under review

பி. சி. சேகர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 11: Line 11:
டெல்லியில் இளங்கலைப் படிப்பை முடித்த பி. சி. சேகர்,  சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் இரசாயனப் பொறியியலிலும்  இளங்கலைப் பட்டம் பெறத் திட்டமிட்டார். பல்கலைக்கழகத்தின் கல்விப் பருவம் தொடங்குவதற்கு முன், பி. சி. சேகர் மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தில் பணிபுரிய விண்ணப்பித்தார். 1949-ல் மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தில் துணை வேதியியலாளராகப்(Assistant Chemist) பணியைத் தொடங்கினார்.  

பி. சி. சேகர் மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தில் பணிபுரிந்த காலக்கட்டத்திலே, 1953-ஆம் ஆண்டில் அமெரிக்க அரசின் துணையோடு மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் 1954-ஆம் ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்றார். ர் 1970-இல்  சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
பி. சி. சேகர் மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தில் பணிபுரிந்த காலக்கட்டத்திலே, 1953-ஆம் ஆண்டில் அமெரிக்க அரசின் துணையோடு மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் 1954-ஆம் ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்றார். 1970-இல்  சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
1950-ஆம் ஆண்டில், தமது 21-ஆவது வயதில் பி. சி. சேகர் சுகுமாரி நாயர் என்பவரைத் திருமணம் செய்தார். பி. சி. சேகர் - சுகுமாரி நாயர் இணையருக்கு மொத்தம் 4 பிள்ளைகள். பி. சி .சேகரின் இரண்டாவது மகனான கோபிநாத் சேகர், ‘Sekhar Research Innovations; SRI’ எனும் பெயரில் தொழில்நுட்ப புத்தாக்க ஆய்வு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

== இறப்பு ==
செப்டம்பர் 6, 2006-ல்  பி. சி. சேகர் சென்னையில் உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தபோது மாரடைப்பால் காளியப்பா மருத்துவமனையில் இறந்தார்.

== மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தில் பி. சி. சேகர் ==

Line 25: Line 22:
1959-ஆம் ஆண்டு பி. சி. சேகர் மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தில் மூத்த பாலிமர் வேதியியலாளராக நியமிக்கப்பட்டார். பாலிமர் வேதியியல் குழு என்ற குழுவினை உருவாக்கி இயற்கை ரப்பர் தொடர்பான ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தினார். 1964-ஆம் ஆண்டு மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் இராயசனப் பிரிவின் தலைவராகப் நியமிக்கப்பட்டார். அக்காலக்கட்டத்தில்  உலகளாவிய ரீதியில் இயற்கை ரப்பர் குறித்த மாநாடுகளில் சிறந்த பேச்சாளராகவும் அறிவியலாளராகவும் கருதப்பட்டார்.

[[File:பி. சி. சேகர் 4.jpg|thumb|310x310px|''இளவரசி மார்கரெட்'']]

இயற்கை ரப்பர் தொழில்துறையில் தொடர்ந்து பங்களிப்பு வழங்கிய பி. சி. சேகர், 1966-ஆம் ஆண்டு மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் தலைவர் ஆனார். மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தில் பிரித்தானியர்கள் மட்டுமே தலைமை பதவியை ஏற்று வந்த காலக்கட்டத்தில், பி. சி. சேகர் முதல் மலேசியராகவும் இந்தியராகவும் ஆசியராகவும் தலைமைப் பதவியில் நியமிக்கப்பட்டார்.
இயற்கை ரப்பர் தொழில்துறையில் தொடர்ந்து பங்களிப்பு வழங்கிய பி. சி. சேகர், 1966-ஆம் ஆண்டு மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் தலைவர் ஆனார். மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தில் பிரித்தானியர்கள் மட்டுமே தலைமை பதவியை ஏற்று வந்த காலக்கட்டத்தில், பி. சி. சேகர் அப்பதவியை வகித்த முதல் மலேசியர், இந்தியர்,ஆசியர்.

