மண்ணாசை: Difference between revisions
No edit summary |
|||
Line 14: | Line 14: | ||
க.நா.சுப்ரமணியம் இந்நாவலின் இலக்கிய இடத்தை இவ்வண்ணம் வரையறை செய்கிறார் "நாற்பதுகளின் ஆரம்ப ஆண்டுகளில் தமிழ் நாவலின் இலக்கிய மறுமலர்ச்சியைச் சந்தேகத்துக் கிடமில்லாமல் தொடங்கி வைத்தவர் சங்கரராம். மண்ணாசை என்கிற அவர் நாவல் நாற்பது களிலும் பின்னரும் ஏற்பட்ட ஒரு நாவல் கலை வளத்துக்கு முன்னோடியாகச் செயல்பட்டது" இந்நாவலின் பகைப்புலத்தை க.நா.சுப்ரமணியம் இவ்வாறு சொல்கிறார் "மண்ணாசை நாவல் கலையின் ஒரு சிகரத்தை எட்டிப் பிடித்தது என்று சொல்ல வேண்டும். கிராமத்துக்குத் திரும்பிப்போ, நகரங்களை நம்பாதே என்று ஒரு இயக்கம் இருபதுகளிலும் முப்பதுகளிலும் தீவிரமாக இருந்தது. இதன் ஒரு கூறு மகாத்மாகாந்தியின் சிந்தனைகளையும் தொட்டது என்று சொல்லலாம். இலக்கியத்தில் இதன் முதல் நவீன ஆரம்பம் என்று நட் ஹாம்ஸனின் நிலவளத் தைச் சொல்லவேண்டும். 1919-ல் அதற்கு நோபல் இலக்கியப் பரிசு கிடைத்தது பரவலாக இந்தியாவிலும் பேசப்பட்டது என்று தெரிகிறது. பாரதியார் அந்த நாவலையும், நாவ லாசிரியர் பற்றியும், பத்திரிகாசிரியராக ஒரு குறிப்பு எழுதி யிருக்கிறார். இந்தக் கிராமத்துக்குத் திரும்பிப்போ’ இயக்கத்தின் செயல்பாடாகவே கே. எஸ். வேங்கடரமணியின் இரண்டு நாவல்களையும் (முருகன் ஓர் உழவன், தேசபக்தன் கந்தன்) கவனிக்கலாம். அவை ஆங்கிலத்தில் ஏற்படுத்திய தாக்க அலைகளை விட அதிக மாகத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டபோது ஏற்படுத்தின. கே. எஸ். வேங்கடரமணியைப் பின்பற்றிச் சங்கரராம் தன் நாவலை Love of the Dust என்று ஆங்கிலத் தில் எழுதினார். குடியானவன் தன் மண்ணை நேசிக்கிற அளவு வேறு எதையும் நேசிப்பதில்லை என்கிற ஒரு அடிப்படை விஷயத்தை ஒரு மனுஷ்யப் பார்வையுடன் இந்த நாவலில் விவரித்திருக்கிறார்" | க.நா.சுப்ரமணியம் இந்நாவலின் இலக்கிய இடத்தை இவ்வண்ணம் வரையறை செய்கிறார் "நாற்பதுகளின் ஆரம்ப ஆண்டுகளில் தமிழ் நாவலின் இலக்கிய மறுமலர்ச்சியைச் சந்தேகத்துக் கிடமில்லாமல் தொடங்கி வைத்தவர் சங்கரராம். மண்ணாசை என்கிற அவர் நாவல் நாற்பது களிலும் பின்னரும் ஏற்பட்ட ஒரு நாவல் கலை வளத்துக்கு முன்னோடியாகச் செயல்பட்டது" இந்நாவலின் பகைப்புலத்தை க.நா.சுப்ரமணியம் இவ்வாறு சொல்கிறார் "மண்ணாசை நாவல் கலையின் ஒரு சிகரத்தை எட்டிப் பிடித்தது என்று சொல்ல வேண்டும். கிராமத்துக்குத் திரும்பிப்போ, நகரங்களை நம்பாதே என்று ஒரு இயக்கம் இருபதுகளிலும் முப்பதுகளிலும் தீவிரமாக இருந்தது. இதன் ஒரு கூறு மகாத்மாகாந்தியின் சிந்தனைகளையும் தொட்டது என்று சொல்லலாம். இலக்கியத்தில் இதன் முதல் நவீன ஆரம்பம் என்று நட் ஹாம்ஸனின் நிலவளத் தைச் சொல்லவேண்டும். 