தமிழ் இதழ்கள்: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
தமிழில் | தமிழில் அச்சுத்தொழில்நுட்பம்1578 ல் அறிமுகம் ஆகியது. முதலில் அச்சிடப்பட்ட நூல் மோ. நேவிஸ் விக்டோரியாவின் தம்பிரான் வணக்கம் என்னும் நூல். தொடர்ந்து வெவ்வேறு நூல்களும், அறிவிக்கைகளும் அச்சிடப்பட்டன. 1802 ல் தமிழில் முதல் இதழ் தோன்றியது. தொடர்ந்து தமிழில் இதழ்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. | ||
==சொற்கள்== | |||
===== நூலுக்கான சொற்கள் ===== | |||
தமிழில் புத்தகத்தைக் குறிக்க வெவ்வேறு சொற்கள் உள்ளன. | |||
======நூல்====== | |||
ஏட்டுச்சுவடிகளை நூலால் சேர்த்துக் கட்டுவது என்னும் பொருளில் நூல் என்னும் சொல் தொடக்ககாலம் முதலே இருந்தது. இன்றும் அது பயன்படுத்தப்பட்டு வருகிறது. | |||
======புத்தகம்====== | |||
புஸ்தகம் என்னும் சம்ஸ்கிருதச் சொல்லில் இருந்து உருவான இச்சொல் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே தமிழில் புழக்கத்திற்கு வந்தது. பொஸ்தகம், பொத்தகம், புத்தகம் என்றும் புழங்குகிறது. | |||
======கிரந்தம்====== | |||
சம்ஸ்கிருதச் சொல்லான கிரந்தம் தமிழில் தொடக்க காலத்தில் நூல்களைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டது. | |||
======ஏடு====== | |||
ஓலைச்சுவடிகளைக் குறிக்கும் இச்சொல் புத்தகம், இதழ் ஆகியவற்றைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டது | |||
===== இதழ்களுக்கான சொற்கள் ===== | |||
இதழ்கள் உருவானபோது அவற்றைக் குறிக்கவும் வெவ்வேறு சொற்கள் பயன்படுத்தப்பட்டன | |||
====== சஞ்சிகை ====== | |||
சேர்த்துக் கட்டப்பட்டது, தொகுக்கப்பட்டது என்னும் பொருள் உடைய சம்ஸ்கிருதச் சொல் இது. இச்சொல்லை தமிழில் இதழ்கள் வெளிவந்தபோது பயன்படுத்தினர். | |||
====== பிரசுரம் ====== | |||
பொதுவாக வெளியிடுதல், பரப்புதல் என்னும் பொருள்கொண்ட சம்ஸ்கிருதச் சொல். வெளியீடு என்னும் சொல்லுக்கு நிகராக தொடக்க காலத்தில் இது பயன்படுத்தப்பட்டது. பிரசித்திகரணம் என்னும் சொல்லும் அரிதாகப் பயன்படுத்தப்பட்டது | |||
======பத்ரம்====== | |||
பத்ரம் என்னும் சொல் இலை, ஓலை ஆகியவற்றைக் குறிப்பிடுவது. அது இதழ்களை குறிக்கவும் பயன்படுத்தப்பட்டது | |||
======பத்திரிகை====== | |||
பத்ரம் என்னும் சொல்லில் இருந்து உருவானது பத்ரிகை என்னும் சொல். அது பத்திரிகை என்று தமிழ் வடிவம் கொண்டது. பத்திரிக்கை என்றும் சிலரால் எழுதப்பட்டது. | |||
====== மடல் ====== | |||
மடல் என்பது பூவின் இதழை குறிக்கும். சிலப்பதிகாரம் முதல் மடல் என்பது கடிதத்தைக் குறிப்பிடும் சொல்லாகவும் இருந்துள்ளது.தாழை மடலில் மாதவி கடிதம் எழுதியதை சிலப்பதிகாரம் சொல்கிறது. தொடக்ககால இதழ்கள் சிறுகுழுவினருக்குள் பகிர்ந்துகொள்ளப்பட்டவை. அவை மடல் எனப்பட்டன. பின்னாளில் அது இதழ்களைக் குறிக்கும் சொல் ஆகியது. சிலசமயம் ஒர் இதழின் ஒரு இலக்கத்தைக் குறிக்கும் சொல் ஆகவும் பயன்படுத்தப்படுகிறது | |||
====== இதழ் ====== | |||
