under review

உதயசங்கர்: Difference between revisions

From Tamil Wiki
(Finalized)
No edit summary
Line 1: Line 1:
[[File:உதயசங்கர்.jpg|thumb|உதயசங்கர்]]
[[File:உதயசங்கர்.jpg|thumb|உதயசங்கர்]]
[[File:உதயசங்கர்1.jpg|thumb|உதயசங்கர்]]
[[File:உதயசங்கர்1.jpg|thumb|உதயசங்கர்]]
உதயசங்கர் (10 பெப்ரவரி 1960 ) (உதயஷங்கர்) தமிழ் எழுத்தாளர். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் செயல்படுபவர். குழந்தை இலக்கியப் படைப்பாளி. குழந்தை எழுத்தாளர் சங்க ஒருங்கிணைப்பாளர்
உதயசங்கர் (உதயஷங்கர் (பெப்ரவரி  10, 1960 ) தமிழ் எழுத்தாளர். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் செயல்படுபவர். குழந்தை இலக்கியப் படைப்பாளி. குழந்தை எழுத்தாளர் சங்க ஒருங்கிணைப்பாளர்


== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் 10 பெப்ரவரி 1960 அன்று கமலம் - ச. கார்மேகம் இணையருக்குப் பிறந்தார். கோயில்பட்டி ஏ.வி.உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி.  கோயில்பட்டி ஜி.வேங்கடசாமி நாயுடு கல்லூரியில் வேதியியலில் இளங்கலைப் பட்டம்பெற்றார்.
இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் பெப்ருவரி 10, 1960 அன்று கமலம் - ச. கார்மேகம் இணையருக்குப் பிறந்தார். கோயில்பட்டி ஏ.வி.உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார்.  கோயில்பட்டி ஜி.வேங்கடசாமி நாயுடு கல்லூரியில் வேதியியலில் இளங்கலைப் பட்டம்பெற்றார்.


== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
உதயசங்கரின் மனை பெயர் மல்லிகா. நவீனா, துர்கா என்று இரு மகள்கள். இந்திய ரயில்வே துறையில் நிலையத் தலைவராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றார்.
உதயசங்கரின் மனைவி  பெயர் மல்லிகா. நவீனா, துர்கா என்று இரு மகள்கள். இந்திய ரயில்வே துறையில் நிலையத் தலைவராகப் (station master) பணிபுரிந்து ஓய்வுபெற்றார்.


== அரசியல் ==
== அரசியல் ==
Line 15: Line 15:
உதயசங்கர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து பணியாற்றினார்.  
உதயசங்கர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து பணியாற்றினார்.  


1950 -இல் அழ வள்ளியப்பா தொடங்கிய குழந்தை எழுத்தாளர் சங்கம் நின்றபின் மாநில அளவில் சிறார் இலக்கியத்துக்கான அமைப்புகள் ஏதுமில்லாமல் இருந்த நிலையில் சிறார் எழுத்தாளர் சுகுமாரன் ஆகியோருடன் உதயசங்கர், மணிகண்டன் ஆகியோர் இணைந்து 2017ல் சென்னை போரூரில் தமிழக அளவில் சிறார் எழுத்தாளர் சங்கத்தை மீண்டும் நிறுவ முடிவெடுத்தனர். 13 ஜூன் 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் தொடங்கப்பட்டது. உதயசங்கர் அதன் மாநிலத்தலைவராக பணியாற்றி வருகிறார்.
1950 -இல் [[அழ.வள்ளியப்பா]] தொடங்கிய குழந்தை எழுத்தாளர் சங்கம் செயல்படாமல் நின்றபின் மாநில அளவில் சிறார் இலக்கியத்துக்கான அமைப்புகள் ஏதுமில்லாமல் இருந்த நிலையில் சிறார் எழுத்தாளர் [[சுகுமாரன்]]  உதயசங்கர், மணிகண்டன் ஆகியோர் இணைந்து 2017-ல் சென்னை போரூரில் தமிழக அளவில் சிறார் எழுத்தாளர் சங்கத்தை மீண்டும் நிறுவ முடிவெடுத்தனர். ஜூன் 13, 2021-ல்  தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் தொடங்கப்பட்டது. உதயசங்கர் அதன் மாநிலத்தலைவராக பணியாற்றி வருகிறார்.


