under review

சோ. சிவபாதசுந்தரம்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "This is a stub page. You can add content to this {{stub page}} Category:Tamil Content")
 
(Added First published date)
 
(15 intermediate revisions by 5 users not shown)
Line 1: Line 1:
This is a stub page. You can add content to this
[[File:Image15.png|thumb|சிவபாதசுந்தரம் (நன்றி: அஞ்சல் இதழ்)]]
சோ. சிவபாதசுந்தரம் (ஆகஸ்ட் 27, 1912 - நவம்பர் 08, 2000) ஈழத்தின் முன்னோடி எழுத்தாளர். ஈழகேசரி பத்திரிகையின் ஆசிரியர். வானொலி ஒலிபரப்பாளர். சிறுகதைகள், பயணக் கட்டுரைகள் எழுதியவர். தமிழ், ஆங்கிலத்தில் இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளும் திறனாய்வுக் கட்டுரைகளும் எழுதியவர்.
== பிறப்பு, கல்வி ==
சிவபாதசுந்தரம் இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம், வேலணைத்தீவுப் பகுதியான கரம்பொன் என்ற ஊரில் ஆகஸ்ட் 27, 1912-ல் பிறந்தவர். தந்தை சோமசுந்தரம்பிள்ளை. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி கற்றவர். இலங்கை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பும், கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டமும் படித்தார். லத்தீன், ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி உடையவர்.
== தனிவாழ்க்கை ==
சிவபாதசுந்தரத்தின் திருமணம் ஜனவரி 21, 1946-ல் நடந்தது. மனைவி ஞானதீபம். ஒரு மகன் ரவிலோச்சனன். இரு மகள்கள், மஞ்சுபாஷிணி, பிரசன்னவதனி. மஞ்சுபாஷிணி மருத்துவர். தமிழோசையில் பணியாற்றியவர். இந்திய அரசாங்கம் பரத நாட்டியக் கலையை சிறப்பிக்கும் வகையில் 1975-ல் வெளியிட்ட தபால் தலையில் பிரசன்னவதனியின் படம் இடம்பெற்றது. சிலவருடங்களுக்குப் பிறகு நடந்த தீ விபத்தொன்றில் பிரசன்னவதினி காலமானார்.
[[File:Imag17.png|thumb|486x486px|நன்றி: அஞ்சல் இதழ்]]
[[File:Imag11.png|thumb|நன்றி: அஞ்சல் இதழ்]]
== பத்திரிகை, வானொலி பணி ==
சிவபாதசுந்தரம் ஈழகேசரி பத்திரிகையில் 1938 முதல் 1942 வரை ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போது "ஈழகேசரி இளைஞர் கழகம்" அமைப்பைத் தோற்றுவித்தார். 1942-ல் கொழும்பு வானொலியில் பணியில் சேர்ந்தார்.
 
