under review

முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்: Difference between revisions

From Tamil Wiki
(Category:புலவர்கள் சேர்க்கப்பட்டது)
(Added First published date)
 
(One intermediate revision by one other user not shown)
Line 3: Line 3:
ஆதன் என்ற சொல் சேர மரபைக் குறிப்பது. அரசப்புலவர்களில் ஒருவர்.  
ஆதன் என்ற சொல் சேர மரபைக் குறிப்பது. அரசப்புலவர்களில் ஒருவர்.  
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
அகநானூற்றில் உள்ள ஒரு பாடலை(30) எழுதினார். நெய்தல் திணையைச் சேர்ந்தது. பெரிய வலையை இழுக்கும் வலைஞர் தொழில் பற்றிய சித்தரிப்பு, உப்புப் பொதி ஏற்றிய வண்டியை ஏற்றிச் செல்லும் எருதுகள் போன்ற செய்திகள் பாடலில் காணப்படுகிறது. கடலிலிருந்து கிடைத்த மீன்களை கொடையாக அளிக்கும் வலைஞரின் கொடைத்தன்மையை உழவர்கள் களம்பாடுவோர்க்கு பரிசாக அளிக்கும் நெல்லுக்கு உவமையாக சொல்லப்பட்டது.  
[[அகநானூறு|அகநானூற்றில்]] உள்ள நெய்தல் திணையைச் சேர்ந்த பாடலை(30) எழுதினார். பெரிய வலையை இழுக்கும் வலைஞர் தொழில் பற்றிய சித்தரிப்பு, உப்புப் பொதி ஏற்றிய வண்டியை ஏற்றிச் செல்லும் எருதுகள் போன்ற செய்திகள் பாடலில் காணப்படுகிறது. கடலிலிருந்து கிடைத்த மீன்களை கொடையாக அளிக்கும் வலைஞரின் கொடைத்தன்மையை உழவர்கள் களம்பாடுவோர்க்கு பரிசாக அளிக்கும் நெல்லுக்கு உவமையாக சொல்லப்பட்டது.  
== பாடல் நடை ==
== பாடல் நடை ==
* அகநானூறு 30
* அகநானூறு 30
Line 25: Line 25:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1k0l3&tag=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88#book1/ புலவர் கா. கோவிந்தன் – திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் – சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-3]

{{First review completed}}
 
{{Finalised}}
 
{{Fndt|11-Sep-2023, 03:19:55 IST}}
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்கள்]]
[[Category:புலவர்கள்]]

Latest revision as of 16:27, 13 June 2024

முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன் சங்க காலப் புலவர். அகநானூற்றில் உள்ள ஒரு பாடலை எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

ஆதன் என்ற சொல் சேர மரபைக் குறிப்பது. அரசப்புலவர்களில் ஒருவர்.

இலக்கிய வாழ்க்கை

அகநானூற்றில் உள்ள நெய்தல் திணையைச் சேர்ந்த பாடலை(30) எழுதினார். பெரிய வலையை இழுக்கும் வலைஞர் தொழில் பற்றிய சித்தரிப்பு, உப்புப் பொதி ஏற்றிய வண்டியை ஏற்றிச் செல்லும் எருதுகள் போன்ற செய்திகள் பாடலில் காணப்படுகிறது. கடலிலிருந்து கிடைத்த மீன்களை கொடையாக அளிக்கும் வலைஞரின் கொடைத்தன்மையை உழவர்கள் களம்பாடுவோர்க்கு பரிசாக அளிக்கும் நெல்லுக்கு உவமையாக சொல்லப்பட்டது.

பாடல் நடை

  • அகநானூறு 30

நெடுங் கயிறு வலந்த குறுங் கண் அவ் வலை,
கடல் பாடு அழிய, இன மீன் முகந்து,
துணை புணர் உவகையர் பரத மாக்கள்
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி,
உப்பு ஒய் உமணர் அருந் துறைபோக்கும்
ஒழுகை நோன் பகடு ஒப்பக் குழீஇ,
அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கி,
பெருங் களம் தொகுத்த உழவர் போல,
இரந்தோர் வறுங் கலம் மல்க வீசி,
பாடு பல அமைத்து, கொள்ளை சாற்றி,
கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவ!
பெருமை என்பது கெடுமோ ஒரு நாள்
மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத்
தண் நறுங் கானல் வந்து, 'நும்
வண்ணம் எவனோ?' என்றனிர் செலினே?

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-Sep-2023, 03:19:55 IST