under review

கிங் விஸ்வா: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
(Corrected error in line feed character)
Line 8: Line 8:
==இலக்கிய வாழ்க்கை==
==இலக்கிய வாழ்க்கை==
கிங் விஸ்வா 2008-ல் தமிழ் காமிக்ஸ் உலகம் என்கிற வலைப்பூவைத் துவக்கி அதில் தனது கட்டுரைகளைப் பதிவேற்றிவந்தார். 2014-ல் ’தமிழ் இந்து’ வில் வந்த கட்டுரை அச்சில் வந்த இவரது முதல்படைப்பு. தமிழ் இந்து, தினமலர், Times of India, Deccan Chronicle, தினஇதழ், குமுதம், ஆனந்த விகடன், குங்குமம், சுட்டி விகடன், தினமலர் பட்டம், குமுதம் தீராநதி, கணையாழி ஆகியவற்றிலும், அமெரிக்க, பிரித்தானிய இணைய இதழ்களிலும் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். 2022 ஆம் ஆண்டுவரை காமிக்ஸ் பற்றி மட்டும் 750 க்கும் அதிகமான எண்ணிக்கையில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

க்ரைம் டைம் ( Crime Time), டைம் டிராவல் டெண்டுல்கர் (Time travel 10dulkar) ஆகிய புனைவு காமிக்ஸ்களும், நிலம் நீர் காற்று என்கிற அபுனைவு காமிக்ஸும் சுட்டி விகடன் இதழில் எழுதியுள்ளார்

இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் என முல்லை தங்கராசன், வாண்டுமாமா, வில் ஐஸ்னர், ஒஸாமு தெசூக்கா, ஷிகேரு மிஸூக்கி, ஹயாவோ மயசாகி, அலேஹாந்த்ரோ ஒளோரோஃப்ஸ்கி, மோபியஸ், ஹெக்டோர் ஹெர்மன் ஓய்ட்டர்ஹெல்ட், ஹ்யூகோ ப்ராட் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

== உசாத்துணை ==
== உசாத்துணை ==

Revision as of 20:11, 12 July 2023

To read the article in English: King Viswa. ‎

கிங் விஸ்வா

கிங் விஸ்வா(ஏப்ரல் 14, 1979) காமிக்ஸ் எழுத்தாளர் மற்றும் திறனாய்வாளர். தமிழ் இதழ்கள்மற்றும் இணையதளங்களில் வரைகலை நாவல்கள் ( Comics and Graphic novels ) குறித்து அறிமுகப்படுத்தியும் அந்நாவல்கள் குறித்த அழகியல் மதிப்பீடு மற்றும் திறனாய்வுக் கட்டு்ரைகளும் எழுதியும் வருகிறார். தமிழ் காமிக்ஸ் உலகம் என்கிற வலைத்தளம் வாயிலாக காமிக்ஸ் நாவல்கள் குறித்து 750 க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஊடகவியலாளராக பணிபுரிந்து வருகிறார்.

பிறப்பு, கல்வி

கிங் விஸ்வாவின் இயற்பெயர் விஸ்வநாதன் தேவராஜ். இவர் திரிபுராவின் தலைநகர் அகர்தலாவில் எம் தேவராஜ் - லோகநாயகி இணையருக்கு ஏப்ரல் 14, 1979-ல் பிறந்தார். இவரது சொந்த ஊர் அரக்கோணம் மாவட்டத்தின் சோளிங்கர் மலைக்கோவிலை அடுத்துள்ள அரியூர். தந்தை இந்திய இராணுவத்தில் பணிபுரிந்தார். ஆகவே ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் இடம் பெயர வேண்டியிருந்தது. அவ்வகையில், சண்டிகர் (பஞ்சாப்), மேற்கு வங்கம், தில்லி, ஹைதராபாத் மற்றும் சென்னை போன்ற நகரங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் பள்ளிப்படிப்பைப் பயின்றார். சென்னையிலுள்ள சி. கந்தசுவாமி நாயுடு ஆண்கள் கலைக்கல்லூரியில் இளங்கலை கணிதமும், வேலம்மாள் கல்லூரியில் முதுகலை மேலாண்மையியலும் பயின்றார்.

தனிவாழ்க்கை

கிங் விஸ்வா தமிழ் / இந்திய அளவிலான முன்னணி ஊடகங்களில் பணிபுரிந்து வருகிறார். தற்போது சென்னையில் வசிக்கிறார்

இலக்கிய வாழ்க்கை

கிங் விஸ்வா 2008-ல் தமிழ் காமிக்ஸ் உலகம் என்கிற வலைப்பூவைத் துவக்கி அதில் தனது கட்டுரைகளைப் பதிவேற்றிவந்தார். 2014-ல் ’தமிழ் இந்து’ வில் வந்த கட்டுரை அச்சில் வந்த இவரது முதல்படைப்பு. தமிழ் இந்து, தினமலர், Times of India, Deccan Chronicle, தினஇதழ், குமுதம், ஆனந்த விகடன், குங்குமம், சுட்டி விகடன், தினமலர் பட்டம், குமுதம் தீராநதி, கணையாழி ஆகியவற்றிலும், அமெரிக்க, பிரித்தானிய இணைய இதழ்களிலும் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். 2022 ஆம் ஆண்டுவரை காமிக்ஸ் பற்றி மட்டும் 750 க்கும் அதிகமான எண்ணிக்கையில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

க்ரைம் டைம் ( Crime Time), டைம் டிராவல் டெண்டுல்கர் (Time travel 10dulkar) ஆகிய புனைவு காமிக்ஸ்களும், நிலம் நீர் காற்று என்கிற அபுனைவு காமிக்ஸும் சுட்டி விகடன் இதழில் எழுதியுள்ளார்

இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் என முல்லை தங்கராசன், வாண்டுமாமா, வில் ஐஸ்னர், ஒஸாமு தெசூக்கா, ஷிகேரு மிஸூக்கி, ஹயாவோ மயசாகி, அலேஹாந்த்ரோ ஒளோரோஃப்ஸ்கி, மோபியஸ், ஹெக்டோர் ஹெர்மன் ஓய்ட்டர்ஹெல்ட், ஹ்யூகோ ப்ராட் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

உசாத்துணை

கிங் விஸ்வா கட்டுரைகள்

✅Finalised Page