under review

பூலோக தேவேந்திர விலாசம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
Line 47: Line 47:
* மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும், முனைவர் [[மு. இளங்கோவன்]]
* மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும், முனைவர் [[மு. இளங்கோவன்]]
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM7luMy&tag=#book1/142 ஐந்து தமிழிசை நாட்டிய நாடகங்கள், தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம், தமிழ் டிஜிட்டல் லைப்ரரி]
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM7luMy&tag=#book1/142 ஐந்து தமிழிசை நாட்டிய நாடகங்கள், தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம், தமிழ் டிஜிட்டல் லைப்ரரி]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|06-Nov-2023, 10:21:10 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 13:57, 13 June 2024

Boologa Devendra Vilasam1.jpg

பூலோக தேவேந்திர விலாசம் (பொ.யு. பதினேழாம் நூற்றாண்டு) மராட்டியர் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்ட இசை நாட்டிய நாடகம். இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இந்நூலின் பாடல்கள் இசை நாட்டிய நாடகத்திற்காக இயற்றப்பட்டன.

காலம்

இந்நூல் மராட்டிய மன்னர் சாகேஜி ஆட்சி காலத்தில் இயற்றப்பட்டது என சாகேஜி மன்னரை பூலோக தேவேந்திரன் எனக் குறிப்பது மூலம் அறிய முடிகிறது.

ஆசிரியர்

இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

நூல் அமைப்பு

முனிவரின் மனைவி மேல் ஆசைப்பட்டு சாபம் கொண்டவன் என்பதால் இந்திரன் குறையுடையவனாக கருதப்படுகிறான். அதனால் தேவேந்திரனை விட சாகேஜி மன்னர் மேலானவர் என்ற கருத்தை வலியுறுத்தும் வண்ணம் பூலோக தேவேந்திர விலாசம்’ அமைந்துள்ளது.

பாடல் நடை

விருத்தம்:

காப்பு

பாவேந்த ரெல்லாம் போற்றும் பாக்கிய வான்பூ லோக
தேவேந்திர சகசி ராசன் திகழ்விலா சத்தைப் பாட
நாவேந்து மங்கை பாதம் அன்புடன் போற்றி நாளும்
பூவேந்து கமலை மாதைப் பொன்னடி பணிவோம் நாமே

வசனம்

இந்தப்படிக்குக் காப்புக் கேட்பித்த ததனந் தரத்திலே பூலோக தேவேந்திர விலாசம் என்கிற நாடகத்திலே சகல விக்கினங்களும் நிவாரணம் பண்ண விக்கினேசுவரனைப் பிரார்த்தனை பண்ண, விக்கினேசுவரன் வருகிற மார்க்கம்.

விநாயகர் தருவு

வந்தே சிவஸுதம்
  வரத மமர நுதம்
ஸுந்தர குணயுதம்
  ஸுப்பிரஸன்ன வதனம்
பாசாங்குச தரம்
  பணிவர கேயூரம்
மூஷிக வாஹனம்
  மோதக கரம்
பாலேந்து சேகரம்
  பால ஸிந்தூரதரம்
லாலித பக்தவரம்
  லீலயா லிக்னஹரம்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-Nov-2023, 10:21:10 IST