under review

வையாபாடல்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
(7 intermediate revisions by 2 users not shown)
Line 2: Line 2:
வையாபாடல் (பொ.யு. பதினைந்தாம் நூற்றாண்டு) வையாபுரி ஐயர் பாடிய யாழ்ப்பாண வரலாற்று நூல்.
வையாபாடல் (பொ.யு. பதினைந்தாம் நூற்றாண்டு) வையாபுரி ஐயர் பாடிய யாழ்ப்பாண வரலாற்று நூல்.
== வெளியீடு ==
== வெளியீடு ==
வையாபாடல் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை ஏட்டுப் பிரதியாக இருந்தது. 1921இல் யாழ்ப்பாணம் மத்தியக்கல்லூரியில் ஆசிரியராக இருந்த J.W. அருட்பிரகாசம் முதன் முதலில் அச்சேற்றினார். 1922-ல் மலேசியா பினாங்கைச் சேர்ந்த இ.து. சிவானந்தன் அச்சேற்றினார். 1921-ல் நல்லூர் ஞானப்பிரகாசர் வசன வடிவில் மருவிய வையாப்பாடலைப் பதிப்பித்தார். பல பிரதிகளை ஒப்பிட்டு 1980இல் கொழும்பு தமிழ்ச்சங்க வெளியீடாக க.செ. நடராசா வையாபாடல் நூலை பதிப்பித்தார்.
வையாபாடல் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை ஏட்டுப் பிரதியாக இருந்தது. 1921-ல் யாழ்ப்பாணம் மத்தியக்கல்லூரியில் ஆசிரியராக இருந்த ஜே. டபிள்யு. அருட்பிரகாசம் முதன் முதலில் இந்நூலை அச்சேற்றினார். 1922-ல் மலேசியா பினாங்கைச் சேர்ந்த இ.து. சிவானந்தன் அச்சேற்றினார். 1921-ல் நல்லூர் ஞானப்பிரகாசர் வசன வடிவில் மருவிய வையாப்பாடலைப் பதிப்பித்தார். பல பிரதிகளை ஒப்பிட்டு 1980-ல் கொழும்பு தமிழ்ச்சங்க வெளியீடாக க.செ. நடராசா வையாபாடல் நூலை பதிப்பித்தார்.
== நூல் பற்றி ==
== நூல் பற்றி ==
பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த யாழ்ப்பாணத் தமிழ் வேந்தர் செகராசசேகரனின் அவைக்களப்புலவரான வையாபுரி ஐயர் பாடியது. ‘இலங்கை மண்டலக்காதை’ என்பது இதன் இயற்பெயர். 105 செய்யுட்களைக் கொண்டது. யாழ்ப்பாண வைவ
வையாபாடல் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த யாழ்ப்பாணத் தமிழ் மன்னர் செகராசசேகரனின் அவைக்களப்புலவரான [[வையாபுரி ஐயர்]] பாடியது. ‘இலங்கை மண்டலக்காதை’ என்பது இதன் இயற்பெயர். 105 செய்யுட்களைக் கொண்டது. யாழ்ப்பாண வரலாறு பற்றிய நூல்.
== உள்ளடக்கம் ==
== உள்ளடக்கம் ==
இலங்கை அரசனின் குலங்களையும், குடிகளையும் குடிகள் வந்த முறையையும் பாடியது. பரராசசேகரன், செகராசசேகரன் குலத்தைப் பாடும் பொருட்டு யாழ்ப்பாணத்தின் முதல் அரசனான கூழ்ங்கைச் சக்கரவர்த்தியையும், அவன் மைத்துனியான மாருதப்பிரவையின் வரவு, வன்னியர் குடியேற்றம், அவர்கள் ஆதிக்குடிகளை ஆண்ட நிகழ்வுகள், வன்னியர் வரவைத் தொடர்ந்து இந்தியா, சீனா, துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து குடிகள் வந்து இலங்கையில் குடியேறியது, அதன் மூலமாக வந்த பல்வகைத் தெய்வங்கள், பரராசசேகரன் காலத்தில் நிகழ்ந்த சம்பவங்கள், மரணம் ஆகியவை நூலில் உள்ளது.  
வையாபாடல் இலங்கை அரசனின் குலங்களையும், குடிகளையும் குடிகள் வந்த முறையையும் பாடியது. பரராசசேகரன், செகராசசேகரன் குலத்தைப் பாடும் பொருட்டு யாழ்ப்பாணத்தின் முதல் அரசனான கூழங்கைச் சக்கரவர்த்தியையும், அவன் மைத்துனியான மாருதப்பிரவையின் வரவு, வன்னியர் குடியேற்றம், அவர்கள் ஆதிகுடிகளை ஆண்ட நிகழ்வுகள், வன்னியர் வரவைத் தொடர்ந்து இந்தியா, சீனா, துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து குடிகள் வந்து இலங்கையில் குடியேறியது, அதன் மூலமாக வந்த பல்வகைத் தெய்வங்கள், பரராசசேகரன் காலத்தில் நிகழ்ந்த சம்பவங்கள், மரணம் ஆகிய செய்திகள் இநூலில் உள்ளன. 
== இலக்கிய இடம் ==
இலங்கத் தமிழர்கள் அதன் பூர்வ குடிகள் என்பதற்கான இலக்கியச் சான்றாக இந்நூல் முன்வைக்கப்படுகிறது.
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM2lJYy&tag=Inna%20narpatu,%20iniyavai%20narpatu,%20kar%20narpatu,%20kalavali%20narpatu#book1/ வையாபாடல்: tamildigitallibrary]