== காட்சியூடகம் ==
== காட்சியூடகம் ==
Line 24: Line 24:


====== சிறுகதைகள் ======
====== சிறுகதைகள் ======
உதயசங்கர் எழுதிய முதல் கதை 1980 - ஆம் ஆண்டு மார்ச் மாதம் செம்மலர் இலக்கிய இதழில் பிரசுரமானது. முதல் சிறுகதை நூல் ’யாவர் வீட்டிலும்’ 1988 - ஆம் ஆண்டு வெளியானது
உதயசங்கர் எழுதிய முதல் சிறுகதை  மார்ச்,1980 -ல்  [[செம்மலர்]] இலக்கிய இதழில் பிரசுரமானது. முதல் சிறுகதை நூல் ’யாவர் வீட்டிலும்’ 1988 -ல் வெளியானது


====== மொழியாக்கம் ======
====== மொழியாக்கம் ======
உதயசங்கர் 1986 ஆம் ஆண்டு வேளானந்தல் எனும் ஊரில் ரயில்வே ஊழியராக இருக்கையில் மலையாளம் கற்றுக்கொண்டார். 1995 முதல் மலையாளத்தில் இருந்து மொழியாக்கங்கள் செய்யத் தொடங்கினார். [[வைக்கம் முகமது பஷீர்]] எழுதிய சப்தங்கள் உள்ளிட்ட நூல்களை மொழியாக்கம் செய்துள்ளார். ஏராளமான சிறார் இலக்கிய நூல்களையும், இடதுசாரிக் கொள்கைகளை முன்வைக்கும் கட்டுரை நூல்களையும் மொழியாக்கம் செய்துள்ளார்.  
உதயசங்கர் 1986 -ஆம் ஆண்டு வேளானந்தல் எனும் ஊரில் ரயில்வே ஊழியராக இருக்கையில் மலையாளம் கற்றுக்கொண்டார். 1995 முதல் மலையாளத்தில் இருந்து மொழியாக்கங்கள் செய்யத் தொடங்கினார். [[வைக்கம் முகமது பஷீர்]] எழுதிய 'சப்தங்கள்' உள்ளிட்ட நூல்களை மொழியாக்கம் செய்துள்ளார். ஏராளமான சிறார் இலக்கிய நூல்களையும், இடதுசாரிக் கொள்கைகளை முன்வைக்கும் கட்டுரை நூல்களையும் மொழியாக்கம் செய்துள்ளார்.  


====== சிறார் இலக்கியம் ======
====== சிறார் இலக்கியம் ======

Revision as of 00:11, 24 June 2023

உதயசங்கர்
உதயசங்கர்

உதயசங்கர் (உதயஷங்கர் (பெப்ரவரி 10, 1960 ) தமிழ் எழுத்தாளர். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் செயல்படுபவர். குழந்தை இலக்கியப் படைப்பாளி. குழந்தை எழுத்தாளர் சங்க ஒருங்கிணைப்பாளர்

பிறப்பு, கல்வி

இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் பெப்ருவரி 10, 1960 அன்று கமலம் - ச. கார்மேகம் இணையருக்குப் பிறந்தார். கோயில்பட்டி ஏ.வி.உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். கோயில்பட்டி ஜி.வேங்கடசாமி நாயுடு கல்லூரியில் வேதியியலில் இளங்கலைப் பட்டம்பெற்றார்.

தனிவாழ்க்கை

உதயசங்கரின் மனைவி பெயர் மல்லிகா. நவீனா, துர்கா என்று இரு மகள்கள். இந்திய ரயில்வே துறையில் நிலையத் தலைவராகப் (station master) பணிபுரிந்து ஓய்வுபெற்றார்.

அரசியல்

உதயசங்கர் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்ஸிஸ்ட்) தொழிற்சங்கத்திலும், அதன் இலக்கிய அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் இணைந்து பணியாற்றினார்.

அமைப்புப் பணிகள்

உதயசங்கர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து பணியாற்றினார்.