செப்டம்பர், 1947-ல் லண்டன் சென்று பிபிசி வானொலியில் தமிழ் ஒலிபரப்பாளராக சேர்ந்தார். பின்னர் 1948-ல் பிபிசி தமிழ் ஒலிபரப்புக்கு தமிழோசை என பெயர் சூட்டினார், ஆறு வருடங்கள் லண்டன் பிபிசி வானொலியில் பணியாற்றிய பின் இலங்கை வந்து லீவர் பிர்தர்ஸ் நிறுவனத்தில் விளம்பர இயக்குநராக ஒன்பதாண்டுகள் பணிபுரிந்தார். சென்னை வானொலி நிலைய அழைப்பின் பேரில் காமராஜர், அண்ணாதுரை ஆகியோர் காலமானபோது இறுதி ஊர்வலத்தின் நேர்முக வர்ணனையை சிவபாதசுந்தரம் செய்தார். 1958-ல் சென்னைக்கு வந்த சிவபாதசுந்தரம் 1988-ல் மீண்டும் லண்டன் செல்வதுவரை தன் மகனுடன் சேர்ந்து ஸ்க்ரீன் ப்ரிண்டிங் வியாபாரம் செய்துவந்தார். லண்டன் செல்லும்போது தன்னிடம் இருந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை மறைமலையடிகள் நூலகத்திற்கு வழங்கினார்.
[[File:Imag13.png|thumb|339x339px|1977 - முன்வரிசை: எஸ். ஆர். வேங்கடராமன், கி. சந்திரசேகரன், மபொசி, சோ. சிவபாதசுந்தரம், தீபம் நா.பா. (நன்றி: Dr.N.கணேசன்)]]
== இலக்கிய பணி ==
சிவபாதசுந்தரம் தனது பத்தாண்டு அனுபவங்களைக் கொண்டு 1954-ல் 'ஒலிபரப்புக் கலை’ என்ற தனது முதல் நூலை வெளியிட்டார். ராஜாஜி ஆசியுரையுடன் வெளியான இந்நூல் இந்திய மொழிகளுள் ஒலிபரப்பு பற்றி வெளியான முதல் நூல். நாயன்மார்கள் குறித்து விரிவான ஆரய்ச்சி செய்து எழுதிய 'சேக்கிழார் அடிச்சுவட்டில்’ ஒரு முக்கியமான நூலாகும். 1959-ல் நடைபெற்ற அகில இந்திய எழுத்தாளர் மாநாட்டில் செயலாளராகவும், 1968-ல் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகவும் இருந்தவர்.
== இலக்கிய இடம் ==
சிவபாதசுந்தரம் தமிழிலும் ஆங்கிலத்திலும் இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளும் திறனாய்வுக் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். மணிக்கொடி ஆசிரியர்கள் குறித்தும், தமிழ் இலக்கியம் குறித்தும் தொடர்ந்து ஈழகேசரியில் எழுதிவந்தார். தமிழக பயண எழுத்தில் சிட்டி-சிவபாதசுந்தரம் எழுதிய ’கௌதமபுத்தர் அடிச்சுவட்டில்’ நூல் ஒரு முக்கியமான படைப்பாகும். ஆனாலும் இலக்கியத்தை சமூகவரலாற்றின் தனித்தச் செயல்பாடாக அல்லாமல் துணைப்பொருளாகவேக் காண்கிறார்.
 
சிட்டி பெ.கோ.சுந்தரராஜன் – சோ. சிவபாதசுந்தரத்துடன் இணைந்து எழுதிய 'தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும்’ என்ற நூலில் தமிழ் சிறுகதைக் காலகட்டத்தை நான்காக பிரிக்கின்றனர். பெரும் சர்ச்சையையும் ஈழத்து எழுத்தாளர்களிடையே கடும் சீற்றத்தையும் ஏற்படுத்திய இந்நூலில் திராவிட இயக்க எழுத்தாளர்களின் நுழைவுக்குப் பின்னரே தமிழ்ச் சிறுகதைத் துறையில் மறுமலர்ச்சியும் திருப்பமும் ஏற்பட்டன என குறிப்பிட்டுள்ளார்.
 
பண்புக்கூறுகளால் இலக்கியக் காலகட்டப் பிரிவினை செய்து எழுதப்பட்ட 'தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும்’ ஒரு முக்கியமான முன்னோடிநூல். அந்நூலில் சிட்டி-சிவபாதசுந்தரம் இருவரும் ஆதியூர் அவதானி சரித்திரம் (1875) கதையை தமிழின் முதல் நாவல் என கூறியிருந்தாலும் வேதநாயகம்பிள்ளையின் பிரதாபமுதலியார் சரித்திரம் தான் தமிழின் முதல் நாவல் என்று சொல்லும் மரபை ஏற்றுக்கொள்வதே முறை என ஜெயமோகன் சொல்கிறார்.
 
1984-ல் மணிக்கொடி பொன்விழாவை சிவபாதசுந்தரம் முன்னின்று நடத்தினாலும் மணிக்கொடி பண்பாட்டுக்கவலைகளையே மையப்படுத்தி எழுதிய இதழ் என்று சிட்டி-சிவபாதசுந்தரம் வகுக்கிறார்கள்.
== மறைவு ==
பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த சிவபாதசுந்தரம் லண்டனில் தனது 88-வது வயதில் நவம்பர் 08, 2000-ல் மறைந்தார்.
== விருதுகள் ==
* இலங்கை அரசின் சாகித்திய மண்டலம் – 1960 (கௌதமபுத்தர் அடிச்சுவட்டில்)
* சென்னை தமிழ்வளர்ச்சிக் கழகப் பரிசு – 1955 (ஒலிபரப்புக்கலை)
== நூல்பட்டியல் ==
[[File:Imag12.png|thumb|272x272px]]
* மாணிக்கவாசகர் அடிச்சுவட்டில் - 1947, அல்லயன்ஸ் கம்பனி, சென்னை
* ஒலிபரப்புக்கலை - 1954, அமுதம் வெளியீடு; 1957, வானதி பதிப்பகம்
* கௌதமபுத்தர் அடிச்சுவட்டில் - 1960
* தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும் - 1977
* சேக்கிழார் அடிச்சுவட்டில் - 1978
* தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும் - 1989, க்ரியா வெளியீடு
== உசாத்துணை ==
* [https://noolaham.net/project/665/66462/66462.pdf அஞ்சல் பத்திரிகை - சிவபாதசுந்தரம் சிறப்பிதழ்]
* [https://www.jeyamohan.in/41915/ முதல் நாவல் விவாதம் - ஜெயமோகன் தளம்]
* [https://www.jeyamohan.in/580/ 'முன்னோடியின் கண்கள்', ஜெயமோகன்]
* [https://www.youtube.com/watch?v=b9Jg0j_REt4 சிவபாதசுந்தரம் - பிபிசி நேர்காணல் 1991]
 
