under review

மகாராஜன் வேதமாணிக்கம்: Difference between revisions

From Tamil Wiki
(Finalised)
No edit summary
Line 5: Line 5:
[[File:வேதமாணிக்கம் பழைய கல்லறை.jpg|thumb|வேதமாணிக்கம் பழைய கல்லறை]]
[[File:வேதமாணிக்கம் பழைய கல்லறை.jpg|thumb|வேதமாணிக்கம் பழைய கல்லறை]]
[[File:Vedamanickam's-Grave-under-renovation.webp|thumb|வேதமாணிக்கம்  கல்லறை புதுப்பிக்கப்பட்டது]]
[[File:Vedamanickam's-Grave-under-renovation.webp|thumb|வேதமாணிக்கம்  கல்லறை புதுப்பிக்கப்பட்டது]]
மகாராஜன் வேதமாணிக்கம் ( 1763--1827) (மகாராசன் வேதமாணிக்கம்) குமரிமாவட்டத்தில் முதலில் சீர்திருத்த கிறிஸ்தவராக மாறியவர். சீர்திருத்தக் கிறிஸ்தவர்களால் முன்னோடியாக மதிக்கப்படுபவர். இயற்பெயர் மகாராஜன்.வேதமாணிக்கம் குடும்பம் நான்கு தலைமுறைக்காலம் பல அறிஞர்களும் புகழ்மிக்க ஆளுமைகளும் கொண்டதாக இருந்தது
மகாராஜன் வேதமாணிக்கம் ( 1763-1827) (மகாராசன் வேதமாணிக்கம்) குமரிமாவட்டத்தில் முதலில் சீர்திருத்த கிறிஸ்தவராக மாறியவர். சீர்திருத்தக் கிறிஸ்தவர்களால் முன்னோடியாக மதிக்கப்படுபவர். இயற்பெயர் மகாராஜன்.வேதமாணிக்கம் குடும்பம் நான்கு தலைமுறைக்காலம் பல அறிஞர்களும் புகழ்மிக்க ஆளுமைகளும் கொண்டதாக இருந்தது

== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
Line 13: Line 13:

== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
வேதமாணிக்கம் 1783 ஆம் ஆண்டு மார்த்தாண்டம் அருகே மத்திகோடு என்னும் ஊரைச் சேர்ந்த சத்தியாயியை மணந்தார். சத்தியாயி பின்னர் அவருடன் மதம் மாறி ராஹேல் என்று பெயர் பெற்றார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள். பாக்கியாயி பின்னர் அன்னா அம்மாள் ஆக மதம் மாறினார். சிதம்பரம் பின்னர் தேவசகாயமாக மதம் மாறினார். தேவசகாயம் புத்தளம் தேவாலயத்தில் போதகராகப் பணியாற்றினார். கடைசி மகன் மோசஸ்.   
வேதமாணிக்கம் 1783-ஆம் ஆண்டு மார்த்தாண்டம் அருகே மத்திகோடு என்னும் ஊரைச் சேர்ந்த சத்தியாயியை மணந்தார். சத்தியாயி பின்னர் அவருடன் மதம் மாறி ராஹேல் என்று பெயர் பெற்றார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள். பாக்கியாயி பின்னர் அன்னா அம்மாள் ஆக மதம் மாறினார். சிதம்பரம் பின்னர் தேவசகாயமாக மதம் மாறினார். தேவசகாயம் புத்தளம் தேவாலயத்தில் போதகராகப் பணியாற்றினார். கடைசி மகன் மோசஸ்.   

