under review

சி.ஆர். ராஜம்மா: Difference between revisions

From Tamil Wiki
(Category:எழுத்தாளர்கள் சேர்க்கப்பட்டது)
(Added First published date)
 
(2 intermediate revisions by 2 users not shown)
Line 18: Line 18:




{{First review completed}}
{{Finalised}}
 
{{Fndt|10-Mar-2023, 07:37:27 IST}}
 
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:எழுத்தாளர்கள்]]

Latest revision as of 16:29, 13 June 2024

சி.ஆர். ராஜம்மா (நன்றி: அரவிந்த் சுவாமிநாதன்)

சி.ஆர். ராஜம்மா விடுதலைக்கு முந்தைய தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். எழுபது நாவல்களை எழுதியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

மிகவும் ஏழ்மையான பின்னணியில் வாழ்ந்தவர். கணவர் ஸ்ரீனிவாசன் எவ்வித வேலைக்கும் செல்லாததால் இவர் தான் உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டி ஆனது. அதற்காக, தனக்குத் தெரிந்த எழுத்தையே தனது வாழ்க்கையாகக் கொண்டார். ரயில்வே ஸ்டேஷனில் அமர்ந்து கதைகளை எழுதி, அவற்றைப் பதிப்பாளர்களிடம் கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் வாழ்க்கை நடத்தினார்.

இலக்கிய வாழ்க்கை

இவரது முதல் புதினம் "நீர்க்கோயில்கள்". எழுபது நாவல்களை இவர் எழுதியுள்ளார். சிறுகதைகளை விட நாவல்களை அதிகம் எழுதினார். பெண்களை முதன்மைப்படுத்தி, பெண்களின் வாழ்க்கையையே தனது படைப்புகளில் காட்சிப்படுத்தியுள்ளார். சுதேசமித்திரன், கல்கி உள்ளிட்ட இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன.

இரண்டும் ஒன்றும் (நாவல்)

மறைவு

இறுதிக் காலத்தில் பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ராஜம்மா, 1981-ல் காலமானார்.

நூல்கள்

நாவல்
  • நீர்க்கோயில்கள்
  • இரண்டும் ஒன்றும்
சிறுகதைகள்
  • பலியாத ஜோசியம்

உசாத்துணை

  • "விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2 (பெண்ணெழுத்து - 1 : 1907-1947)"; தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Mar-2023, 07:37:27 IST