under review

ஊண்பித்தை: Difference between revisions

From Tamil Wiki
(Added First published date)
 
(2 intermediate revisions by 2 users not shown)
Line 17: Line 17:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.tamilvu.org/library/nationalized/pdf/17-kagovindan/sangaththamizhppulavarvarisai(5)pennbarpulavargall.pdf சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை 5: பெண்பாற் புலவர்கள்: புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்]
* [https://www.tamilvu.org/library/nationalized/pdf/17-kagovindan/sangaththamizhppulavarvarisai(5)pennbarpulavargall.pdf சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை 5: பெண்பாற் புலவர்கள்: புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்]
* பெண்பாற்புலவர்கள் ஐவரின் அனுபவ மொழி: தினமணி
* [https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2016/mar/13/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85-1293875.html பெண்பாற்புலவர்கள் ஐவரின் அனுபவ மொழி: தினமணி]
 
 
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|15-Dec-2022, 09:13:20 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்கள்]]
[[Category:புலவர்கள்]]
[[Category:Spc]]

Latest revision as of 16:46, 13 June 2024

ஊண்பித்தை சங்ககாலப் பெண்பாற் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று சங்கத்தொகை நூலில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

ஊண்பித்தியார் என்றும் அழைப்பர். வேறு தகவல்கள் கிடைக்கவில்லை.

இலக்கிய வாழ்க்கை

ஊண்பித்தை பாடிய பாடல் குறுந்தொகையில் 232-ஆவது பாடலாக உள்ளது. பாலைத் திணைப் பாடல். தலைவன் பிரிந்திருந்த காலத்தில், "தலைவர் நம்மை நினைத்திலர்போலும்!" என வருத்தமுற்ற தலைவியை நோக்கி, "அவர் நினையாமலிரார்; வினை முற்றாமையின் வந்திலர்" என்று தோழி கூறியதாகப் பாடல் உள்ளது.

பாடல்வழி அறியவரும் செய்திகள்
  • 'மரல் புகா அருந்திய மா எருத்து இரலை': உரலைப் போன்ற காலை உடைய யானை யாமரத்தினை முறித்து உண்டு அதன் அடர்த்தியை குறையச் செய்யும். அதனால் ஏற்படும் புள்ளிகளை உடைய நிழலில் தூங்குகின்ற மரல் என்னும் கொடியை உணவாக உண்ட பெரிய பிடரை உடைய ஆண்மான், மிகப் பெரிய சோலைகளை உடைய மலைகளைக் கடந்து நம்மைப் பிரிந்து சென்ற தலைவர்.

பாடல் நடை

உள்ளார் கொல்லோ தோழி உள்ளியும்
வாய்ப்புணர் வின்மையின் வாரார் கொல்லோ
மரற்புகா வருந்திய மாவெருத் திரலை
உரற்கா லியானை யொடித்துண் டெஞ்சிய
யாஅ வரிநிழல் துஞ்சும்
மாயிருஞ் சோலை மலையிறந் தோரே.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Dec-2022, 09:13:20 IST