====== பணி ======
====== பணி ======
Line 25: Line 25:

====== மதமாற்றம் ======
====== மதமாற்றம் ======
1799 ம் ஆண்டு தன் அண்ணன் மகன் சிவகுருநாதனுடன் சிதம்பரத்துக்குச் சென்ற மகாராஜன் அங்கே நடந்த சடங்குகளைக் கண்டு ஏமாற்றமடைந்து கால்நடையாக தஞ்சாவூர் வந்தார். வேதமாணிக்கம் சிதம்பரம் ஆலயத்தில் கனவில் இறைத்தூதரை சந்தித்து, அவருடைய ஆணைப்படி தஞ்சை சென்றதாக தொன்மம் உள்ளது.   
1799-ஆம் ஆண்டு தன் அண்ணன் மகன் சிவகுருநாதனுடன் சிதம்பரத்துக்குச் சென்ற மகாராஜன் அங்கே நடந்த சடங்குகளைக் கண்டு ஏமாற்றமடைந்து கால்நடையாக தஞ்சாவூர் வந்தார். வேதமாணிக்கம் சிதம்பரம் ஆலயத்தில் கனவில் இறைத்தூதரை சந்தித்து, அவருடைய ஆணைப்படி தஞ்சை சென்றதாக தொன்மம் உள்ளது.   

தஞ்சையில் மகாராஜனும் சிவகுருநாதனும் அவர்களின் உறவினர்களின் இல்லத்தில் தங்கினர். தஞ்சையில் ராஜநாயக்கன் என்பவர் அங்கே பலரை மதம் மாற்றியும், ஆலயம் அமைத்தும் மதப்பணி ஆற்றிவந்தார். அவருடைய தூண்டுதலால் மகாராஜனும் சிவகுருநாதனும் அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்குச் சென்றதாகவும், அவர்கள் மட்டும் வெளியே நின்றிருந்ததாகவும், அந்த தேவாலயப் போதகரான ரெவெ கோலாஃப் (John Caspar Kohlhoff) வெளியே வந்து அவர்களை அழைத்து உரையாடியதாகவும், அதன் விளைவாக அவர்கள் இருவரும் மதம் மாறியதாகவும் சொல்லப்படுகிறது. மகாராஜன் மதம் மாறி வேதமாணிக்கம் ஆனார். சிவகுருநாதன் மாசிலாமணியாக மாறினார்.   

====== ரிங்கல்தௌபே வருகை ======
====== ரிங்கல்தௌபே வருகை ======
வேதமாணிக்கம் மதம் மாறியது மைலாடியில் அவருடைய உறவினரிடையே பூசல்களை உருவாக்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தஞ்சாவூர் சென்ற வேதமாணிக்கம் கோலாஃபிடம் மைலாடிக்கு ஒரு போதகரை அனுப்பும்படி கோரினார். கோலாஃப் அளித்த கடிதத்துடன் தரங்கம்பாடி சென்று அங்கே மதப்பணியாற்றிவந்த ரெவெ:[[ரிங்கல்தௌபே]] யை சந்தித்து மைலாடிக்கு அழைத்தார். தரங்கம்பாடியில் செய்துவரும் பணி முடிந்தபின் வருவதாக ரிங்கல்தௌபே ஒப்புக்கொண்டார். மேலும் இரண்டு ஆண்டுகள் கழித்து 1803ல் ரிங்கல்தௌபே மைலாடிக்கு வந்தார்.  
வேதமாணிக்கம் மதம் மாறியது மைலாடியில் அவருடைய உறவினரிடையே பூசல்களை உருவாக்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தஞ்சாவூர் சென்ற வேதமாணிக்கம் கோலாஃபிடம் மைலாடிக்கு ஒரு போதகரை அனுப்பும்படி கோரினார். கோலாஃப் அளித்த கடிதத்துடன் தரங்கம்பாடி சென்று அங்கே மதப்பணியாற்றிவந்த ரெவெ:[[ரிங்கல்தௌபே]] யை சந்தித்து மைலாடிக்கு அழைத்தார். தரங்கம்பாடியில் செய்துவரும் பணி முடிந்தபின் வருவதாக ரிங்கல்தௌபே ஒப்புக்கொண்டார். மேலும் இரண்டு ஆண்டுகள் கழித்து 1803-ல் ரிங்கல்தௌபே மைலாடிக்கு வந்தார்.  

