under review

முள்ளியூர்ப் பூதியார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
Line 36: Line 36:
* மகடூ முன்னிலை, பெண்பாற் புலவர் களஞ்சியம், டாக்டர் தாயம்மாள் அறவாணன், பச்சை பசேல் பதிப்பகம்
* மகடூ முன்னிலை, பெண்பாற் புலவர் களஞ்சியம், டாக்டர் தாயம்மாள் அறவாணன், பச்சை பசேல் பதிப்பகம்
* [http://www.tamilsurangam.in/literatures/ettuthogai/agananooru/agananooru_173.html அகநானூறு 173, தமிழ் சுரங்கம்]
* [http://www.tamilsurangam.in/literatures/ettuthogai/agananooru/agananooru_173.html அகநானூறு 173, தமிழ் சுரங்கம்]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|04-Nov-2023, 10:21:59 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்கள்]]
[[Category:புலவர்கள்]]

Latest revision as of 12:02, 13 June 2024

முள்ளியூர்ப் பூதியார், சங்ககாலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று சங்க தொகை நூலான அகநானூற்றில் இடம் பெற்றுள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

முள்ளியூரில் பிறந்தார். பூதியார் என்ற சொல் சைவ சமயத்தைக் குறிக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். பூதன் என்பது ஆண்பால் அதற்கு இணையாக பூதியார் என்பது பெண்பால்.

இலக்கிய வாழ்க்கை

முள்ளியூர்ப் பூதியார் இயற்றிய பாடல் சங்கத் தொகை நூலான அகநானூற்றில் 173-ஆவது பாடலாக இடம் பெற்றுள்ளது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • பொருள்வயிற் பிரியும் காதலரைப் பற்றிக் கூறும் இல்வாழ்வின் நெறிகுறித்து சொல்லப்பட்டது.
  • பல புரி கொண்ட நீண்ட கயிற்றை எருதுகளின் கழுத்தில் வரிசையாகக் கட்டி உப்பு வண்டியைப் கொண்டு செல்லும் உமணர் எருதுகளை அதட்டி ஓட்டுவர். அந்த ஒலியைக் கேட்டு அங்கு மேயும் உழைமான் கூட்டத்திலிருந்து பிரிந்து பெண்மான் ஓடும்.
  • கோடைக்காலத்தில் மூங்கில் வெடித்து முத்துக்களைத் தெறிக்கும். அவை அணிந்துகொள்ளப் பயன்படாத முத்துக்கள். அவை கழங்கு விளையாடும் காய் அளவு பருமனாக இருக்கும். அங்குள்ள பழமையான குழிகளில் அவை விழும்.
  • அரசன் நன்னன் நறவு உண்டு களிப்பவன். தேரில் செல்லும் பழக்கம் உள்ளவன்.

பாடல் நடை

அகநானூறு 173

பாலைத்திணை

  • துறை: தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.

'அறம் தலைப்பிரியாது ஒழுகலும், சிறந்த
கேளிர் கேடு பல ஊன்றலும், நாளும்
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்' எனச்
செய்வினை புரிந்த நெஞ்சினர், 'நறு நுதல்
மை ஈர் ஓதி! அரும் படர் உழத்தல்
சில் நாள் தாங்கல்வேண்டும்' என்று, நின்
நல் மாண் எல் வளை திருத்தினர்ஆயின்,
வருவர் வாழி, தோழி! பல புரி
வார் கயிற்று ஒழுகை நோன் சுவற் கொளீஇ,
பகடு துறை ஏற்றத்து உமண் விளி வெரீஇ,
உழைமான் அம் பிணை இனன் இரிந்து ஓட,
காடு கவின் அழிய உரைஇ, கோடை
நின்று தின விளிந்த, அம் பணை, நெடு வேய்க்
கண் விடத் தெறிக்கும் மண்ணா முத்தம்
கழங்கு உறழ் தோன்றல, பழங் குழித் தாஅம்
இன் களி நறவின் இயல் தேர் நன்னன்
விண் பொரு நெடு வரைக் கவாஅன்
பொன் படு மருங்கின் மலை இறந்தோரே.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Nov-2023, 10:21:59 IST