1966-ல் இயற்கை ரப்பரைக் காட்டிலும் செயற்கை ரப்பருக்கு அதிக வரவேற்பு கிடைக்கத் தொடங்கிய காலக்கட்டத்தில் மலேசியாவின் இயற்கை ரப்பரின் தரத்தை உயர்த்தும் வகையில் பி. சி. சேகர் பல ஆய்வுகளையும் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார். பி.சி. சேகர் 25 காப்புரிமைகள் பெற்றுள்ளார். அதோடு இயற்கை ரப்பர் குறித்து 137 ஆய்வுதாள்களையும் வெளியிட்டுள்ளார். உலக ரப்பர் உற்பத்திச் சந்தையில் மலேசியாவின் ரப்பர் முக்கிய இடத்தைப் பெற பி. சி. சேகர் உறுதுணையாக இருந்தார்.

Line 35: Line 32:
மலேசியாவில் ரப்பரின்  தரத்தை உயர்த்தும் வகையில் முதன் முறையாக மலேசியத் தர ரப்பர் திட்டம் எனும் எஸ்.எம்.ஆர் திட்டத்தை உருவாக்கியவர் பி. சி. சேகர். 1965-ல் பி. சி. சேகர் எஸ்.எம்.ஆர் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். உலகச் சந்தையில் செயற்கை ரப்பருக்கு வரவேற்பு அதிகரித்த காலக்கட்டத்தில், மலேசியாவின் இயற்கை ரப்பரின் தரத்தை உயர்த்தும் வகையில் எஸ்.எம்.ஆர் திட்டம் அமைந்தது.

தொடக்கத்தில் வண்ணம் மற்றும் குமிழ்களின் அடிப்படையிலே மலேசியாவில் ரப்பரின் தரம் நிர்ணயிக்கப்பட்டது. அந்த மதிப்பீட்டு முறையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் எஸ்.எம்.ஆர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. காட்சி வழியில் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட ரப்பரின் தரம், தொழில்நுட்பத்தின் மூலம் எஸ்.எம்.ஆர் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டது. தரமான ரப்பர்களை அடையாளம் காண எஸ்.எம்.ஆர் திட்டம் துணைபுரிந்ததால், உலக ரப்பர் உற்பத்திச் சந்தையில் மலேசியாவின் இயற்கை ரப்பர் தரம் உயர்ந்ததாகக்  கருதப்பட்டது. 1973-ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து அனுப்பப்பட்ட 1400000 டன் ரப்பர்களில் 400,000க்கும் மேற்பட்ட ரப்பர் எஸ்.ஆம்.ஆர் தரம் பெற்றவை.
தொடக்கத்தில் வண்ணம் மற்றும் குமிழ்களின் அடிப்படையிலே மலேசியாவில் ரப்பரின் தரம் நிர்ணயிக்கப்பட்டது. அந்த மதிப்பீட்டு முறையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் எஸ்.எம்.ஆர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ரப்பரின் தரத்தை நிர்ணயிக்கும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. தரமான ரப்பர்களை அடையாளம் காண எஸ்.எம்.ஆர் திட்டம் துணைபுரிந்ததால், உலக ரப்பர் உற்பத்திச் சந்தையில் மலேசியாவின் இயற்கை ரப்பர் தரம் உயர்ந்ததாகக்  கருதப்பட்டது. 1973-ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து அனுப்பப்பட்ட 1400000 டன் ரப்பர்களில் 400,000க்கும் மேற்பட்ட ரப்பர் எஸ்.ஆம்.ஆர் தரம் பெற்றவை.

எஸ்.எம்.ஆர் திட்டம் ரப்பர் மூலம் உருவாக்கப்படும் தொழிற்துறை மேம்பாட்டிற்குப் பங்கினையாற்றியது. இயற்கை ரப்பர் மூலமாக ரப்பர் குழாய், உருளிப்பட்டை, கையுறை, நிலநடுக்கப் பேரழிவுத் தடுப்புச் சாதனங்கள் போன்ற தயாரிப்புகளைச் செய்வதைக் குறித்து ஆழமான ஆய்வுகளைச் செய்தார் பி. சி. சேகர். எஸ்.எம்.ஆர் தரம் பெற்ற ரப்பர்கள் உருளிப்பட்டை தயாரிப்பில் முக்கியப் பங்கினையாற்றியது.

====== தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் ======

ஏப்ரல் 1983ஆம் ஆண்டு பி. சி. சேகர் மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். நாளாந்த சம்பளத்திலிருந்து மாதச் சம்பளம் பி. சி. சேகரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம், ஓய்வூதியம், ஓய்வூதியப் பயன்களும் கிடைக்கின்றன.
ஏப்ரல் 1983-ல் பி. சி. சேகர் மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு தினச் சம்பளத்துக்கு பதிலாக மாதச் சம்பளம் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். . இப்போது மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம், ஓய்வூதியம், ஓய்வூதியப் பயன்களும் கிடைக்கின்றன.

====== ரப்பர் சிறு தோட்டக்காரர்களுக்கான ஆலோசனை, பயிற்சி வழங்குதல் ======

[[File:பி. சி. சேகர் 6.jpg|thumb]]
[[File:பி. சி. சேகர் 6.jpg|thumb]]
1960களில் மலேசியாவில் ரப்பர் சிறு தோட்டக்காரர்கள் 60% ரப்பர் நிலத்தைக் கொண்டிருந்தாலும் 45% ரப்பர் மட்டுமே உற்பத்தியானது. இச்சிக்கலைக் களையும் வகையில் பி. சி. சேகர் ரப்பர் சிறு தோட்டக்காரர்களின் நலன் கருதியும் அவர்களுக்கு ஏற்ற பயிற்சிகளை வழங்கவும் ரிஸ்டா(Rubber Industry Smallholders Development Authority) எனும் அமைப்பைத் தோற்றுவிக்க ஆலோசித்தார். 1981இல் ரிஸ்டா அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. அதோடு, பி. சி. சேகர் மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் தலைவராக இருந்த காலத்தில், ரப்பர் சிறு தோட்டக்காரர்களுக்கும் தோட்ட இளைஞர்களுக்கும் ரப்பர் ஆய்வுக் கழகம் ரப்பர் பயிர் தொடர்புடைய பயிற்சிகள் வழங்கியது.
1960-களில் மலேசியாவில் ரப்பர் சிறு தோட்டக்காரர்கள் 60% ரப்பர் நிலத்தைக் கொண்டிருந்தாலும் 45% ரப்பர் மட்டுமே உற்பத்தியானது. இச்சிக்கலைக் களையும் வகையில் பி. சி. சேகர் ரப்பர் சிறு தோட்டக்காரர்களின் நலன் கருதியும் அவர்களுக்கு ஏற்ற பயிற்சிகளை வழங்கவும் ரிஸ்டா(Rubber Industry Smallholders Development Authority) எனும் அமைப்பைத் 1981-ல் தோற்றுவித்தார். பி. சி. சேகர் மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் தலைவராக இருந்த காலத்தில், ரப்பர் சிறு தோட்டக்காரர்களுக்கும் தோட்ட இளைஞர்களுக்கும் ரப்பர் ஆய்வுக் கழகம் ரப்பர் பயிர் தொடர்புடைய பயிற்சிகள் வழங்கியது.

====== ரப்பர் ஆய்வுக் கழகத்திலும் கழகத்தின் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்தவர்களும் நிலம் வேண்டி கோரிக்கையிட்டல் ======

2005ஆம் ஆண்டு மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்திலும் கழகத்தின் ரப்பர் தோட்டங்களிலும் வேலை செய்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ஓர் ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்க வேண்டும் என்று மலேசிய அரசிடம் பி. சி. சேகர் கேட்டுக் கொண்டார். அந்த நிலத்தை அவர்களின் அடுத்த தலைமுறையினர் பயன்படுத்திக் கொள்ள வழிவகைகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். பி. சி. சேகரின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது.  
2005-ஆம் ஆண்டு மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்திலும் கழகத்தின் ரப்பர் தோட்டங்களிலும் வேலை செய்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ஓர் ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்க வேண்டும் என்று மலேசிய அரசிடம் பி. சி. சேகர் கேட்டுக் கொண்டார். அந்த நிலத்தை அவர்களின் அடுத்த தலைமுறையினர் பயன்படுத்திக் கொள்ள வழிவகைகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். பி. சி. சேகரின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது.  