அப்போது திருவிதாங்கூர் அரசின் பொறுப்பில் இருந்த திவான் வேலுத்தம்பி தளவாய்க்கும்  ஆங்கிலேயருக்குமிடையே பூசல்கள் இருந்தமையால் ரிங்கல்தௌபே மைலாடி வருவதற்கு திவானின் அனுமதி கிடைக்கவில்லை.  ஆகவே ரிங்கல்தௌபே பாளையங்கோட்டையில் தங்கியிருந்து மாதமொருமுறை மைலாடிக்கு வந்துசென்றார். 1809ல் வேலுத்தம்பி தளவாய் ஆங்கிலேயருடனான போரில் கொல்லப்பட்டு, திருவிதாங்கூருக்கும் ஆங்கிலேயருக்குமான பூசல் முடிவுக்கு வந்ததும் திருவிதாங்கூர் ரெஸிடெண்ட் கர்னல் மெக்காலே ரிங்கல்தௌபே மைலாடிக்குச் செல்ல ஒப்புதல் அளித்தார். ரிங்கல்தௌபே மைலாடிக்கு வந்து நிரந்தரமாகத் தங்கினார்   
அப்போது திருவிதாங்கூர் அரசின் பொறுப்பில் இருந்த திவான் வேலுத்தம்பி தளவாய்க்கும்  ஆங்கிலேயருக்குமிடையே பூசல்கள் இருந்தமையால் ரிங்கல்தௌபே மைலாடி வருவதற்கு திவானின் அனுமதி கிடைக்கவில்லை.  ஆகவே ரிங்கல்தௌபே பாளையங்கோட்டையில் தங்கியிருந்து மாதமொருமுறை மைலாடிக்கு வந்துசென்றார். 1809-ல் வேலுத்தம்பி தளவாய் ஆங்கிலேயருடனான போரில் கொல்லப்பட்டு, திருவிதாங்கூருக்கும் ஆங்கிலேயருக்குமான பூசல் முடிவுக்கு வந்ததும் திருவிதாங்கூர் ரெஸிடெண்ட் கர்னல் மெக்காலே ரிங்கல்தௌபே மைலாடிக்குச் செல்ல ஒப்புதல் அளித்தார். ரிங்கல்தௌபே மைலாடிக்கு வந்து நிரந்தரமாகத் தங்கினார்   

====== மைலாடி ஆலயப்பணி ======
====== மைலாடி ஆலயப்பணி ======
ரிங்கல்தௌபே மைலாடிக்கு வந்ததும் மதமாற்றம் விரைவுகொண்டது. மைலாடியில் ஓர் ஆலயம் கட்ட எண்ணிய வேதமாணிக்கம் 1809ல் கொல்லம் சென்று திருவிதாங்கூர் மகாராஜா அவிட்டம் திருநாள் பாலராம வர்மாவைச் சந்தித்து மைலாடியில் ஆலயம் அமைக்க அனுமதி கோரினார். ரெஸிடென்ட் மெக்காலேயின் அறிவுறுத்தலின்படி திவான் உம்மிணித்தம்பி அனுமதி அளித்தார். தேவாலயம் கட்ட கோலாஃப் நிதியுதவி அளித்தார்.
ரிங்கல்தௌபே மைலாடிக்கு வந்ததும் மதமாற்றம் விரைவுகொண்டது. மைலாடியில் ஓர் ஆலயம் கட்ட எண்ணிய வேதமாணிக்கம் 1809-ல் கொல்லம் சென்று திருவிதாங்கூர் மகாராஜா அவிட்டம் திருநாள் பாலராம வர்மாவைச் சந்தித்து மைலாடியில் ஆலயம் அமைக்க அனுமதி கோரினார். ரெஸிடென்ட் மெக்காலேயின் அறிவுறுத்தலின்படி திவான் உம்மிணித்தம்பி அனுமதி அளித்தார். தேவாலயம் கட்ட கோலாஃப் நிதியுதவி அளித்தார்.