இதழ் என்னும் சொல் பூவின் இதழை குறிக்கிறது. உதடுகளையும் குறிக்கும். பத்திரிகைகள் தொடராக வெளிவந்தபோது ஒவ்வொரு இலக்கமும் ஓர் இதழ் எனப்பட்டது. நாளடைவில் பத்திரிகைகளே இதழ்கள் எனப்பட்டன. நாளிதழ் என்பது நாள்தோறும் வருவது. செய்தியிதழ் என்பது செய்திகளுக்கானது. வார இதழ், மாத இதழ், பருவ இதழ், சிறப்பிதழ் என பலவகையான சொற்கள் புழக்கத்தில் உள்ளன | |||
====== மலர் ====== | |||
இதழ் என்னும் சொல்லில் இருந்து உருவானது மலர். ஓர் இதழ் ஏதேனும் ஒரு தருணத்தில் பல இதழ்களை தொகுத்து வெளியிடும் தொகுப்பு மலர் எனப்பட்டது. சிறப்பிதழும் மலர் எனப்பட்டது. ஆண்டு மலர், தீபாவளி மலர், சிறப்புமலர் போன்ற சொற்கள் புழக்கத்தில் உள்ளன | |||
====== ஏடு ====== | |||
ஏடு என்னும் சொல்லை இதழ்களுக்குப் பயன்படுத்துவது பின்னர் வழக்கமாகியது. நாளேடு, வாரஏடு, மாதஏடு, கல்வி ஏடு போன்ற சொற்கள் புழக்கத்தில் உள்ளன. | |||
====== மாசிகை ====== | |||
மாதம்தோறும் வரும் இதழை மாசம் என்னும் சொல்லில் இருந்து உருவான மாசிகை என்னும் சம்ஸ்கிருதச் சொல்லால் சுட்டினர். மாதம் - மாதிகை என்றும் சிலர் சொல்வதுண்டு | |||
====== வாரிகை ====== | |||
வாரம்தோறும் வரும் இதழை வாரிகை என்னும் சம்ஸ்கிருதச் சொல்லாம் சுட்டினர் | |||
== வரலாறு == | |||
இந்திய இதழ்கள் | |||
இந்தியாவில் முதல் அச்சகம் 1556 இல் கோவாவில் தொடங்கப்பட்டது. அங்கிருந்து சுமார் 80 ஆண்டுகள் காலம் ‘ஒ எரால்டோ’ என்ற போர்த்துக்கீசிய நாளிதழ் வெளிவந்தது. அது 1633ஆம் ஆண்டு நின்றது. இந்திய மண்ணில் இருந்து வெளிவந்த முதல் இதழ் என அது கருதப்படுகிறது. இந்தியாவில் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி செய்த போது இந்தியத் தலைநகராயிருந்த கல்கத்தாவில் 1750 ஜனவரி 29 ஆம் நாள் முதல் ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கே (James Augustus Hickey ) எனும் ஆங்கிலேயரால் , வங்காள கெஜட் ( The Bengal Gazette ) என்ற முதல் ஆங்கில வார இதழ் தொடங்கப்பட்டது . இதுதான் இந்தியாவின் முதல் ஆங்கில இதழாகக் குறிக்கப்படுகிறது. வங்காளத்தில் 1816 இல் கங்கா கிஷோர் பட்டாச்சாரியா என்பவரால் வங்காள கெஜட் எனும் வங்க மொழி இதழ் தோற்றுவிக்கப்பட்டு , சில காலம் வரை நடந்து மறைந்து விட்டது. இந்தியாவில் இந்திய மொழிகளில் தோன்றிய முதல் இதழ் இது என கருதப்படுகிறது. | |||
தமிழக இதழ்கள் | |||
மெட்ராஸ் எனப்பட்ட சென்னையில் ஆங்கிலேய கம்பெனி ஆட்சி உறுதியானதுமே இதழ்களும் தோன்றின. 12-8-1785ல் சென்னை கூரியர் ( The Madras Courier ) என்ற முதல் சென்னை மாகாணச் செய்தித்தாளை ரிச்சர்டு ஜான்ஸ்டன் ( Richard Johnston ) என்ற ஆங்கிலேயர் தொடங்கி நடத்தினார். இந்த மாத இதழின் விலை ரூபாய் ஒன்று. இதற்குப் போட்டியாக தி வீக்லி மெட்ராஸ் ( The Weekly Madras) என்ற இதழ் தோன்றியது .1791 இல் " சென்னை ஹுர்காரு (The Madras Hurharu ) என்ற இதழும் , 1792 இல் சென்னை கெஜட்டு ” (The Madras Gazette ) இதழும் , 1795 இல் மதராஸ் ஹெரால்டு , ( The Madras Herald ) இதழும் தொடங்கப்பட்டுள்ளன. 4-1-1832இல் செயிண்டு ஜார்ஜ் கெஜட் ( St. George Gazette ) டின் முதல் இதழ் வெளியாகியது. | |||