{{Being created}}
 
{{Finalised}}
 
{{Fndt|05-Sep-2023, 00:56:06 IST}}
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 12:05, 13 June 2024

வையாபாடல்

வையாபாடல் (பொ.யு. பதினைந்தாம் நூற்றாண்டு) வையாபுரி ஐயர் பாடிய யாழ்ப்பாண வரலாற்று நூல்.

வெளியீடு

வையாபாடல் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை ஏட்டுப் பிரதியாக இருந்தது. 1921-ல் யாழ்ப்பாணம் மத்தியக்கல்லூரியில் ஆசிரியராக இருந்த ஜே. டபிள்யு. அருட்பிரகாசம் முதன் முதலில் இந்நூலை அச்சேற்றினார். 1922-ல் மலேசியா பினாங்கைச் சேர்ந்த இ.து. சிவானந்தன் அச்சேற்றினார். 1921-ல் நல்லூர் ஞானப்பிரகாசர் வசன வடிவில் மருவிய வையாப்பாடலைப் பதிப்பித்தார். பல பிரதிகளை ஒப்பிட்டு 1980-ல் கொழும்பு தமிழ்ச்சங்க வெளியீடாக க.செ. நடராசா வையாபாடல் நூலை பதிப்பித்தார்.

நூல் பற்றி

வையாபாடல் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த யாழ்ப்பாணத் தமிழ் மன்னர் செகராசசேகரனின் அவைக்களப்புலவரான வையாபுரி ஐயர் பாடியது. ‘இலங்கை மண்டலக்காதை’ என்பது இதன் இயற்பெயர். 105 செய்யுட்களைக் கொண்டது. யாழ்ப்பாண வரலாறு பற்றிய நூல்.

உள்ளடக்கம்

வையாபாடல் இலங்கை அரசனின் குலங்களையும், குடிகளையும் குடிகள் வந்த முறையையும் பாடியது. பரராசசேகரன், செகராசசேகரன் குலத்தைப் பாடும் பொருட்டு யாழ்ப்பாணத்தின் முதல் அரசனான கூழங்கைச் சக்கரவர்த்தியையும், அவன் மைத்துனியான மாருதப்பிரவையின் வரவு, வன்னியர் குடியேற்றம், அவர்கள் ஆதிகுடிகளை ஆண்ட நிகழ்வுகள், வன்னியர் வரவைத் தொடர்ந்து இந்தியா, சீனா, துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து குடிகள் வந்து இலங்கையில் குடியேறியது, அதன் மூலமாக வந்த பல்வகைத் தெய்வங்கள், பரராசசேகரன் காலத்தில் நிகழ்ந்த சம்பவங்கள், மரணம் ஆகிய செய்திகள் இநூலில் உள்ளன.

இலக்கிய இடம்

இலங்கத் தமிழர்கள் அதன் பூர்வ குடிகள் என்பதற்கான இலக்கியச் சான்றாக இந்நூல் முன்வைக்கப்படுகிறது.

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Sep-2023, 00:56:06 IST