====== ரிங்கல்தௌபேக்குப்பின் ======
====== ரிங்கல்தௌபேக்குப்பின் ======
ரிங்கல்தௌபே ஏறத்தாழ 12 ஆண்டுகள் மதப்பணி புரிந்தார். அவருடைய உடல்நிலை நலிவடைந்தது. அவர் தனக்கு மாற்றாக ஒருவர் அனுப்பப்படவேண்டும் என லண்டன் மிஷன் அமைப்புக்கு எழுதியும் எவரும் அனுப்பப்படவில்லை. 1815ல் ரிங்கல்தௌபே லண்டன் திரும்பினார். 1817ல் [[சார்ல்ஸ் மீட்]] லண்டன் மிஷன் பொறுப்பாளராக அனுப்பப்பட்டார். அந்த இரண்டு ஆண்டுகளும் வெளிநாட்டு நிதியுதவி இன்றி வேதமாணிக்கம் மைலாடி திருச்சபையையும் நாகர்கோயில் வட்டார மதப்பணிகளையும் நடத்தி வந்தார்.
ரிங்கல்தௌபே ஏறத்தாழ 12 ஆண்டுகள் மதப்பணி புரிந்தார். அவருடைய உடல்நிலை நலிவடைந்தது. அவர் தனக்கு மாற்றாக ஒருவர் அனுப்பப்படவேண்டும் என லண்டன் மிஷன் அமைப்புக்கு எழுதியும் எவரும் அனுப்பப்படவில்லை. 1815-ல் ரிங்கல்தௌபே லண்டன் திரும்பினார். 1817-ல் [[சார்ல்ஸ் மீட்]] லண்டன் மிஷன் பொறுப்பாளராக அனுப்பப்பட்டார். அந்த இரண்டு ஆண்டுகளும் வெளிநாட்டு நிதியுதவி இன்றி வேதமாணிக்கம் மைலாடி திருச்சபையையும் நாகர்கோயில் வட்டார மதப்பணிகளையும் நடத்தி வந்தார்.

ரெவெ. சார்ல்ஸ் மீட் 1818ல் மைலாடியில் இருந்து திருச்சபை தலைமையகத்தை நாகர்கோயிலுக்கு மாற்றினார். வேதமாணிக்கம் மைலாடியிலேயே இருந்து சபைப்பணிகளை ஆற்றிவந்தார்.  
ரெவெ. சார்ல்ஸ் மீட் 1818-ல் மைலாடியில் இருந்து திருச்சபை தலைமையகத்தை நாகர்கோயிலுக்கு மாற்றினார். வேதமாணிக்கம் மைலாடியிலேயே இருந்து சபைப்பணிகளை ஆற்றிவந்தார்.  

====== போதகர் பணிகள் ======
====== போதகர் பணிகள் ======
Line 46: Line 46:

== பாடல்கள் ==
== பாடல்கள் ==
வேதமாணிக்கம் ஆலயவழிபாட்டுக்காக பல பாடல்களை இயற்றினார்.  "ஆ! இன்ப காலமல்லோ" "ஜீவ வசனம் கூறுவோம்," என்ற பாடல்களும், திருச்சபைக் கீர்த்தனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.  
வேதமாணிக்கம் ஆலயவழிபாட்டுக்காக பல பாடல்களை இயற்றினார்.  'ஆ! இன்ப காலமல்லோ' ,'ஜீவ வசனம் கூறுவோம்', என்ற பாடல்களும், திருச்சபைக் கீர்த்தனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.  

== மறைவு ==
== மறைவு ==

Revision as of 13:20, 14 June 2023

மகாராஜன் வேதமாணிக்கம்
மைலாடி தேவாலயம் வேதமாணிக்கம் கட்டியது
மைலாடி தேவாலயம் இன்று
மைலாடி நினைவுத்தூண்
வேதமாணிக்கம் பழைய கல்லறை
வேதமாணிக்கம்  கல்லறை புதுப்பிக்கப்பட்டது

மகாராஜன் வேதமாணிக்கம் ( 1763-1827) (மகாராசன் வேதமாணிக்கம்) குமரிமாவட்டத்தில் முதலில் சீர்திருத்த கிறிஸ்தவராக மாறியவர். சீர்திருத்தக் கிறிஸ்தவர்களால் முன்னோடியாக மதிக்கப்படுபவர். இயற்பெயர் மகாராஜன்.வேதமாணிக்கம் குடும்பம் நான்கு தலைமுறைக்காலம் பல அறிஞர்களும் புகழ்மிக்க ஆளுமைகளும் கொண்டதாக இருந்தது