1836 இல் ஜெ . ஒளக்டர் லோனி என்பவர் தி ஸ்பெக்டேட்டர் ( The Spectator ) எனும் இதழைத் தொடங்கினார் . இதனை வெளியிட்டவர் திரு . சுப்பு முதலி என்பவராவர் . இதுதான் இந்தியர் பொறுப்பேற்ற முதல் ஆங்கில செய்தியிதழ். 1861 இல் காண்ட் பிரதர்ஸ் என்ற புத்தக நிறுவனத்தார் . திமெட்ராஸ் டைம்ஸ் ( The Madras Times ) என்ற இதழைத் தொடங்கி நடத்தி வந்தனர் . முன்பு குறிப்பிட்ட‘ஸ்பெக்டேட்டர் பின்னர் இத்துடன் இணைக்கப்புட்டது . | |||
தமிழ் இதழ்கள் | |||
இலங்கையில் ,கி.பி. 1802 இல் ‘சிலோன் கெஜட்’ ( TheCcylon Gazette ) எனும் இதழ் தொடங்கப்பட்டு , தமிழ் சிங்களம் ஆங்கிலம் என்னும் மூன்று பகுதிகளைக் கொண்டு வெளிவந்தது . இதுதான் இலங்கையில் தாய்மொழிகளைத் தாங்கி வெளிவந்த முதல் இதழ். தமிழ் அச்சான முதல் இதழ் இதுவே. | |||
தமிழில் வெளிவந்த முதல் செய்தியிதழ் எனக் கருதப்பட்ட ‘தமிழ் மேகசின்’ (1856) பிற செய்திகளுடன் அறிவியல் செய்திகளும் வெளியிடப்பட்டன. | |||
https://www.tamilvu.org/ta/courses-degree-p201-p2012-html-p2012031-27410 | |||
https://www.tamilvu.org/ta/courses-degree-p204-p2041-html-p2041115-30598 | |||
{{being created}} | {{being created}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 08:47, 24 February 2022
தமிழில் அச்சுத்தொழில்நுட்பம்1578 ல் அறிமுகம் ஆகியது. முதலில் அச்சிடப்பட்ட நூல் மோ. நேவிஸ் விக்டோரியாவின் தம்பிரான் வணக்கம் என்னும் நூல். தொடர்ந்து வெவ்வேறு நூல்களும், அறிவிக்கைகளும் அச்சிடப்பட்டன. 1802 ல் தமிழில் முதல் இதழ் தோன்றியது. தொடர்ந்து தமிழில் இதழ்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
சொற்கள்
நூலுக்கான சொற்கள்
தமிழில் புத்தகத்தைக் குறிக்க வெவ்வேறு சொற்கள் உள்ளன.
நூல்
ஏட்டுச்சுவடிகளை நூலால் சேர்த்துக் கட்டுவது என்னும் பொருளில் நூல் என்னும் சொல் தொடக்ககாலம் முதலே இருந்தது. இன்றும் அது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
புத்தகம்
புஸ்தகம் என்னும் சம்ஸ்கிருதச் சொல்லில் இருந்து உருவான இச்சொல் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே தமிழில் புழக்கத்திற்கு வந்தது. பொஸ்தகம், பொத்தகம், புத்தகம் என்றும் புழங்குகிறது.
கிரந்தம்
சம்ஸ்கிருதச் சொல்லான கிரந்தம் தமிழில் தொடக்க காலத்தில் நூல்களைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டது.
ஏடு
ஓலைச்சுவடிகளைக் குறிக்கும் இச்சொல் புத்தகம், இதழ் ஆகியவற்றைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டது
இதழ்களுக்கான சொற்கள்
இதழ்கள் உருவானபோது அவற்றைக் குறிக்கவும் வெவ்வேறு சொற்கள் பயன்படுத்தப்பட்டன
சஞ்சிகை
சேர்த்துக் கட்டப்பட்டது, தொகுக்கப்பட்டது என்னும் பொருள் உடைய சம்ஸ்கிருதச் சொல் இது. இச்சொல்லை தமிழில் இதழ்கள் வெளிவந்தபோது பயன்படுத்தினர்.
