அருண்மொழிநங்கை: Difference between revisions
(Standardised) |
(Moved to Standardised) |
||
| Line 1: | Line 1: | ||
[[File:Img812 (1).jpg|thumb|'''எழுத்தாளர் அருண்மொழிநங்கை''']] | [[File:Img812 (1).jpg|thumb|'''எழுத்தாளர் அருண்மொழிநங்கை''']] | ||
'''அருண்மொழிநங்கை''' (மார்ச் 6, 1970) விமர்சகர், எழுத்தாளர். தன்னுடைய வலைப்பூவில் தன்வரலாற்றுக் குறிப்புகளை இலக்கியத் தரத்தில் எழுதியதால் பெரிதும் கவனிப்புக்குள்ளானவர். அந்தக் கட்டுரைகள் ‘[https://littamilpedia.org/index.php/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88_(%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81)#%E0%AE%89%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88 பனி உருகுவதில்லை]’ என்ற தலைப்பில் தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளன. | '''அருண்மொழிநங்கை''' (மார்ச் 6, 1970) விமர்சகர், எழுத்தாளர். தன்னுடைய வலைப்பூவில் தன்வரலாற்றுக் குறிப்புகளை இலக்கியத் தரத்தில் எழுதியதால் பெரிதும் கவனிப்புக்குள்ளானவர். அந்தக் கட்டுரைகள் ‘[https://littamilpedia.org/index.php/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88_(%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81)#%E0%AE%89%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88 பனி உருகுவதில்லை]’ என்ற தலைப்பில் தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளன. | ||
| Line 46: | Line 43: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
{{Standardised}} | |||
{{ | |||
Revision as of 21:31, 3 March 2022
அருண்மொழிநங்கை (மார்ச் 6, 1970) விமர்சகர், எழுத்தாளர். தன்னுடைய வலைப்பூவில் தன்வரலாற்றுக் குறிப்புகளை இலக்கியத் தரத்தில் எழுதியதால் பெரிதும் கவனிப்புக்குள்ளானவர். அந்தக் கட்டுரைகள் ‘பனி உருகுவதில்லை’ என்ற தலைப்பில் தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளன.
வாழ்க்கைக் குறிப்பு
பிறப்பு
அருண்மொழிநங்கை சற்குணம் - சரோஜா தம்பதியருக்கு மார்ச் 6, 1970-ல் பிறந்தார். சொந்த ஊர் தஞ்சை மாவட்டம், திருவாரூர் அருகே உள்ள புள்ளமங்கலம் கிராமம். பெற்றோர் இருவருமே ஆசிரியர்கள். இவரின் தந்தை வழி தாத்தா இராமச்சந்திரன் பிள்ளை ஆசிரியராகப் பணியாற்றி நல்லாசிரியர் விருது பெற்றவர்.
கல்வி
அருண்மொழி நங்கைக்கு மிக சிறு வயதிலேயே இலக்கியமும் இசையும் அறிமுகமாகின. அப்போது அவர் திருவாரூரில் இருந்தார். இவர் வளர்ந்தது பட்டுக்கோட்டையில். இளங்கலைப் பட்டப்படிப்பினை மதுரை வேளாண்மை கல்லூரியில் பயின்றார்.
திருமணம்
இவர் 1991-ல் காதல்திருமணம் செய்துகொண்டார். இவரின் கணவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவருக்கு அஜிதன், சைதன்யா ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
பணி
இவர் 1993-ல் தர்மபுரியில் மத்திய அரசு பணியில் சேர்ந்தார். பின் நாகர்கோவிலில் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றார்.
இலக்கிய ஆர்வம்
இலக்கியம், இசை மீது தீராப் பற்றுக்கொண்டவர். பயணங்களின் மீதும் விருப்பம் கொண்டவர். ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். ஆண்டுதோறும் இந்தியப் பயணத்தை மேற்கொள்பவர்.
அருண்மொழிநங்கையின் இலக்கிய ஆதர்சங்கள் எனத் தமிழில் புதுமைப்பித்தன், அசோகமித்தரன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், அ. முத்துலிங்கம் ஆகியோரையும் இந்திய இலக்கியங்களில் வைக்கம் முகமது பஷீர், எஸ்.எல்.பைரப்பா, சிவராம காரந்த், தாரா சங்கர் பானர்ஜி, அதின் பந்தோபாத்யாயா ஆகியோரையும் உலக இலக்கியகளில் டால்ஸ்டாய், பியோதர் தஸ்தயேவ்ஸ்கி, நிகோஸ் கசான்சாகிஸ், ஹெர்மன் ஹெஸ்ஸே, காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் ஆகியோரையும் குறிப்பிடலாம். இவர்கள் அனைவரையும் தாண்டி எழுத்தாளர் ஜெயமோகன் இவருக்கு மிகவும் அணுக்கமானவர். அவரே இவருக்கு ஆசானும் கணவருமாக அமைந்தவர்.
இலக்கிய இடம்
எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலுக்கு இவர் எழுதிய பெண்ணியப் பார்வையிலான மதிப்புரை மிகுந்த கவனிப்புக்குள்ளானது. ஆனாலும் இவர் தொடர்ந்து எழுத்துப் பணியில் ஈடுபடவில்லை. தனது பணி ஓய்வுக்குப் பின்னர் தன் இளமைக்கால வாழ்வைச் சுயமதிப்பீடு செய்யும் வகையில் இவர் தன்னுடைய வலைப்பூவில் தொடர்ந்து எழுதிய கட்டுரைகள் பரவலாக வாசகர் ஏற்பினைப் பெற்றன. தமிழில் இவை புதுவகை பெண்ணிய எழுத்தாகவும் நுட்பமான தகவல்களைச் செறிவாக அடுக்கி எழுதப்பட்ட இலக்கிய ஆக்கங்களாகவும் கருதப்பட்டன. இவரின் தன் வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்ட கட்டுரைத் தொகுப்பான ‘பனிஉருகுவதில்லை’ ஒரு முன்மாதிரியான படைப்பாகவும் புனைவுவல்லாத இலக்கிய வகைமைகளுள் கவனிப்புக்குரியதாகவும் கருதப்படுகிறது.
நூல்
- பனி உருகுவதில்லை (இது இவரின் தன் வரலாற்றுக் குறிப்புகளின் தொகுப்பு நூல். இந்த நூலினை எழுத்து பிரசுரம் (ஸீரோ டிகிரி பதிப்பகம்) 2022-ல் அச்சுப்பதிப்பாக வெளியிட்டது).
உசாத்துணை
இணைப்புகள்
அருண்மொழிநங்கையின் உரைகளின் காணொலிகள் -
- https://www.youtube.com/watch?v=9h0AFFSMywE
- https://www.youtube.com/watch?v=DUWxDiCygic
- https://www.youtube.com/watch?v=5QttdXnHZ9w&t=5s
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