பிறப்பு, கல்வி

மகாராஜன் வேதமாணிக்கம் 1763-ம் ஆண்டு மதுரநாயகம்-தேவாயி தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக நாகர்கோயில் அருகே மைலாடி என்ற ஊரில், நாடார் குடியில் பிறந்தார். அவருடைய இயற்பெயர் மகாராஜன். அவருடைய முன்னோர்கள் சோழநாட்டில் இருந்து பதினெட்டாம் நூற்றாண்டில் நாஞ்சில்நாட்டுக்கு வந்தவர்கள் எனப்படுகிறது. மைலாடி அக்காலத்தில் புதர்க்காடாக இருந்தது. அங்கே அவர்கள் சிற்றூர்களை அமைத்து வேளாண்மை செய்துவந்தனர். திருவிதாங்கூர் மகாராஜா கார்த்திகைத் திருநாள் ராமவர்மா ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட புத்தனாறு கால்வாய் வழியாக அப்பகுதிக்கு நீர்ப்பாசனம் வந்தபோது புதர்க்காடுகள் நெல்வயல்களாயின. அவ்வாறு அவர் குடும்பம் செல்வநிலையை அடைந்தது.

ஐந்து வயதிலேயே தந்தையை இழந்த வேதமாணிக்கம் தாய் மற்றும் தாய்மாமனின் பராமரிப்பில் வளர்ந்தார், நாகர்கோயில் அருகே இரவிப்புதூர் என்னும் ஊரில் தொடக்கக் கல்வி பயின்றார்.

தனிவாழ்க்கை

வேதமாணிக்கம் 1783-ஆம் ஆண்டு மார்த்தாண்டம் அருகே மத்திகோடு என்னும் ஊரைச் சேர்ந்த சத்தியாயியை மணந்தார். சத்தியாயி பின்னர் அவருடன் மதம் மாறி ராஹேல் என்று பெயர் பெற்றார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள். பாக்கியாயி பின்னர் அன்னா அம்மாள் ஆக மதம் மாறினார். சிதம்பரம் பின்னர் தேவசகாயமாக மதம் மாறினார். தேவசகாயம் புத்தளம் தேவாலயத்தில் போதகராகப் பணியாற்றினார். கடைசி மகன் மோசஸ்.

பணி

வேதமாணிக்கம் உயர் படிப்பை முடித்து அரசு அதிகாரியாக வேலையிலமர்ந்தார். அரசு வேலையை விட்டுவிட்டு, லண்டன் மிஷனில் ஆசிரியராகவும், பின்னர் லண்டன் மிஷன் பள்ளிகளின் ஆய்வாளராகவும் பணியாற்றினார்.சிறிது காலம் மத்திகோடு சபை உபதேசியராக ஊழியம் செய்தபின், 1912-ம் ஆண்டு கல்லுக்கூட்டம் திருச்சபைப் போதகரானார்.

வேதமாணிக்கம் குடும்பம்

வேதமாணிக்கத்தின் தாய்மாமன் பெருமாள் ரிங்கல்தௌபேயால் மதமாற்றம் செய்யப்பட்டு ஞானமுத்துவாக ஆனார். அவர் மனைவி நல்லாயி ஆனார். வேதமாணிக்கத்தின் தம்பி சிவனன் மதம் மாறி ஞானாபரணம் ஆனார். அவர் மனைவி ஞானாயியாக ஆனார். அவர்களின் மகன் தேவவரம் புத்தூல்ப் கவிஞர். தேவவரத்தின் மகள் லோய்ஸ் புத்தூல்ப்பை ரெவெ. மீட் மணந்தார்.

மதப்பணி

மகாராஜன் வேதமாணிக்கம் குடும்பம் சைவப்பின்னணி கொண்டது. அவருடைய குலதெய்வம் வள்ளியூர் அருகே உள்ள இளங்கமணியன் என்று சொல்லப்படுகிறது.