{{Finalised}}
 
{{Fndt|15-Nov-2022, 13:34:20 IST}}
 
{{stub page}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:நாவலாசிரியர்கள்]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:சிறுகதையாசிரியர்கள்]]

Latest revision as of 15:55, 13 June 2024

சிவபாதசுந்தரம் (நன்றி: அஞ்சல் இதழ்)

சோ. சிவபாதசுந்தரம் (ஆகஸ்ட் 27, 1912 - நவம்பர் 08, 2000) ஈழத்தின் முன்னோடி எழுத்தாளர். ஈழகேசரி பத்திரிகையின் ஆசிரியர். வானொலி ஒலிபரப்பாளர். சிறுகதைகள், பயணக் கட்டுரைகள் எழுதியவர். தமிழ், ஆங்கிலத்தில் இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளும் திறனாய்வுக் கட்டுரைகளும் எழுதியவர்.

பிறப்பு, கல்வி

சிவபாதசுந்தரம் இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம், வேலணைத்தீவுப் பகுதியான கரம்பொன் என்ற ஊரில் ஆகஸ்ட் 27, 1912-ல் பிறந்தவர். தந்தை சோமசுந்தரம்பிள்ளை. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி கற்றவர். இலங்கை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பும், கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டமும் படித்தார். லத்தீன், ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி உடையவர்.

தனிவாழ்க்கை

சிவபாதசுந்தரத்தின் திருமணம் ஜனவரி 21, 1946-ல் நடந்தது. மனைவி ஞானதீபம். ஒரு மகன் ரவிலோச்சனன். இரு மகள்கள், மஞ்சுபாஷிணி, பிரசன்னவதனி. மஞ்சுபாஷிணி மருத்துவர். தமிழோசையில் பணியாற்றியவர். இந்திய அரசாங்கம் பரத நாட்டியக் கலையை சிறப்பிக்கும் வகையில் 1975-ல் வெளியிட்ட தபால் தலையில் பிரசன்னவதனியின் படம் இடம்பெற்றது. சிலவருடங்களுக்குப் பிறகு நடந்த தீ விபத்தொன்றில் பிரசன்னவதினி காலமானார்.

நன்றி: அஞ்சல் இதழ்
நன்றி: அஞ்சல் இதழ்

பத்திரிகை, வானொலி பணி

சிவபாதசுந்தரம் ஈழகேசரி பத்திரிகையில் 1938 முதல் 1942 வரை ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போது "ஈழகேசரி இளைஞர் கழகம்" அமைப்பைத் தோற்றுவித்தார். 1942-ல் கொழும்பு வானொலியில் பணியில் சேர்ந்தார்.

செப்டம்பர், 1947-ல் லண்டன் சென்று பிபிசி வானொலியில் தமிழ் ஒலிபரப்பாளராக சேர்ந்தார். பின்னர் 1948-ல் பிபிசி தமிழ் ஒலிபரப்புக்கு தமிழோசை என பெயர் சூட்டினார், ஆறு வருடங்கள் லண்டன் பிபிசி வானொலியில் பணியாற்றிய பின் இலங்கை வந்து லீவர் பிர்தர்ஸ் நிறுவனத்தில் விளம்பர இயக்குநராக ஒன்பதாண்டுகள் பணிபுரிந்தார். சென்னை வானொலி நிலைய அழைப்பின் பேரில் காமராஜர், அண்ணாதுரை ஆகியோர் காலமானபோது இறுதி ஊர்வலத்தின் நேர்முக வர்ணனையை சிவபாதசுந்தரம் செய்தார். 1958-ல் சென்னைக்கு வந்த சிவபாதசுந்தரம் 1988-ல் மீண்டும் லண்டன் செல்வதுவரை தன் மகனுடன் சேர்ந்து ஸ்க்ரீன் ப்ரிண்டிங் வியாபாரம் செய்துவந்தார். லண்டன் செல்லும்போது தன்னிடம் இருந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை மறைமலையடிகள் நூலகத்திற்கு வழங்கினார்.

