being created

தருமபுர ஆதீனம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
தருமபுர ஆதீனம் (தருமை ஆதீனம்) (தருமபுரம் ஆதீனம்) சைவ மடங்களுள் ஒன்று. குரு ஞானசம்பந்தரால் தொடங்கப்பட்டது. தருமபுர ஆதீன பரம்பரையைத் 'திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம்' என அழைப்பர்.
தருமபுர ஆதீனம் (தருமை ஆதீனம்) (தருமபுரம் ஆதீனம்) சைவ மடங்களுள் ஒன்று. குரு ஞானசம்பந்தரால் தொடங்கப்பட்டது. தருமபுர ஆதீன பரம்பரையைத் 'திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம்' என அழைப்பர்.
== இடம் ==
== இடம் ==
தமிழ்நாட்டில் மயிலாடுதுறையில் இம்மடம் அமைந்துள்ளது.  
தருமபுர ஆதீனம் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது.  
== கோவில்கள் ==
== கோவில்கள் ==
தருமபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருபதுக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அவை பெரும்பாலும் சமயக்குறவர் மூவரால் பாடப்பெற்ற பாடல் பெற்ற தலங்கள் வரிசையில் இடம்பெற்றவை. திருவாரூர் தியாகராஜர் கோவில் (இராஜன் கட்டளை), மயிலாடுதுறை (குமரக்கட்டளை), திருவிடைமருதூர் (பிச்சக்கட்டளை) ஆகிய கட்டளைகள் உள்ளன. திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை தெற்கு வீதியில் அமைந்துள்ள மவுன மடம் தருமை ஆதீனத்தின் கிளை மடம். தாயுமானவர் கோவிலுக்குரிய பல கட்டளைகள் மவுன மடத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இதற்கு மவுன மட கட்டளை என்று பெயர்.

Revision as of 12:27, 19 August 2023

தருமபுர ஆதீனம் (தருமை ஆதீனம்) (தருமபுரம் ஆதீனம்) சைவ மடங்களுள் ஒன்று. குரு ஞானசம்பந்தரால் தொடங்கப்பட்டது. தருமபுர ஆதீன பரம்பரையைத் 'திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம்' என அழைப்பர்.

இடம்

தருமபுர ஆதீனம் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

கோவில்கள்

தருமபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருபதுக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அவை பெரும்பாலும் சமயக்குறவர் மூவரால் பாடப்பெற்ற பாடல் பெற்ற தலங்கள் வரிசையில் இடம்பெற்றவை. திருவாரூர் தியாகராஜர் கோவில் (இராஜன் கட்டளை), மயிலாடுதுறை (குமரக்கட்டளை), திருவிடைமருதூர் (பிச்சக்கட்டளை) ஆகிய கட்டளைகள் உள்ளன. திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை தெற்கு வீதியில் அமைந்துள்ள மவுன மடம் தருமை ஆதீனத்தின் கிளை மடம். தாயுமானவர் கோவிலுக்குரிய பல கட்டளைகள் மவுன மடத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இதற்கு மவுன மட கட்டளை என்று பெயர்.

ஆதீனங்கள் பட்டியல்

  • ஸ்ரீ குருஞானசம்பந்த குருமூர்த்திகள் (ஆதீன நிறுவனர்)
  • ஸ்ரீலஸ்ரீ ஆனந்தபரவச தேசிகர்
  • ஸ்ரீலஸ்ரீ சச்சிதானந்த தேசிகர்
  • ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர்
  • ஸ்ரீலஸ்ரீ ஞானசம்பந்த தேசிகர்
  • ஸ்ரீலஸ்ரீ திருஞானசம்பந்த தேசிகர்
  • ஸ்ரீலஸ்ரீ திருவம்பல தேசிகர்
  • ஸ்ரீலஸ்ரீ அழகிய திருச்சிற்றம்பல தேசிகர்
  • ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிகர்
  • ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிகர்
  • ஸ்ரீலஸ்ரீ சச்சிதானந்த தேசிகர்
  • ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமார தேசிகர்
  • ஸ்ரீலஸ்ரீ ஞானசம்பந்த தேசிகர்
  • ஸ்ரீலஸ்ரீ கந்தப்ப தேசிகர்
  • ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர்
  • ஸ்ரீலஸ்ரீ சச்சிதானந்த தேசிகர்
  • ஸ்ரீலஸ்ரீ மாணிக்கவாசக தேசிகர்
  • ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிகர்
  • ஸ்ரீலஸ்ரீ மாணிக்கவாசக தேசிகர்
  • ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிகர்
  • ஸ்ரீலஸ்ரீ சச்சிதானந்த தேசிகர்
  • ஸ்ரீலஸ்ரீ மாணிக்கவாசக தேசிகர்
  • ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் (அக்டோபர் 30, 1923 - ஜூன் 26, 1933)
  • ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிகர் (ஜூன் 26, 1933 - மே 20, 1945)
  • ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் காலம் - மே 20, 1945 - நவம்பர் 10, 1971)
  • ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் (நவம்பர் 10, 1971 - டிசம்பர் 03, 2019)
  • ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் (டிசம்பர் 13, 2019 - தற்போது வரை)

கல்வி நிறுவனங்கள்

தருமபுரம் ஆதீனத்தால் பல பள்ளிகளும் ஒரு கல்லூரியும் நடத்தப்பட்டு வருகிறது

  • ஸ்ரீ குருஞான சம்பந்தர் பிலே பள்ளி (மயிலாடுதுறை)
  • ஸ்ரீ குருஞான சம்பந்தர் அரசு உதவி பெரும் தொடக்கப்பள்ளி (மயிலாடுதுறை)
  • ஸ்ரீ குருஞான சம்பந்தர் அரசு உதவி பெரும் மேல்நிலை பள்ளி (தர்மபுரம்)
  • ஸ்ரீ குருஞான சம்பந்தர் மிசன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி (மயிலாடுதுறை)
  • ஸ்ரீ குருஞான சம்பந்தர் மிசன் மெட்ரிக் பள்ளி (திருக்கடையூர்)
  • ஸ்ரீ குருஞான சம்பந்தர் மிசன் முத்தையா மெட்ரிக் மேல்நிலை பள்ளி (வைதீஸ்வரன்கோவில்)
  • ஸ்ரீ குருஞான சம்பந்தர் மிசன் VTP நடுநிலை பள்ளி (சீர்காழி)
  • ஸ்ரீ குருஞான சம்பந்தர் மிசன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி (சிதம்பரம்)
  • தருமபுரம் ஆதீனம் கலை கல்லூரி (தர்மபுரம்)

சமூகப்பணி

தருமபுர ஆதீனம் மயிலாடுதுறையில் மகப்பேறு நிலையம், சிங்கிப்பட்டி காசநோய் மருத்துவமனை, அடையார் புற்றுநோய் மருத்துவமனை(அடையாறு கான்சர் இன்ஸ்டிடியூட்) போன்ற பொது நிறுவனங்களுக்குப் பொருளுதவி செய்தது. ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்க கட்டண உதவி செய்தது. ஞானசம்பந்தம் என்ற திங்கள் இதழையும் இந்த மடம் வெளியிடுகிறது.

உசாத்துணை

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.