மதமாற்றம்

1799-ஆம் ஆண்டு தன் அண்ணன் மகன் சிவகுருநாதனுடன் சிதம்பரத்துக்குச் சென்ற மகாராஜன் அங்கே நடந்த சடங்குகளைக் கண்டு ஏமாற்றமடைந்து கால்நடையாக தஞ்சாவூர் வந்தார். வேதமாணிக்கம் சிதம்பரம் ஆலயத்தில் கனவில் இறைத்தூதரை சந்தித்து, அவருடைய ஆணைப்படி தஞ்சை சென்றதாக தொன்மம் உள்ளது.

தஞ்சையில் மகாராஜனும் சிவகுருநாதனும் அவர்களின் உறவினர்களின் இல்லத்தில் தங்கினர். தஞ்சையில் ராஜநாயக்கன் என்பவர் அங்கே பலரை மதம் மாற்றியும், ஆலயம் அமைத்தும் மதப்பணி ஆற்றிவந்தார். அவருடைய தூண்டுதலால் மகாராஜனும் சிவகுருநாதனும் அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்குச் சென்றதாகவும், அவர்கள் மட்டும் வெளியே நின்றிருந்ததாகவும், அந்த தேவாலயப் போதகரான ரெவெ கோலாஃப் (John Caspar Kohlhoff) வெளியே வந்து அவர்களை அழைத்து உரையாடியதாகவும், அதன் விளைவாக அவர்கள் இருவரும் மதம் மாறியதாகவும் சொல்லப்படுகிறது. மகாராஜன் மதம் மாறி வேதமாணிக்கம் ஆனார். சிவகுருநாதன் மாசிலாமணியாக மாறினார்.

ரிங்கல்தௌபே வருகை

வேதமாணிக்கம் மதம் மாறியது மைலாடியில் அவருடைய உறவினரிடையே பூசல்களை உருவாக்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தஞ்சாவூர் சென்ற வேதமாணிக்கம் கோலாஃபிடம் மைலாடிக்கு ஒரு போதகரை அனுப்பும்படி கோரினார். கோலாஃப் அளித்த கடிதத்துடன் தரங்கம்பாடி சென்று அங்கே மதப்பணியாற்றிவந்த ரெவெ:ரிங்கல்தௌபே யை சந்தித்து மைலாடிக்கு அழைத்தார். தரங்கம்பாடியில் செய்துவரும் பணி முடிந்தபின் வருவதாக ரிங்கல்தௌபே ஒப்புக்கொண்டார். மேலும் இரண்டு ஆண்டுகள் கழித்து 1803-ல் ரிங்கல்தௌபே மைலாடிக்கு வந்தார்.

அப்போது திருவிதாங்கூர் அரசின் பொறுப்பில் இருந்த திவான் வேலுத்தம்பி தளவாய்க்கும் ஆங்கிலேயருக்குமிடையே பூசல்கள் இருந்தமையால் ரிங்கல்தௌபே மைலாடி வருவதற்கு திவானின் அனுமதி கிடைக்கவில்லை. ஆகவே ரிங்கல்தௌபே பாளையங்கோட்டையில் தங்கியிருந்து மாதமொருமுறை மைலாடிக்கு வந்துசென்றார். 1809-ல் வேலுத்தம்பி தளவாய் ஆங்கிலேயருடனான போரில் கொல்லப்பட்டு, திருவிதாங்கூருக்கும் ஆங்கிலேயருக்குமான பூசல் முடிவுக்கு வந்ததும் திருவிதாங்கூர் ரெஸிடெண்ட் கர்னல் மெக்காலே ரிங்கல்தௌபே மைலாடிக்குச் செல்ல ஒப்புதல் அளித்தார். ரிங்கல்தௌபே மைலாடிக்கு வந்து நிரந்தரமாகத் தங்கினார்

மைலாடி ஆலயப்பணி

ரிங்கல்தௌபே மைலாடிக்கு வந்ததும் மதமாற்றம் விரைவுகொண்டது. மைலாடியில் ஓர் ஆலயம் கட்ட எண்ணிய வேதமாணிக்கம் 1809-ல் கொல்லம் சென்று திருவிதாங்கூர் மகாராஜா அவிட்டம் திருநாள் பாலராம வர்மாவைச் சந்தித்து மைலாடியில் ஆலயம் அமைக்க அனுமதி கோரினார். ரெஸிடென்ட் மெக்காலேயின் அறிவுறுத்தலின்படி திவான் உம்மிணித்தம்பி அனுமதி அளித்தார். தேவாலயம் கட்ட கோலாஃப் நிதியுதவி அளித்தார்.

