சி. கனகன்: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
(Inserted READ ENGLISH template link to English page) |
||
Line 1: | Line 1: | ||
{{Read English|Name of target article=C. Kanagan|Title of target article=C. Kanagan}} | |||
[[File:சி. கனகன்.png|thumb|சி. கனகன் (நன்றி: செல்லையா மெற்றாஸ்மயில்)]] | [[File:சி. கனகன்.png|thumb|சி. கனகன் (நன்றி: செல்லையா மெற்றாஸ்மயில்)]] | ||
சி. கனகன் (பிறப்பு: ஜூலை 22, 1936) ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். காத்தவராயன் கூத்தை நெறியாள்கை செய்து பல மேடைகளில் அரங்கேற்றி புகழ் பெற்றார். | சி. கனகன் (பிறப்பு: ஜூலை 22, 1936) ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். காத்தவராயன் கூத்தை நெறியாள்கை செய்து பல மேடைகளில் அரங்கேற்றி புகழ் பெற்றார். |
Revision as of 10:52, 30 December 2023
To read the article in English: C. Kanagan.
சி. கனகன் (பிறப்பு: ஜூலை 22, 1936) ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். காத்தவராயன் கூத்தை நெறியாள்கை செய்து பல மேடைகளில் அரங்கேற்றி புகழ் பெற்றார்.
வாழ்க்கைக் குறிப்பு
கனகன் ஜூலை 22, 1936-ல் இலங்கை செல்வபுரத்தில் பிறந்தார். மாமனார் சின்னத்தம்பியிடமும், தமையனார் சுந்தரத்திடமும் நாடகக் கலை கற்றார்.
கலை வாழ்க்கை
இருபத்தியொரு வயதில் 'குலோபாவலி' சினிமா நாடகத்தில் நடித்தார். காத்தவராயன் நாட்டுக்கூத்தை நெறியாள்கை செய்து இருபத்தியைந்து முறைக்கு மேல் மேடைகளில் ஏற்றினார். வேறு நாடகங்கள் பலவும் நெறியாள்கை செய்து அரங்கேற்றும் அண்ணாவியாராக இருந்தார். பாரம்பரியக் கலைகள் மேம்பாட்டுக்கழகம் கலைஞர்களின் வளர்ச்சிக்கு எடுக்கும் முடிவுகளுக்கு உறுதுணையாக இருந்தார்.
விருதுகள்
- பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகம் நடத்திய இசை நாட்டுக்கூத்துப் போட்டியில் காத்தவராயன் நாட்டுக்கூத்தை அரங்கேற்றி மூன்றாவது இடம் பெற்றார்.
நடித்த நாடகங்கள்
- குலோபாவலி
- அரிச்சந்திர மயான காண்டம்
- சத்தியவான் சாவித்திரி
- மாலைக்கு வாதாடிய மைந்தன்
உசாத்துணை
✅Finalised Page