1919-ல் அதற்கு நோபல் இலக்கியப் பரிசு கிடைத்தது பரவலாக இந்தியாவிலும் பேசப்பட்டது என்று தெரிகிறது. பாரதியார் அந்த நாவலையும், நாவ லாசிரியர் பற்றியும், பத்திரிகாசிரியராக ஒரு குறிப்பு எழுதி யிருக்கிறார். இந்தக் கிராமத்துக்குத் திரும்பிப்போ’ இயக்கத்தின் செயல்பாடாகவே கே. எஸ். வேங்கடரமணியின் இரண்டு நாவல்களையும் (முருகன் ஓர் உழவன், தேசபக்தன் கந்தன்) கவனிக்கலாம். அவை ஆங்கிலத்தில் ஏற்படுத்திய தாக்க அலைகளை விட அதிக மாகத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டபோது ஏற்படுத்தின. கே. எஸ். வேங்கடரமணியைப் பின்பற்றிச் சங்கரராம் தன் நாவலை Love of the Dust என்று ஆங்கிலத் தில் எழுதினார். குடியானவன் தன் மண்ணை நேசிக்கிற அளவு வேறு எதையும் நேசிப்பதில்லை என்கிற ஒரு அடிப்படை விஷயத்தை ஒரு மனுஷ்யப் பார்வையுடன் இந்த நாவலில் விவரித்திருக்கிறார்" | ||
"மண்ணாசை தமிழ்நாட்டுக் கிராமவாழ்வின் வரலாறு. தன் கொள்கைக்காக இறுதிவரைக்கும் போராடிய குடியானவனின் வீரத்தைவர்ணிக்கும் காவியம்" என்று விமர்சகர் கா.ஸ்ரீ.ஸ்ரீயும் 'காவேர் ஆற்றங்கரை மாமரத்தின் மணம் வீசுகிறது. காற்றில் தொப்பு தொப்பென்று விழும் தேங்காயின் ஒலி கேட்கிறது. அருவிகளின் இன்னிசை காதில் விழுகிறது. வடிகால் கரைமேல் கிடக்கிற ஈரக்களி பிசுக்கு பிசுக்கென ஒட்டிக்கொள்கிறது கிராமவாசிகளின் பேச்சுக்கள் உள்ளபடி நம் செவிகளில் விழுகின்றன’ என்று அறிஞர் பெ.நா. | "மண்ணாசை தமிழ்நாட்டுக் கிராமவாழ்வின் வரலாறு. தன் கொள்கைக்காக இறுதிவரைக்கும் போராடிய குடியானவனின் வீரத்தைவர்ணிக்கும் காவியம்" என்று விமர்சகர் கா.ஸ்ரீ.ஸ்ரீயும் 'காவேர் ஆற்றங்கரை மாமரத்தின் மணம் வீசுகிறது. காற்றில் தொப்பு தொப்பென்று விழும் தேங்காயின் ஒலி கேட்கிறது. அருவிகளின் இன்னிசை காதில் விழுகிறது. வடிகால் கரைமேல் கிடக்கிற ஈரக்களி பிசுக்கு பிசுக்கென ஒட்டிக்கொள்கிறது கிராமவாசிகளின் பேச்சுக்கள் உள்ளபடி நம் செவிகளில் விழுகின்றன’ என்று அறிஞர் [[பெ.நா. அப்புசாமி ஐயர்|பெ.நா.அப்புஸ்வாமி]]யும் இந்நாவல் பற்றி சொல்கிறார்கள். தமிழில் மிகையில்லாத யதார்த்தவாத நோக்குடன் கிராமிய வாழ்க்கையை எழுதிக்காட்டிய நாவல் மண்ணாசை. ஆனால் அது மொழியாக்கம் செய்யப்பட்டதாகையால் அதன் மொழியில் வட்டாரவழக்கு போன்ற பண்பாட்டு நுட்பங்கள் இல்லை. இந்தியா முழுக்க குடியானவனின் துயரைச்சொல்லும் நாவல்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளிவந்தன. அவற்றில் மண்ணாசையும் ஒன்று. | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://www.academia.edu/1074539/The_Love_of_Dust_by_Shankar_Ram The Love of Dust, by Shankar Ram | William J Jackson - Academia.edu - (PDF)] | * [https://www.academia.edu/1074539/The_Love_of_Dust_by_Shankar_Ram The Love of Dust, by Shankar Ram | William J Jackson - Academia.edu - (PDF)] |
Revision as of 09:21, 23 September 2023
மண்ணாசை (1940) சங்கரராம் எழுதிய நாவல். இந்நாவலை சங்கரராம் ஆங்கிலத்தில் முதலில் எழுதி பின்னர் தமிழாக்கம் செய்தார். தமிழ்நாட்டுக் கதைக்களம் கொண்ட நாவல்களில் வேளாண்குடிகளின் வாழ்க்கையை யதார்த்தமாகச் சொன்ன நாவல்களில் முக்கியமானதாக இது கருதப்படுகிறது.