பிரசுரம்
பொதுவாக வெளியிடுதல், பரப்புதல் என்னும் பொருள்கொண்ட சம்ஸ்கிருதச் சொல். வெளியீடு என்னும் சொல்லுக்கு நிகராக தொடக்க காலத்தில் இது பயன்படுத்தப்பட்டது. பிரசித்திகரணம் என்னும் சொல்லும் அரிதாகப் பயன்படுத்தப்பட்டது
பத்ரம்
பத்ரம் என்னும் சொல் இலை, ஓலை ஆகியவற்றைக் குறிப்பிடுவது. அது இதழ்களை குறிக்கவும் பயன்படுத்தப்பட்டது
பத்திரிகை
பத்ரம் என்னும் சொல்லில் இருந்து உருவானது பத்ரிகை என்னும் சொல். அது பத்திரிகை என்று தமிழ் வடிவம் கொண்டது. பத்திரிக்கை என்றும் சிலரால் எழுதப்பட்டது.
மடல்
மடல் என்பது பூவின் இதழை குறிக்கும். சிலப்பதிகாரம் முதல் மடல் என்பது கடிதத்தைக் குறிப்பிடும் சொல்லாகவும் இருந்துள்ளது.தாழை மடலில் மாதவி கடிதம் எழுதியதை சிலப்பதிகாரம் சொல்கிறது. தொடக்ககால இதழ்கள் சிறுகுழுவினருக்குள் பகிர்ந்துகொள்ளப்பட்டவை. அவை மடல் எனப்பட்டன. பின்னாளில் அது இதழ்களைக் குறிக்கும் சொல் ஆகியது. சிலசமயம் ஒர் இதழின் ஒரு இலக்கத்தைக் குறிக்கும் சொல் ஆகவும் பயன்படுத்தப்படுகிறது
இதழ்
இதழ் என்னும் சொல் பூவின் இதழை குறிக்கிறது. உதடுகளையும் குறிக்கும். பத்திரிகைகள் தொடராக வெளிவந்தபோது ஒவ்வொரு இலக்கமும் ஓர் இதழ் எனப்பட்டது. நாளடைவில் பத்திரிகைகளே இதழ்கள் எனப்பட்டன. நாளிதழ் என்பது நாள்தோறும் வருவது. செய்தியிதழ் என்பது செய்திகளுக்கானது. வார இதழ், மாத இதழ், பருவ இதழ், சிறப்பிதழ் என பலவகையான சொற்கள் புழக்கத்தில் உள்ளன
மலர்
இதழ் என்னும் சொல்லில் இருந்து உருவானது மலர். ஓர் இதழ் ஏதேனும் ஒரு தருணத்தில் பல இதழ்களை தொகுத்து வெளியிடும் தொகுப்பு மலர் எனப்பட்டது. சிறப்பிதழும் மலர் எனப்பட்டது. ஆண்டு மலர், தீபாவளி மலர், சிறப்புமலர் போன்ற சொற்கள் புழக்கத்தில் உள்ளன
ஏடு
ஏடு என்னும் சொல்லை இதழ்களுக்குப் பயன்படுத்துவது பின்னர் வழக்கமாகியது. நாளேடு, வாரஏடு, மாதஏடு, கல்வி ஏடு போன்ற சொற்கள் புழக்கத்தில் உள்ளன.