1950 -இல் அழ.வள்ளியப்பா தொடங்கிய குழந்தை எழுத்தாளர் சங்கம் செயல்படாமல் நின்றபின் மாநில அளவில் சிறார் இலக்கியத்துக்கான அமைப்புகள் ஏதுமில்லாமல் இருந்த நிலையில் சிறார் எழுத்தாளர் சுகுமாரன் உதயசங்கர், மணிகண்டன் ஆகியோர் இணைந்து 2017-ல் சென்னை போரூரில் தமிழக அளவில் சிறார் எழுத்தாளர் சங்கத்தை மீண்டும் நிறுவ முடிவெடுத்தனர். ஜூன் 13, 2021-ல் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் தொடங்கப்பட்டது. உதயசங்கர் அதன் மாநிலத்தலைவராக பணியாற்றி வருகிறார்.

காட்சியூடகம்

உதயசங்கர் கோவில்பட்டி எழுத்தாளர்களைப் பற்றி ஆவணப்படம் ஒன்றை இயக்கியிருக்கிறார்.

இலக்கியவாழ்க்கை

உதயசங்கர் 1978 முதல் கவிதைகள் கவிதைகள் எழுதத் தொடங்கினார். நாறும்பூநாதன் நடத்திய மொட்டுகள் என்னும் கையெழுத்துப் பத்திரிகையில் முதல் கதை வெளிவந்தது. கோயில்பட்டியின் இலக்கியச் சூழலுக்கு அதன்பின் அறிமுகமானார்

சிறுகதைகள்

உதயசங்கர் எழுதிய முதல் சிறுகதை மார்ச்,1980 -ல் செம்மலர் இலக்கிய இதழில் பிரசுரமானது. முதல் சிறுகதை நூல் ’யாவர் வீட்டிலும்’ 1988 -ல் வெளியானது

மொழியாக்கம்

உதயசங்கர் 1986 -ஆம் ஆண்டு வேளானந்தல் எனும் ஊரில் ரயில்வே ஊழியராக இருக்கையில் மலையாளம் கற்றுக்கொண்டார். 1995 முதல் மலையாளத்தில் இருந்து மொழியாக்கங்கள் செய்யத் தொடங்கினார். வைக்கம் முகமது பஷீர் எழுதிய 'சப்தங்கள்' உள்ளிட்ட நூல்களை மொழியாக்கம் செய்துள்ளார். ஏராளமான சிறார் இலக்கிய நூல்களையும், இடதுசாரிக் கொள்கைகளை முன்வைக்கும் கட்டுரை நூல்களையும் மொழியாக்கம் செய்துள்ளார்.

சிறார் இலக்கியம்

உதயசங்கரின் நூல்களில் எண்ணிக்கையில் சிறார் இலக்கியப் படைப்புகளே மிகுதி. சிறார் இலக்கிய மொழியாக்கங்களும் செய்துள்ளார்.

விருதுகள்

  • லில்லி தேவசிகாமணி நினைவு சிறுகதை நூல் விருது - 1993
  • தமுஎகச புதுமைப்பித்தன் நினைவு சிறுகதை நூல் விருது - 2008
  • உலகத்தமிழ் பண்பாட்டு மைய விருது – 2015
  • எஸ். ஆர். வி. பள்ளியின் படைப்பூக்க விருது - 2016
  • கலை இலக்கியப் பெருமன்றம் – சிறுவர் இலக்கிய விருது – 2016
  • விகடன் விருது – சிறுவர் இலக்கிய விருது - 2016
  • கு.சி.பா. நினைவு - சிறுவர் இலக்கிய விருது – 2017
  • நல்லி - திசைஎட்டும் மொழிபெயர்ப்பு விருது - 2017
  • தமிழ் பேராயத்தின் அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது - 2017
  • கவிதை உறவு சிறுவர் இலக்கிய விருது - 2018
  • அறம் தமுஎகச படைப்பாளர் விருது - 2019
  • பாலபுரஸ்கார் சாகித்ய அக்காதமி விருது 2023

இலக்கிய இடம்

உதயசங்கர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொறுப்புகளில் செயல்பட்டவர். இடதுசாரிப்பார்வையுடன் கதைகளை எழுதினார். சிறார் இலக்கியத்திற்கு முதன்மைப்பங்களிப்பாற்றியவர்.