ரிங்கல்தௌபேக்குப்பின்

ரிங்கல்தௌபே ஏறத்தாழ 12 ஆண்டுகள் மதப்பணி புரிந்தார். அவருடைய உடல்நிலை நலிவடைந்தது. அவர் தனக்கு மாற்றாக ஒருவர் அனுப்பப்படவேண்டும் என லண்டன் மிஷன் அமைப்புக்கு எழுதியும் எவரும் அனுப்பப்படவில்லை. 1815-ல் ரிங்கல்தௌபே லண்டன் திரும்பினார். 1817-ல் சார்ல்ஸ் மீட் லண்டன் மிஷன் பொறுப்பாளராக அனுப்பப்பட்டார். அந்த இரண்டு ஆண்டுகளும் வெளிநாட்டு நிதியுதவி இன்றி வேதமாணிக்கம் மைலாடி திருச்சபையையும் நாகர்கோயில் வட்டார மதப்பணிகளையும் நடத்தி வந்தார்.

ரெவெ. சார்ல்ஸ் மீட் 1818-ல் மைலாடியில் இருந்து திருச்சபை தலைமையகத்தை நாகர்கோயிலுக்கு மாற்றினார். வேதமாணிக்கம் மைலாடியிலேயே இருந்து சபைப்பணிகளை ஆற்றிவந்தார்.

போதகர் பணிகள்

வேதமாணிக்கம் மைலாடி, நாகர்கோயில் வட்டாரத்தில் பல ஊர்களில் தேவாலயப் போதகராகப் பணியாற்றினார். “சுவிசேஷப் படையெழுச்சி” என்ற திறந்த வெளிக் கூட்டங்களை நடத்தினார். ஞாயிறு தோறும் மாலை நேரத்தில், பெண்களுக்குச் சிறப்பு வேதப் பயிற்சிக் கூட்டங்களை, வீடுகளில் நடத்தினார்.

பாடல்கள்

வேதமாணிக்கம் ஆலயவழிபாட்டுக்காக பல பாடல்களை இயற்றினார். 'ஆ! இன்ப காலமல்லோ' ,'ஜீவ வசனம் கூறுவோம்', என்ற பாடல்களும், திருச்சபைக் கீர்த்தனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

மறைவு

1827-ம் ஆண்டு வேதமாணிக்கம் மார்த்தாண்டத்திலுள்ள தனது மனைவியின் தங்கை வீட்டிற்குச் செல்ல பஸ்ஸில் ஏறும்போது தவறி விழுந்ததில், பேருந்தின் சக்கரம் அவரது காலில் ஏறி காயம் ஏற்பட்டது. அத்துடன் பயணத்தைத் தொடர்ந்த அவர் மார்த்தாண்டத்தில், மூன்றாம் நாளில் மரணமடைந்தார்.

நூல்

மகாராசன் வேதமாணிக்கம் பற்றி ’மகாராசன் வேதமாணிக்கம் காவியம்’ என்னும் நூலைபுலவர் நாஞ்சில் நாரண.தொல்காப்பியன் எழுதி ஆசியவியல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வரலாற்று இடம்

வேதமாணிக்கம் தென்திருவிதாங்கூரின் முதல் சீர்திருத்தக் கிறிஸ்தவர் என மதிக்கப்படுகிறார். குமரிமாவட்டத்திலும் திருநெல்வேலியிலும் சீர்திருத்த கிறிஸ்தவம் பரவ தொடக்கப்புள்ளியாக அமைந்தார்.

உசாத்துணை

✅Finalised Page