under review

செம்பூதத்தன் கூட்டம்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
(Corrected text format issues)
Line 16: Line 16:
*[https://kongudesarajakkal.blogspot.com/ கொங்கு கவுண்டர்களின் வரலாறு]
*[https://kongudesarajakkal.blogspot.com/ கொங்கு கவுண்டர்களின் வரலாறு]
*[https://sellankoottam.blogspot.com/2011/12/this-community-belongs-to-all-those-who.html செல்லம்கூட்டம் இணையதளம்]
*[https://sellankoottam.blogspot.com/2011/12/this-community-belongs-to-all-those-who.html செல்லம்கூட்டம் இணையதளம்]
[[Category:spc]]
[[Category:Spc]]
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 22:53, 8 July 2023

செம்பூதத்தன் கூட்டம் ( செம்பூத்தான் கூட்டம், செம்பூதத்தான் குலம், செம்பூதத்தன் குலம்) கொங்குவேளாளக் கவுண்டர் சாதிகளின் உட்பிரிவான அறுபது கூட்டங்களில் ஒன்று. செம்போத்து எனப்படும் நிலப்பறவையில் இருந்து வந்த பெயராக இருக்கலாம். (பார்க்க கொங்குவேளாளர் கூட்டங்கள்)

வரலாறு

"செம்பூத்தான் குழந்தைவோன் அன்னமிட்டுப் புகழ் பெற்றான்" என்று 'தொண்டை மண்டல சதகம்' கூறுகிறது. இரத்தின மூர்த்தி எழுதிய 'விறலி விடு தூது' நல்லக் குமாரக் கவுண்டர் என்பவரை பற்றிச் சொல்கிறது. "செம்பூத்தன்என்ற குலத்திலகன் தென்பொதிகை கும்பன் எனும் நல்லக் கவுண்டர்" என்று தொண்டைமண்டல சதகம் கூறுகிறது . செம்பூதன், செம்பூத்தர் , செம்போத்து , செம்பூத்தை செம்பூற்று, என்பன வேறு பெயர்கள்.செம்பூற்றுதிபன் என்று ஒரு கல்வெட்டு குறிப்பு உள்ளது.

ஊர்கள்

செம்பூத்தான் குலத்தார்க்குரிய காணியூர்கள் பற்றிய காணிப்பாடல்களில் கூறப்பட்ட ஊர்கள். இரணபுரம் மண்டபத்தில் அத்தனூர் வயிரூசி,குமாரமங்கலம் , அந்தியூர் , இராமக்கூடல் , காடனூர், கண்ட குல மாணிக்கம்பாளையம் , கீரம்பூர், தாராபுரம் , தென்சேரி, விதரி அத்திபாளையம், சேமூர் ,மொஞ்சனூர் , கூடச்சேரி, கருமானூர், புல்லூர், சிவதை, வாழவந்தி , உத்தம சோழபுரம் , புத்தூர் திண்டமங்கலம், வைகுந்தம் , முடுதுறை, கொற்றனூர் ஆகிய ஊர் செம்பூத்தனாரின் காணியூர்கள். கொல்லிமலையைச் சூழ்ந்துள்ள 88 ஊர்களுக்கும் செம்பூத்தார் காணியாளர்ககள்.

"இனிய ஒன் கொல்லிமலை எண்பத் தெட்டூருக்கும்
இறைவனே செம்பூதனே"

என்று காணிப்பாடல் கூறுகிறது. வேட்டம்பாடி , வேலூர் , காதப்பள்ளி , வீசானம்,தோகைநத்தம் , தாராபுரம், தம்மம்பட்டி , தாளப்பதி , கொங்கணாபுரம், வாழவந்தி , தோளூர் , தாளப்பறி , ஆகிய ஊர்களும் செம்பூத்தான் குலத்தினர் காணியூர்கள்.

உசாத்துணை


✅Finalised Page