நூல்கள்

சிறுகதைகள்
  • யாவர் வீட்டிலும்
  • நீலக்கனவு
  • மறதியின் புதைசேறு
  • உதயசங்கர் கதைகள்
  • ஒரு விளக்கும் இரண்டு கண்களும்
  • பிறிதொரு மரணம்
  • கண்ணாடிச்சுவர்கள்
  • குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு
  • தூரம் அதிகமில்லை
  • பின்பு பெய்தது மழை
  • மீனாளின் நீலநிறப்பூ
  • துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜாமலர்
குறுநாவல்
  • ஆனால் இது அவனைப்பற்றி
கவிதைகள்
  • ஒரு கணமேனும்
  • காற்றைவாசி
  • தீராது
  • எனவே
  • தீராத பாடல்
சிறார் இலக்கியம்
  • தலையாட்டி பொம்மை (குழந்தைப்பாடல்கள்)
  • பச்சை நிழல் (சிறுவர் கதைகள்)
  • குழந்தைகளின் அற்புத உலகில் (கட்டுரைகள்)
  • மாயக்கண்ணாடி (சிறுவர் கதைகள்)
  • பேசும் தாடி (சிறுவர் நாவல்)
  • விரால் மீனின் சாகசப்பயணம்
  • கேளு பாப்பா கேளு (குழந்தைப்பாடல்கள்)
  • பேய் பிசாசு இருக்கா? (கட்டுரைகள்)
  • ரகசியக் கோழி (சிறுவர் கதைகள்)
  • அண்டாமழை (சிறுவர் கதைகள்)
  • ஏணியும் எறும்பும் (சிறுவர் கதைகள்)
  • மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
  • மாயாவின் பொம்மை (சிறுவர் கதைகள்)
  • சூரியனின் கோபம் (சிறுவர் கதைகள்)
  • குட்டி இளவரசனின் குட்டிப்பூ
  • புலிக்குகை மர்மம்
  • ஆதனின் பொம்மை
  • பொம்மைகளின் நகரம்
  • அலாவுதீனின் சாகசங்கள்
மொழிபெயர்ப்புகள்

மலையாளத்தில் இருந்து

  • வாயும் மனிதர்களும்
  • தயா
  • புத்தகப்பூங்கொத்து – குழந்தைகளுக்கான படக்கதைகள்
  • புத்தகப்பரிசுப்பெட்டி – குழந்தைகளுக்கான படக்கதைகள்
  • லட்சத்தீவின் கிராமியக்கதைகள்
  • லட்சத்தீவின் இராக்கதைகள்
  • மீன் காய்க்கும் மரம்
  • மரணத்தை வென்ற மல்லன்
  • பறந்து பறந்து
  • அய்யாச்சாமி தாத்தாவும் ஆட்டுக்கல் மீசையும்
  • இயற்கையின் அற்புத உலகில்
  • பாருக்குட்டியும் அவளது நண்பர்களும்
  • சப்தங்கள் வைக்கம் முகமது பஷீர்
  • கண்ணாடி பார்க்கும் வரையிலும் (சகரியா)
  • மாதவிக்குட்டியின் கதைகள் மாதவிக்குட்டி
  • நட்சத்திரம் வீழும் நேரத்தில்
  • லால் சலாம் காம்ரேட் இ.எம்.எஸ் (கட்டுரைகள்)
  • தாத்தா மரமும் நட்சத்திரப்பூக்களும்
  • கதைகேளு கதை கேளு காக்காவின் கதைகேளு
  • காலக்கனவுகள்

ஆங்கிலத்திலிருந்து

  • சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண்
  • பயங்களின் திருவிழா
  • சிரிக்க வைக்கச் சில கதைகள்
  • வேம்புத்தாத்தா
  • குட்டிப்பெண்ணும் காளான்களும்
  • நிர்வாணக்குரல்கள் (சதத் ஹசன் மண்டோ)

கட்டுரைகள்

  • முன்னொரு காலத்தில் (கோயில்பட்டி நினைவுகள்)
  • நினைவு என்னும் நீள்நதி
  • சாதிகளின் உடலரசியல்
  • எது மருத்துவம்
  • காந்தீயத்தை விழுங்கிய இந்துத்வா
  • வேதகாலத்திற்கு திரும்ப முடியுமா?

உசாத்துணை


✅Finalised Page