====== விளையாட்டுத் துறை ======
====== விளையாட்டுத் துறை ======
ரப்பர் ஆய்வுக் கழகத்தின் மனமகிழ் நடவடிக்கைக்கான சங்கம் 1965ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. ரப்பர் ஆய்வுக் கழகத்தில் விளையாட்டாளர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இச்சங்கம் உருவாக்கப்பட்டது. 1965இல் இச்சங்கம் உருவாக்கப்பட்டபோது, ரப்பர் ஆய்வுக் கழகத்தின் பங்களாக்களில் ஒன்றை கிளப்ஹவுசாக ஒதுக்குவதற்கு பி. சி. சேகர் பொறுப்பேற்றார்.
ரப்பர் ஆய்வுக் கழகத்தின் மனமகிழ் நடவடிக்கைக்கான சங்கம் 1965-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. ரப்பர் ஆய்வுக் கழகத்தில் விளையாட்டாளர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இச்சங்கம் உருவாக்கப்பட்டது. 1965-ல் இச்சங்கம் உருவாக்கப்பட்டபோது, ரப்பர் ஆய்வுக் கழகத்தின் பங்களாக்களில் ஒன்றை கிளப்ஹவுசாக ஒதுக்குவதற்கு பி. சி. சேகர் பொறுப்பேற்றார்.

பி. சி. சேகர் மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் தலைவராகப் பணியாற்றிய காலக்கட்டத்தில், இச்சங்கம் ஹாக்கி, கிரிக்கெட், பூப்பந்து விளையாட்டுகளில் சிறந்து விளங்கியது. 1975இல் ஹாக்கி உலகக்கோப்பு விளையாட்டில், ரப்பர் ஆய்வுக் கழகத்தைச் சார்ந்த நான்கு ஹாக்கி வீரர்கள் நான்காவது இடத்தைப் பெற்றனர்.
பி. சி. சேகர் மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் தலைவராகப் பணியாற்றிய காலக்கட்டத்தில், இச்சங்கம் ஹாக்கி, கிரிக்கெட், பூப்பந்து விளையாட்டுகளில் சிறந்து விளங்கியது. 1975-ல் ஹாக்கி உலகக்கோப்பை விளையாட்டில், ரப்பர் ஆய்வுக் கழகத்தைச் சார்ந்த நான்கு ஹாக்கி வீரர்கள் நான்காவது இடத்தைப் பெற்றனர்.
[[File:பி. சி. சேகர் 7.jpg|thumb]]
[[File:பி. சி. சேகர் 7.jpg|thumb]]

Line 62: Line 59:
* B.C. Sekhar : Malaysia's man for all season- பதிப்பகம் அகாடமி ஆஃப் சயின்ஸ் மலேசியா, 2010.

== விருதுகள் ==
== விருதுகள், சிறப்புகள் ==

* பிலிப்பைன்ஸ் நாட்டின் மக்சசே விருது, 1973

Line 70: Line 67:
* சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டம், 1970

== அங்கீகாரம் ==
====== சிறப்புகள் ======

* சேகர் தங்கப் பதக்கம் (Sekhar Gold Medal)
* சர்வதேச ரப்பர் ஆராய்ச்சி மேம்பாட்டு வாரியம் மூலம் உலகளவில் ரப்பர் துறையில் சிறந்து விளங்கும் ரப்பர் தொழில்துறை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பதக்கத்தில் ஒன்று பி. சி. சேகரின் பெயரில் ‘சேகர் தங்கப் பதக்கம்’ என்று வழங்கப்படுகின்றது.
* பி. சி. சேகரின் பெயரைக் கேரளாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் விரைவில் நிறுவவிருக்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பள்ளிகளில் ஒன்றுக்கு மாநில அரசு பெயரிடுவதாக 2021ஆம் ஆண்டு அறிவித்துள்ளது.

