under review

சிதம்பர ஞானதேசிகர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
Line 1: Line 1:
சிதம்பர ஞானதேசிகர் (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். துறவி. தமிழ் ஆன்மீகக்கீர்த்தனைகள் பல பாடியவர்.
சிதம்பர ஞானதேசிகர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். துறவி. தமிழ் ஆன்மீகக்கீர்த்தனைகள் பல பாடியவர்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
சிதம்பர ஞானதேசிகர் பாண்டிய நாட்டில் தேவிக்கோட்டையில் பிறந்தார். இளமையில் துறவு பூண்டார். கோவிலூர் மடத்தின் தலைவராக இருந்தார். மெய்ஞான போதகராக ஆன்மீகப் பணிகள் செய்தார். கொற்றவாளீசர் கோயிலில் திருப்பணி செய்தார்.  

Revision as of 08:16, 24 February 2024

சிதம்பர ஞானதேசிகர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். துறவி. தமிழ் ஆன்மீகக்கீர்த்தனைகள் பல பாடியவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சிதம்பர ஞானதேசிகர் பாண்டிய நாட்டில் தேவிக்கோட்டையில் பிறந்தார். இளமையில் துறவு பூண்டார். கோவிலூர் மடத்தின் தலைவராக இருந்தார். மெய்ஞான போதகராக ஆன்மீகப் பணிகள் செய்தார். கொற்றவாளீசர் கோயிலில் திருப்பணி செய்தார்.

மாணவர்கள்
  • பொன்னம்பல அடிகள்
  • ஞானசாமி தேசிகர்
  • காடகநல்லூர் சுந்தர அடிகள்

இலக்கிய வாழ்க்கை

சிதம்பர ஞானதேசிகர் வடமொழியிலிருந்த கோவிலூர்ப் புராணத்தை தமிழில் மொழிபெயர்க்க மீனாட்சி சுந்தரம் பிள்ளையை வேண்டி அரங்கேற்றம் செய்தார். 'இலட்சணா விருத்தி' என்ற வேதாந்த நூலைப் பாடினார். கண்டனூர் முத்துராம அய்யர் ஞானதேசிகருக்கு புகழ் மாலை பாடினார்.

மறைவு

சிதம்பர ஞானதேசிகர் தாது ஆண்டு ஆடி மாதம் நான்காம் நாள் காலமானார். பொன்னம்பல அடிகள், ஞானசாமி தேசிகர், காடக நல்லூர் சுந்தர அடிகள் சிதம்பர ஞானதேசிகரை சமாதி செய்தனர்.

நூல் பட்டியல்

உசாத்துணை

✅Finalised Page