மாசிகை
மாதம்தோறும் வரும் இதழை மாசம் என்னும் சொல்லில் இருந்து உருவான மாசிகை என்னும் சம்ஸ்கிருதச் சொல்லால் சுட்டினர். மாதம் - மாதிகை என்றும் சிலர் சொல்வதுண்டு
வாரிகை
வாரம்தோறும் வரும் இதழை வாரிகை என்னும் சம்ஸ்கிருதச் சொல்லாம் சுட்டினர்
வரலாறு
இந்திய இதழ்கள்
இந்தியாவில் முதல் அச்சகம் 1556 இல் கோவாவில் தொடங்கப்பட்டது. அங்கிருந்து சுமார் 80 ஆண்டுகள் காலம் ‘ஒ எரால்டோ’ என்ற போர்த்துக்கீசிய நாளிதழ் வெளிவந்தது. அது 1633ஆம் ஆண்டு நின்றது. இந்திய மண்ணில் இருந்து வெளிவந்த முதல் இதழ் என அது கருதப்படுகிறது. இந்தியாவில் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி செய்த போது இந்தியத் தலைநகராயிருந்த கல்கத்தாவில் 1750 ஜனவரி 29 ஆம் நாள் முதல் ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கே (James Augustus Hickey ) எனும் ஆங்கிலேயரால் , வங்காள கெஜட் ( The Bengal Gazette ) என்ற முதல் ஆங்கில வார இதழ் தொடங்கப்பட்டது . இதுதான் இந்தியாவின் முதல் ஆங்கில இதழாகக் குறிக்கப்படுகிறது. வங்காளத்தில் 1816 இல் கங்கா கிஷோர் பட்டாச்சாரியா என்பவரால் வங்காள கெஜட் எனும் வங்க மொழி இதழ் தோற்றுவிக்கப்பட்டு , சில காலம் வரை நடந்து மறைந்து விட்டது. இந்தியாவில் இந்திய மொழிகளில் தோன்றிய முதல் இதழ் இது என கருதப்படுகிறது.
தமிழக இதழ்கள்
மெட்ராஸ் எனப்பட்ட சென்னையில் ஆங்கிலேய கம்பெனி ஆட்சி உறுதியானதுமே இதழ்களும் தோன்றின. 12-8-1785ல் சென்னை கூரியர் ( The Madras Courier ) என்ற முதல் சென்னை மாகாணச் செய்தித்தாளை ரிச்சர்டு ஜான்ஸ்டன் ( Richard Johnston ) என்ற ஆங்கிலேயர் தொடங்கி நடத்தினார். இந்த மாத இதழின் விலை ரூபாய் ஒன்று. இதற்குப் போட்டியாக தி வீக்லி மெட்ராஸ் ( The Weekly Madras) என்ற இதழ் தோன்றியது .1791 இல் " சென்னை ஹுர்காரு (The Madras Hurharu ) என்ற இதழும் , 1792 இல் சென்னை கெஜட்டு ” (The Madras Gazette ) இதழும் , 1795 இல் மதராஸ் ஹெரால்டு , ( The Madras Herald ) இதழும் தொடங்கப்பட்டுள்ளன. 4-1-1832இல் செயிண்டு ஜார்ஜ் கெஜட் ( St. George Gazette ) டின் முதல் இதழ் வெளியாகியது.
1836 இல் ஜெ . ஒளக்டர் லோனி என்பவர் தி ஸ்பெக்டேட்டர் ( The Spectator ) எனும் இதழைத் தொடங்கினார் . இதனை வெளியிட்டவர் திரு . சுப்பு முதலி என்பவராவர் . இதுதான் இந்தியர் பொறுப்பேற்ற முதல் ஆங்கில செய்தியிதழ். 1861 இல் காண்ட் பிரதர்ஸ் என்ற புத்தக நிறுவனத்தார் . திமெட்ராஸ் டைம்ஸ் ( The Madras Times ) என்ற இதழைத் தொடங்கி நடத்தி வந்தனர் . முன்பு குறிப்பிட்ட‘ஸ்பெக்டேட்டர் பின்னர் இத்துடன் இணைக்கப்புட்டது .
தமிழ் இதழ்கள்
இலங்கையில் ,கி.பி. 1802 இல் ‘சிலோன் கெஜட்’ ( TheCcylon Gazette ) எனும் இதழ் தொடங்கப்பட்டு , தமிழ் சிங்களம் ஆங்கிலம் என்னும் மூன்று பகுதிகளைக் கொண்டு வெளிவந்தது . இதுதான் இலங்கையில் தாய்மொழிகளைத் தாங்கி வெளிவந்த முதல் இதழ். தமிழ் அச்சான முதல் இதழ் இதுவே.
தமிழில் வெளிவந்த முதல் செய்தியிதழ் எனக் கருதப்பட்ட ‘தமிழ் மேகசின்’ (1856) பிற செய்திகளுடன் அறிவியல் செய்திகளும் வெளியிடப்பட்டன.
https://www.tamilvu.org/ta/courses-degree-p201-p2012-html-p2012031-27410
https://www.tamilvu.org/ta/courses-degree-p204-p2041-html-p2041115-30598
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.