சர்வதேச ரப்பர் ஆராய்ச்சி மேம்பாட்டு வாரியம் மூலம் உலகளவில் ரப்பர் துறையில் சிறந்து விளங்கும் ரப்பர் தொழில்துறை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பதக்கத்தில் ஒன்று பி. சி. சேகரின் பெயரில் ‘சேகர் தங்கப் பதக்கம்’ என்று வழங்கப்படுகின்றது.
== நூல்கள் ==
 
* B.C. Sekhar : Malaysia's man for all season- பதிப்பகம் அகாடமி ஆஃப் சயின்ஸ் மலேசியா, 2010.
* கேரள அரசு பி. சி. சேகரைக் கௌரவித்தல்
 
பி. சி. சேகரின் பெயரைக் கேரளாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் விரைவில் நிறுவவிருக்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பள்ளிகளில் ஒன்றுக்கு மாநில அரசு பெயரிடுவதாக 2021ஆம் ஆண்டு அறிவித்துள்ளது.

== உசாத்துணை ==
== உசாத்துணை ==

Revision as of 11:15, 9 September 2023

பி. சி. சேகர்.jpg

பி. சி. சேகர் (பாலச்சந்திர சக்கிங்கல் சேகர், Balachandra Chakkingal Sekhar) மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தில் பங்காற்றிய முக்கிய அறிவியலாளர். மலேசியாவில் இயற்கை ரப்பர் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு ரப்பர், செம்பனைத் தொழிற்துறைகளை நவீனப்படுத்தினார். மலேசியாவின் குறிப்பிடத்தக்க அறிவியலாளராகவும், கல்வியாளராகவும், நவீன ரப்பர் தொழிற்துறையின் தந்தையாகவும் பி. சி. சேகர் அறியப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

பி. சி. சேகர் நவம்பர் 17, 1929-ல் சுங்கை பூலோவில் உள்ள உலு பூலு தோட்டத்தில் அச்சுத சேகர் நாயர் - சீதாலட்சுமி அம்மாள் இணையருக்கு மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தார்.

பி. சி. சேகரின் தந்தை அச்சுத சேகர் நாயர் தமது 17-ஆவது வயதில் கேரளாவிலிருந்து மலாயாவில் ரப்பர் தோட்டத்தில் நடத்துனராகப் பணிப்புரியும் தமது சகோதரனுடன் இணைந்து பணிபுரிய மலாயாவிற்கு வந்தார். அச்சுத சேகர் நாயர் மலாயாவில் 14,000 ஏக்கர் ரப்பர் பயிரிடும் நடவடிக்கையில் பங்கேற்று பின்னர் எஸ்டேட் உதவியாளராகப் பணியாற்றினார். எஸ்டேட் உதவியாளருக்கு மேல் உள்ள பதவிகள் ஐரோப்பியர்களுக்கு ஒதுக்கப்பட்டதால், அச்சுத சேகர் நாயரால் மேற்பதவிகளில் பணியாற்ற இயலவில்லை. அதனால், அச்சுத சேகர் நாயர் தமது பிள்ளைகளுடன் கோலாலம்பூருக்கு மாற்றலாகினார்.

பி. சி. சேகர் தமது ஆரம்பக்கல்வியையும் இடைநிலைக்கல்வியையும் சுங்கை பூலோ மற்றும் கோலாலம்பூரில் பெற்றார். பின்னர், பி. சி. சேகர் தமது 19-வது வயதில் டெல்லி பல்கலைக்கழகத்தில் வேதியியலில் இளங்கலை அறிவியல் பட்டம் (BSc Chemistry) பெற்றார்.

பி. சி. சேகர் 2.jpg

டெல்லியில் இளங்கலைப் படிப்பை முடித்த பி. சி. சேகர், சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் இரசாயனப் பொறியியலிலும் இளங்கலைப் பட்டம் பெறத் திட்டமிட்டார். பல்கலைக்கழகத்தின் கல்விப் பருவம் தொடங்குவதற்கு முன், பி. சி. சேகர் மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தில் பணிபுரிய விண்ணப்பித்தார். 1949-ல் மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தில் துணை வேதியியலாளராகப்(Assistant Chemist) பணியைத் தொடங்கினார்.