எழுத்து, பிரசுரம்
சங்கரராம் இந்நாவலை 1938-ல் 'The love of dust' என்னும் தலைப்பில் எழுதி ஏ.என்பூர்ணா &கம்பெனி வெளியிட்டாக கொண்டுவந்தார். அதன் தமிழ் வடிவம் அவராலேயே மொழியக்கம் செய்யப்பட்டு 1940-ல் வெளிவந்தது.
கதைச்சுருக்கம்
வீரமங்கலம் என்னும் சிறு கிராமம் இதன் கதைக்களம். பரம்பரை விவசாயியான வெங்கடாச்சலம் 'சீட்டுக்கிளிச்சான் கடலை’ என்னும் நிலக்கடலை பயிரிடுவதற்காகக் கடன் வாங்குகிறார். தீ விபத்தில் பயிர் தீய்ந்துவிடுகிறது. ஆகவே நிலத்தில் ஒரு பகுதியை விற்று கடனை அடைக்கலாமென அனைவரும் சொன்னாலும் மண்ணாசையால் அதற்கு எதிராக இருக்கிறார். கடனுக்கு ஈடாக வைத்த நஞ்சைநிலம் கடன்கொடுத்த மீனாட்சிக்குரியதாகிறது. வெங்கடாச்சலத்தின் வளர்ப்பு மகன் வேலு. அவனுடைய இளமைக்கால காதலி வள்ளி. மகன் வேலு மீது கொலைக்குற்றம் சாட்டப்படும்போதுதான் மண்ணாசையை வென்று நிலத்தை விற்று மகனுக்கு உதவ முன்வருகிறார். வேலு விரும்பும் வள்ளியை அவள் தாயார் கொலையுண்ட மாயாண்டி யின் மகனுக்கு மணமுடிக்க முயல்கிறாள். இறுதியில் மாயாண்டியின் மூத்தமகன் மாயாண்டியை கொன்றதாக ஒப்புக்கொள்கிறான். பினாங்கு சென்றிருந்த வேலுவின் தகப்பன் தன் சொத்துக்களை வேலுவுக்கு அளித்துவிட்டு காலமாகிறான். மண்ணாசையால் வாழ்க்கை முழுக்க துன்பத்தை அனுபவித்த வெங்கடாசலம் மறைகிறார்.
