வே.க. நாகமணிப்புலவர்: Difference between revisions
No edit summary |
(Added First published date) |
||
| Line 16: | Line 16: | ||
* [http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#2 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா] | * [http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#2 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா] | ||
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்|மு.கணபதிப்பிள்ளை|பாரி நிலையம் வெளியீடு, 1967] | * [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்|மு.கணபதிப்பிள்ளை|பாரி நிலையம் வெளியீடு, 1967] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|11-Sep-2023, 03:22:48 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:புலவர்கள்]] | [[Category:புலவர்கள்]] | ||
Revision as of 16:11, 13 June 2024
வே.க. நாகமணிப்புலவர் (1891-1933) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். வழிநடைச்சிந்து முக்கியமான படைப்பு.
வாழ்க்கைக் குறிப்பு
யாழ்ப்பாணத்தின் சப்த தீவுகளில் ஒன்றான நயினாதீவில் வே.க. நாகமணிப்புலவர் 1891-ல் பிறந்தார். வீரகத்திப்பிள்ளை ஆசிரியரின் திண்ணைப்பள்ளியில் பயின்றார்.தில்லையம்பல வித்தியாசாலை சோமசுந்தர ஐயரிடத்தில் தமிழிலக்கண இலக்கியங்களைக் கற்றார். சிறிதுகாலம் யாழ்ப்பாணம் வணிகர்களுக்கு கணக்கெழுதும் தொழிலில் இருந்தார். நயினாத்தீவில் கிராம சங்கத்தலைவராக ஐந்தாண்டுகாலம் பணியாற்றினார்.
இலக்கிய வாழ்க்கை
வே.க. நாகமணிப்புலவர் 1902-ல் யாழ்ப்பாணத்தில் தர்மசீலரான வை. வல்லிபுரம் கட்டுவித்த கெங்கா சத்திரத்தின் பேரில் காரைதீவில் இருந்து வரும் வழி மார்க்கங்களைக் குறித்து 'வழிநடைச்சிந்து' என்ற நூலை நாகமணிப் புலவர் இயற்றினார். இது வே.க.த. சுப்பிரமணியம் அவர்களால் ஸ்ரீ கணேச இயந்திரசாலையில் 1934-ல் பதிப்பிக்கப்பட்டது. 'நயினை நிரோட்டக யமகவந்தாதி', 'நயினை மான்மியம்' ஆகிய நூல்களையும் எழுதினார்.
நூல்கள் பட்டியல்
சிந்து
- வழிநடைச்சிந்து
பிற
- நயினை நிரோட்டகயமகவந்தாதி
- நயினை மான்மியம்
உசாத்துணை
- Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)
- ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் – தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை
- சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந. வீ. ஜெயராமன்
- 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்|மு.கணபதிப்பிள்ளை|பாரி நிலையம் வெளியீடு, 1967
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
11-Sep-2023, 03:22:48 IST