பி. சி. சேகர் மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தில் பணிபுரிந்த காலக்கட்டத்திலே, 1953-ஆம் ஆண்டில் அமெரிக்க அரசின் துணையோடு மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் 1954-ஆம் ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்றார். 1970-இல் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

1950-ஆம் ஆண்டில், தமது 21-ஆவது வயதில் பி. சி. சேகர் சுகுமாரி நாயர் என்பவரைத் திருமணம் செய்தார். பி. சி. சேகர் - சுகுமாரி நாயர் இணையருக்கு மொத்தம் 4 பிள்ளைகள். பி. சி .சேகரின் இரண்டாவது மகனான கோபிநாத் சேகர், ‘Sekhar Research Innovations; SRI’ எனும் பெயரில் தொழில்நுட்ப புத்தாக்க ஆய்வு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தில் பி. சி. சேகர்

பி. சி. சேகர் 3.jpg

1949-இல் மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தில் துணை வேதியியலாளராகப்(Assistant Chemist) பணிபுரிய தொடங்கிய பி. சி. சேகர் மிச்சிகன் பல்கலைக்கழத்தில் பட்டம் பெற்ற பிறகு, மீண்டும் 1955-ல் மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தில் ஆய்வு அதிகாரியாகப் பணிபுரியத் தொடங்கினார். ஆய்வு அதிகாரியாகப் பணிபுரிந்த காலக்கட்டத்தில் பி. சி. சேகர் இயற்கை ரப்பர் குறித்த ஆராய்ச்சிகளையும் ஆய்வுகளையும் நடத்தினார். உலக அளவில் ரப்பர் குறித்து நடத்தப்படுகின்ற மாநாடுகளுக்குச் சென்றார். பி. சி. சேகர் இயற்கை ரப்பரைச் சந்தைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை அறியவும் தொழிற்துறை தேவைகளை மதிப்பிடவும் ஆராய்ச்சி அமைப்புகள் மற்றும் ரப்பர் பொருட்கள் உற்பத்தியாளர்களைத் தொடர்பு கொள்ள பிரிட்டனுக்குப் பயணம் மேற்கொண்டார். இயற்கை ரப்பர் குறித்த ஆய்வுதாள்களையும் வெளியிட்டார்.

1959-ஆம் ஆண்டு பி. சி. சேகர் மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தில் மூத்த பாலிமர் வேதியியலாளராக நியமிக்கப்பட்டார். பாலிமர் வேதியியல் குழு என்ற குழுவினை உருவாக்கி இயற்கை ரப்பர் தொடர்பான ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தினார். 1964-ஆம் ஆண்டு மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் இராயசனப் பிரிவின் தலைவராகப் நியமிக்கப்பட்டார். அக்காலக்கட்டத்தில் உலகளாவிய ரீதியில் இயற்கை ரப்பர் குறித்த மாநாடுகளில் சிறந்த பேச்சாளராகவும் அறிவியலாளராகவும் கருதப்பட்டார்.

இளவரசி மார்கரெட்

இயற்கை ரப்பர் தொழில்துறையில் தொடர்ந்து பங்களிப்பு வழங்கிய பி. சி. சேகர், 1966-ஆம் ஆண்டு மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் தலைவர் ஆனார். மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தில் பிரித்தானியர்கள் மட்டுமே தலைமை பதவியை ஏற்று வந்த காலக்கட்டத்தில், பி. சி. சேகர் அப்பதவியை வகித்த முதல் மலேசியர், இந்தியர்,ஆசியர்.

1966-ல் இயற்கை ரப்பரைக் காட்டிலும் செயற்கை ரப்பருக்கு அதிக வரவேற்பு கிடைக்கத் தொடங்கிய காலக்கட்டத்தில் மலேசியாவின் இயற்கை ரப்பரின் தரத்தை உயர்த்தும் வகையில் பி. சி. சேகர் பல ஆய்வுகளையும் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார். பி.சி. சேகர் 25 காப்புரிமைகள் பெற்றுள்ளார். அதோடு இயற்கை ரப்பர் குறித்து 137 ஆய்வுதாள்களையும் வெளியிட்டுள்ளார். உலக ரப்பர் உற்பத்திச் சந்தையில் மலேசியாவின் ரப்பர் முக்கிய இடத்தைப் பெற பி. சி. சேகர் உறுதுணையாக இருந்தார்.