கதைமாந்தர்
- வெங்கடாச்சலம் - கதைத்தலைவர், மண்ணின்மேல் பெரும் பற்றுறுதிகொண்டவர்
- வேலன் - வெங்கடாச்சலத்தின் வளர்ப்புமகன்
- வள்ளி - வெங்கடாச்சலத்தின் காதலி
- மீனாட்சி - நிலத்தை முதலீடாக எண்ணும் பணவெறிகொண்ட பெண்
இலக்கிய இடம்
க.நா.சுப்ரமணியம் இந்நாவலின் இலக்கிய இடத்தை இவ்வண்ணம் வரையறை செய்கிறார் "நாற்பதுகளின் ஆரம்ப ஆண்டுகளில் தமிழ் நாவலின் இலக்கிய மறுமலர்ச்சியைச் சந்தேகத்துக் கிடமில்லாமல் தொடங்கி வைத்தவர் சங்கரராம். மண்ணாசை என்கிற அவர் நாவல் நாற்பது களிலும் பின்னரும் ஏற்பட்ட ஒரு நாவல் கலை வளத்துக்கு முன்னோடியாகச் செயல்பட்டது" இந்நாவலின் பகைப்புலத்தை க.நா.சுப்ரமணியம் இவ்வாறு சொல்கிறார் "மண்ணாசை நாவல் கலையின் ஒரு சிகரத்தை எட்டிப் பிடித்தது என்று சொல்ல வேண்டும். கிராமத்துக்குத் திரும்பிப்போ, நகரங்களை நம்பாதே என்று ஒரு இயக்கம் இருபதுகளிலும் முப்பதுகளிலும் தீவிரமாக இருந்தது. இதன் ஒரு கூறு மகாத்மாகாந்தியின் சிந்தனைகளையும் தொட்டது என்று சொல்லலாம். இலக்கியத்தில் இதன் முதல் நவீன ஆரம்பம் என்று நட் ஹாம்ஸனின் நிலவளத் தைச் சொல்லவேண்டும். 1919-ல் அதற்கு நோபல் இலக்கியப் பரிசு கிடைத்தது பரவலாக இந்தியாவிலும் பேசப்பட்டது என்று தெரிகிறது. பாரதியார் அந்த நாவலையும், நாவ லாசிரியர் பற்றியும், பத்திரிகாசிரியராக ஒரு குறிப்பு எழுதி யிருக்கிறார். இந்தக் கிராமத்துக்குத் திரும்பிப்போ’ இயக்கத்தின் செயல்பாடாகவே கே. எஸ். வேங்கடரமணியின் இரண்டு நாவல்களையும் (முருகன் ஓர் உழவன், தேசபக்தன் கந்தன்) கவனிக்கலாம். அவை ஆங்கிலத்தில் ஏற்படுத்திய தாக்க அலைகளை விட அதிக மாகத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டபோது ஏற்படுத்தின. கே. எஸ். வேங்கடரமணியைப் பின்பற்றிச் சங்கரராம் தன் நாவலை Love of the Dust என்று ஆங்கிலத் தில் எழுதினார். குடியானவன் தன் மண்ணை நேசிக்கிற அளவு வேறு எதையும் நேசிப்பதில்லை என்கிற ஒரு அடிப்படை விஷயத்தை ஒரு மனுஷ்யப் பார்வையுடன் இந்த நாவலில் விவரித்திருக்கிறார்"
"மண்ணாசை தமிழ்நாட்டுக் கிராமவாழ்வின் வரலாறு. தன் கொள்கைக்காக இறுதிவரைக்கும் போராடிய குடியானவனின் வீரத்தைவர்ணிக்கும் காவியம்" என்று விமர்சகர் கா.ஸ்ரீ.ஸ்ரீயும் 'காவேர் ஆற்றங்கரை மாமரத்தின் மணம் வீசுகிறது. காற்றில் தொப்பு தொப்பென்று விழும் தேங்காயின் ஒலி கேட்கிறது. அருவிகளின் இன்னிசை காதில் விழுகிறது. வடிகால் கரைமேல் கிடக்கிற ஈரக்களி பிசுக்கு பிசுக்கென ஒட்டிக்கொள்கிறது கிராமவாசிகளின் பேச்சுக்கள் உள்ளபடி நம் செவிகளில் விழுகின்றன’ என்று அறிஞர் பெ.நா.அப்புஸ்வாமியும் இந்நாவல் பற்றி சொல்கிறார்கள். தமிழில் மிகையில்லாத யதார்த்தவாத நோக்குடன் கிராமிய வாழ்க்கையை எழுதிக்காட்டிய நாவல் மண்ணாசை. ஆனால் அது மொழியாக்கம் செய்யப்பட்டதாகையால் அதன் மொழியில் வட்டாரவழக்கு போன்ற பண்பாட்டு நுட்பங்கள் இல்லை. இந்தியா முழுக்க குடியானவனின் துயரைச்சொல்லும் நாவல்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளிவந்தன. அவற்றில் மண்ணாசையும் ஒன்று.
உசாத்துணை
- The Love of Dust, by Shankar Ram | William J Jackson - Academia.edu - (PDF)
- மண்ணாசை என்னும் மண்ணின் குரல் எஸ்.ராமகிருஷ்ணன்
- வாசிப்போம் வாசிப்போம்: இருபத்தேழாம் நாள் வாசிப்பனுபவம் (28.09.2019)
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.