ===== | ||
* பூனைகளில்லா உலகம் | * பூனைகளில்லா உலகம் (நாவல், சீர்மை) | ||
* இஸ்மாயில் | * இஸ்மாயில் (நாவல், சீர்மை) | ||
{{ready for review}} | {{ready for review}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 12:01, 19 January 2024
ஜார்ஜ் ஜோசப் (ஜார்ஜ் இம்மானுவேல்) (பிறப்பு: ஆகஸ்ட் 4, 1996) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், சிறுகதையாசிரியர். மொழிபெயர்ப்புகள் செய்துவருகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
ஜார்ஜ் ஜோசப் திருச்சிராப்பள்ளியில் அ. ஜோசப், ரெக்ஸ்லின் சாந்தி மேரி இணையருக்கு மகனாக ஆகஸ்ட் 4, 1996-இல் பிறந்தார். இயற்பெயர் ஜார்ஜ் இம்மானுவேல். திருச்சி காட்டூரில் லிட்டர் ஃபிளவர் மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். சென்னைக் கிறித்துவக் கல்லூரி இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றார். அதே கல்லூரித் தமிழாய்வுத்துறையில் தற்போது நடுவணரசு பல்கலைக் கழக மானியத்தில் (JRF) ‘தமிழ் நாவல்களில் மெய்யியல் நோக்கு’ என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வில் உள்ளார்.
இலக்கிய வாழ்க்கை
ஜார்ஜ் ஜோசப் -ன் முதல் சிறுகதைத் தொகுப்பான ’எமரால்ட்’ சீர்மை பதிப்பக வெளியீடாக 2024-இல் வெளியானது. களம் இதழில் “விருட்சப் பறவை” 2022-இல் வெளியானது. இவரின் படைப்புகள் உயிர் எழுத்து, உயிர்மை, புரவி, அகநாழிகை, தளம், தமிழ்வெளி, வாசகசாலை, கலகம், மெய்ப்பொருள் ஆகிய இதழ்களில் வெளியானது.
முதல் மொழிபெயர்ப்பு படைப்பு ‘பூனைகளில்லா உலகம்’ என்ற ஜப்பானிய நாவல் சீர்மை பதிப்பகத்தால் 2024-இல் வெளியானது. டேனியல் குயின் என்னும் அமெரிக்க எழுத்தாளரின் சூழலியல்சார் நாவல் ‘இஸ்மாயில்’ சீர்மை பதிப்பகத்தால் வெளியானது.
இலக்கிய இடம்
நினைவுகள் சார்ந்து, காதல், காமம், கழிவிரக்கம், கயமை, கிறித்துவச் சமூக வெளிப்பாடும் அதன் கலாச்சார நுண்மைகளும் சார்ந்த பேசு பொருட்களை உள்ளடக்கியவை இவரின் கதைகள்.
நூல்கள் பட்டியல்
சிறுகதைத் தொகுதி
- எமரால்ட் (2024, சீர்மை)
மொழிபெயர்ப்பு
- பூனைகளில்லா உலகம் (நாவல், சீர்மை)
- இஸ்மாயில் (நாவல், சீர்மை)
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.