பங்களிப்புகள்

எஸ்.எம்.ஆர் திட்டம் (Standard Malaysian Rubber (SMR) Scheme)
ராணி எலிசபெத் II அவர்களுக்குப் பி. சி. சேகர் ரப்பர் தோட்டத்தைக் காட்டுதல்

மலேசியாவில் ரப்பரின் தரத்தை உயர்த்தும் வகையில் முதன் முறையாக மலேசியத் தர ரப்பர் திட்டம் எனும் எஸ்.எம்.ஆர் திட்டத்தை உருவாக்கியவர் பி. சி. சேகர். 1965-ல் பி. சி. சேகர் எஸ்.எம்.ஆர் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். உலகச் சந்தையில் செயற்கை ரப்பருக்கு வரவேற்பு அதிகரித்த காலக்கட்டத்தில், மலேசியாவின் இயற்கை ரப்பரின் தரத்தை உயர்த்தும் வகையில் எஸ்.எம்.ஆர் திட்டம் அமைந்தது.

தொடக்கத்தில் வண்ணம் மற்றும் குமிழ்களின் அடிப்படையிலே மலேசியாவில் ரப்பரின் தரம் நிர்ணயிக்கப்பட்டது. அந்த மதிப்பீட்டு முறையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் எஸ்.எம்.ஆர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ரப்பரின் தரத்தை நிர்ணயிக்கும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. தரமான ரப்பர்களை அடையாளம் காண எஸ்.எம்.ஆர் திட்டம் துணைபுரிந்ததால், உலக ரப்பர் உற்பத்திச் சந்தையில் மலேசியாவின் இயற்கை ரப்பர் தரம் உயர்ந்ததாகக் கருதப்பட்டது. 1973-ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து அனுப்பப்பட்ட 1400000 டன் ரப்பர்களில் 400,000க்கும் மேற்பட்ட ரப்பர் எஸ்.ஆம்.ஆர் தரம் பெற்றவை.

எஸ்.எம்.ஆர் திட்டம் ரப்பர் மூலம் உருவாக்கப்படும் தொழிற்துறை மேம்பாட்டிற்குப் பங்கினையாற்றியது. இயற்கை ரப்பர் மூலமாக ரப்பர் குழாய், உருளிப்பட்டை, கையுறை, நிலநடுக்கப் பேரழிவுத் தடுப்புச் சாதனங்கள் போன்ற தயாரிப்புகளைச் செய்வதைக் குறித்து ஆழமான ஆய்வுகளைச் செய்தார் பி. சி. சேகர். எஸ்.எம்.ஆர் தரம் பெற்ற ரப்பர்கள் உருளிப்பட்டை தயாரிப்பில் முக்கியப் பங்கினையாற்றியது.

தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம்

ஏப்ரல் 1983-ல் பி. சி. சேகர் மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு தினச் சம்பளத்துக்கு பதிலாக மாதச் சம்பளம் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். . இப்போது மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம், ஓய்வூதியம், ஓய்வூதியப் பயன்களும் கிடைக்கின்றன.

ரப்பர் சிறு தோட்டக்காரர்களுக்கான ஆலோசனை, பயிற்சி வழங்குதல்
பி. சி. சேகர் 6.jpg

1960-களில் மலேசியாவில் ரப்பர் சிறு தோட்டக்காரர்கள் 60% ரப்பர் நிலத்தைக் கொண்டிருந்தாலும் 45% ரப்பர் மட்டுமே உற்பத்தியானது. இச்சிக்கலைக் களையும் வகையில் பி. சி. சேகர் ரப்பர் சிறு தோட்டக்காரர்களின் நலன் கருதியும் அவர்களுக்கு ஏற்ற பயிற்சிகளை வழங்கவும் ரிஸ்டா(Rubber Industry Smallholders Development Authority) எனும் அமைப்பைத் 1981-ல் தோற்றுவித்தார். பி. சி. சேகர் மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் தலைவராக இருந்த காலத்தில், ரப்பர் சிறு தோட்டக்காரர்களுக்கும் தோட்ட இளைஞர்களுக்கும் ரப்பர் ஆய்வுக் கழகம் ரப்பர் பயிர் தொடர்புடைய பயிற்சிகள் வழங்கியது.

