under review

க.விக்னேஸ்வரன்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
(Corrected error in line feed character)
Line 11: Line 11:
== இதழியல் ==
== இதழியல் ==
கனலி என்னும் இணைய இதழை கலை இலக்கியச் சூழலியல் இணையதளமாக 2019 முதல் வெளியிட்டு வருகிறார். வெகுஜன ரசனை மற்றும் அரசியல் சார்புகள் போன்றவற்றிலிருந்து விலகி தீவிரமான இலக்கியச் செயல்பாடுகளை மட்டும் நோக்கியே கனலி முன்னேறவேண்டும் என விரும்புகிறர். புதிய எழுத்தாளர்களுக்கு வாய்ப்புகள், புதிய மொழிபெயர்ப்பு படைப்புகள், முன்னோடி எழுத்தாளர்களுக்கு முக்கியமான சிறப்பிதழ்கள் போன்றவற்றில் கனலி இன்னும் தீவிரமாக கவனம் செலுத்தும் என்கிறார்.

முதல் இரண்டு வருடங்களில் 16 இணைய இதழ்கள் 6 சிறப்பிதழ்களை கனலி வெளியிட்டுள்ளது.

== நூல்பட்டியல் ==
== நூல்பட்டியல் ==

Revision as of 20:10, 12 July 2023

க.விக்னேஸ்வரன்

க. விக்னேஸ்வரன் (கனலி விக்னேஷ்வரன்) (மே 16, 1984) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், இணைய இதழாளர், இலக்கிய விமர்சகர். இவர் நடத்தும் கனலி இணைய இதழ் தமிழில் தீவிர வாசிப்புக்குரிய எழுத்துக்களை வெளியிடுகிறது.

பிறப்பு, கல்வி

விக்னேஸ்வரன் தமிழ்நாட்டில் வேலூரில் மே 16, 1984 அன்று ஆர். கண்ணன் - க. மாலா இணையருக்கு பிறந்தார். வேலூரில் ஆரம்பக்கல்வி. வேலூர் ஊரிசு கல்லூரியில் இயற்பியல் இளங்கலை பட்டப் படிப்பு முடித்தபின் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப் படிப்பு முடித்தார்.

தனிவாழ்க்கை

க. விக்னேஸ்வரன் நவம்பர் 06, 2009 அன்று வி. சாந்தியை மணந்தார். வி. யாழினி, வி. கலைஸ்ரீ என இரு மகள்கள்.

இலக்கியவாழ்க்கை

க. விக்னேஸ்வரனின் முதல் படைப்பு 2021-ல் அவர் நடத்தும் கனலி தளத்தில் வெளிவந்தது. இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் என புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி, தி. ஜானகிராமன், அசோகமித்திரன், தஸ்தாயெவ்ஸ்கி, லியோ டால்ஸ்டாய், ஆல்பர் காம்யூ, எஸ். ராமகிருஷ்ணன், சு. வேணுகோபால் ஆகியோரைக் குறிப்பிடுகிறார். கனலிபதிப்பகம் மூலமாக இதுவரை ஆறு புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

விருதுகள்

கனலியின் தி.ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழிற்குபடித்துறை புத்தக அறக்கட்டளை வழங்கிய சிறந்த கட்டுரை தொகுப்பு விருது.

இதழியல்

கனலி என்னும் இணைய இதழை கலை இலக்கியச் சூழலியல் இணையதளமாக 2019 முதல் வெளியிட்டு வருகிறார். வெகுஜன ரசனை மற்றும் அரசியல் சார்புகள் போன்றவற்றிலிருந்து விலகி தீவிரமான இலக்கியச் செயல்பாடுகளை மட்டும் நோக்கியே கனலி முன்னேறவேண்டும் என விரும்புகிறர். புதிய எழுத்தாளர்களுக்கு வாய்ப்புகள், புதிய மொழிபெயர்ப்பு படைப்புகள், முன்னோடி எழுத்தாளர்களுக்கு முக்கியமான சிறப்பிதழ்கள் போன்றவற்றில் கனலி இன்னும் தீவிரமாக கவனம் செலுத்தும் என்கிறார்.

முதல் இரண்டு வருடங்களில் 16 இணைய இதழ்கள் 6 சிறப்பிதழ்களை கனலி வெளியிட்டுள்ளது.

நூல்பட்டியல்

விக்னேஸ்வரன் தொகுப்பாசிரியரக கனலியில் வெளியிட்ட சிறப்பிதழ்கள்:

  • தி. ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழ் (தொகுப்பாசிரியர்) 2021
  • நகுலன் 100 நூற்றாண்டுச் சிறப்பிதழ் (தொகுப்பாசிரியர்) 2021
  • தஸ்தயெவ்ஸ்கி 200ம் ஆண்டுச் சிறப்பிதழ் (தொகுப்பாசிரியர்) 2022
  • அமேரிக்க இலக்கியச் சிறப்பிதழ் (தொகுப்பாசிரியர்) 2021

உசாத்துணை

✅Finalised Page