ரப்பர் ஆய்வுக் கழகத்திலும் கழகத்தின் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்தவர்களும் நிலம் வேண்டி கோரிக்கையிட்டல்

2005-ஆம் ஆண்டு மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்திலும் கழகத்தின் ரப்பர் தோட்டங்களிலும் வேலை செய்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ஓர் ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்க வேண்டும் என்று மலேசிய அரசிடம் பி. சி. சேகர் கேட்டுக் கொண்டார். அந்த நிலத்தை அவர்களின் அடுத்த தலைமுறையினர் பயன்படுத்திக் கொள்ள வழிவகைகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். பி. சி. சேகரின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது.

விளையாட்டுத் துறை

ரப்பர் ஆய்வுக் கழகத்தின் மனமகிழ் நடவடிக்கைக்கான சங்கம் 1965-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. ரப்பர் ஆய்வுக் கழகத்தில் விளையாட்டாளர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இச்சங்கம் உருவாக்கப்பட்டது. 1965-ல் இச்சங்கம் உருவாக்கப்பட்டபோது, ரப்பர் ஆய்வுக் கழகத்தின் பங்களாக்களில் ஒன்றை கிளப்ஹவுசாக ஒதுக்குவதற்கு பி. சி. சேகர் பொறுப்பேற்றார்.

பி. சி. சேகர் மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் தலைவராகப் பணியாற்றிய காலக்கட்டத்தில், இச்சங்கம் ஹாக்கி, கிரிக்கெட், பூப்பந்து விளையாட்டுகளில் சிறந்து விளங்கியது. 1975-ல் ஹாக்கி உலகக்கோப்பை விளையாட்டில், ரப்பர் ஆய்வுக் கழகத்தைச் சார்ந்த நான்கு ஹாக்கி வீரர்கள் நான்காவது இடத்தைப் பெற்றனர்.

பி. சி. சேகர் 7.jpg

செம்பனைத் துறை

பி. சி. சேகர் மலேசியாவின் செம்பனை எண்ணெய் ஆராய்ச்சி நிறுவனத்தை அமைப்பதில் பங்கு வகித்தார். மலேசியாவின் செம்பனை எண்ணெய் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Palm Oil Research Institute of Malaysia, PORIM) நிறுவனராகவும் தலைவராகவும் செயல்பட்டார். எண்ணெய் மற்றும் கொழுப்புச் சக்தி குறித்த ஆராய்ச்சிக்கான முதன்மை நிறுவனங்களில் ஒன்றாக செம்பனை எண்ணெய் ஆராய்ச்சி நிறுவனம் விளங்கியது.

நூல்கள்

  • B.C. Sekhar : Malaysia's man for all season- பதிப்பகம் அகாடமி ஆஃப் சயின்ஸ் மலேசியா, 2010.

விருதுகள், சிறப்புகள்

  • பிலிப்பைன்ஸ் நாட்டின் மக்சசே விருது, 1973
  • பங்லிமா செத்தியா மக்கோத்தா விருது (தான் ஶ்ரீ விருது), 1976
  • ஜொகான் செத்தியா மக்கோத்தா விருது, 1969
  • கால்வி பதக்கம்(Colwyn Medal ), 1969
  • சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டம், 1970
சிறப்புகள்
  • சர்வதேச ரப்பர் ஆராய்ச்சி மேம்பாட்டு வாரியம் மூலம் உலகளவில் ரப்பர் துறையில் சிறந்து விளங்கும் ரப்பர் தொழில்துறை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பதக்கத்தில் ஒன்று பி. சி. சேகரின் பெயரில் ‘சேகர் தங்கப் பதக்கம்’ என்று வழங்கப்படுகின்றது.
  • பி. சி. சேகரின் பெயரைக் கேரளாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் விரைவில் நிறுவவிருக்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பள்ளிகளில் ஒன்றுக்கு மாநில அரசு பெயரிடுவதாக 2021ஆம் ஆண்டு அறிவித்துள்ளது.

நூல்கள்

  • B.C. Sekhar : Malaysia's man for all season- பதிப்பகம் அகாடமி ஆஃப் சயின்ஸ் மலேசியா, 2010.

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.