1977 - முன்வரிசை: எஸ். ஆர். வேங்கடராமன், கி. சந்திரசேகரன், மபொசி, சோ. சிவபாதசுந்தரம், தீபம் நா.பா. (நன்றி: Dr.N.கணேசன்)

இலக்கிய பணி

சிவபாதசுந்தரம் தனது பத்தாண்டு அனுபவங்களைக் கொண்டு 1954-ல் 'ஒலிபரப்புக் கலை’ என்ற தனது முதல் நூலை வெளியிட்டார். ராஜாஜி ஆசியுரையுடன் வெளியான இந்நூல் இந்திய மொழிகளுள் ஒலிபரப்பு பற்றி வெளியான முதல் நூல். நாயன்மார்கள் குறித்து விரிவான ஆரய்ச்சி செய்து எழுதிய 'சேக்கிழார் அடிச்சுவட்டில்’ ஒரு முக்கியமான நூலாகும். 1959-ல் நடைபெற்ற அகில இந்திய எழுத்தாளர் மாநாட்டில் செயலாளராகவும், 1968-ல் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகவும் இருந்தவர்.

இலக்கிய இடம்

சிவபாதசுந்தரம் தமிழிலும் ஆங்கிலத்திலும் இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளும் திறனாய்வுக் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். மணிக்கொடி ஆசிரியர்கள் குறித்தும், தமிழ் இலக்கியம் குறித்தும் தொடர்ந்து ஈழகேசரியில் எழுதிவந்தார். தமிழக பயண எழுத்தில் சிட்டி-சிவபாதசுந்தரம் எழுதிய ’கௌதமபுத்தர் அடிச்சுவட்டில்’ நூல் ஒரு முக்கியமான படைப்பாகும். ஆனாலும் இலக்கியத்தை சமூகவரலாற்றின் தனித்தச் செயல்பாடாக அல்லாமல் துணைப்பொருளாகவேக் காண்கிறார்.

சிட்டி பெ.கோ.சுந்தரராஜன் – சோ. சிவபாதசுந்தரத்துடன் இணைந்து எழுதிய 'தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும்’ என்ற நூலில் தமிழ் சிறுகதைக் காலகட்டத்தை நான்காக பிரிக்கின்றனர். பெரும் சர்ச்சையையும் ஈழத்து எழுத்தாளர்களிடையே கடும் சீற்றத்தையும் ஏற்படுத்திய இந்நூலில் திராவிட இயக்க எழுத்தாளர்களின் நுழைவுக்குப் பின்னரே தமிழ்ச் சிறுகதைத் துறையில் மறுமலர்ச்சியும் திருப்பமும் ஏற்பட்டன என குறிப்பிட்டுள்ளார்.

பண்புக்கூறுகளால் இலக்கியக் காலகட்டப் பிரிவினை செய்து எழுதப்பட்ட 'தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும்’ ஒரு முக்கியமான முன்னோடிநூல். அந்நூலில் சிட்டி-சிவபாதசுந்தரம் இருவரும் ஆதியூர் அவதானி சரித்திரம் (1875) கதையை தமிழின் முதல் நாவல் என கூறியிருந்தாலும் வேதநாயகம்பிள்ளையின் பிரதாபமுதலியார் சரித்திரம் தான் தமிழின் முதல் நாவல் என்று சொல்லும் மரபை ஏற்றுக்கொள்வதே முறை என ஜெயமோகன் சொல்கிறார்.

1984-ல் மணிக்கொடி பொன்விழாவை சிவபாதசுந்தரம் முன்னின்று நடத்தினாலும் மணிக்கொடி பண்பாட்டுக்கவலைகளையே மையப்படுத்தி எழுதிய இதழ் என்று சிட்டி-சிவபாதசுந்தரம் வகுக்கிறார்கள்.

மறைவு

பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த சிவபாதசுந்தரம் லண்டனில் தனது 88-வது வயதில் நவம்பர் 08, 2000-ல் மறைந்தார்.

விருதுகள்

  • இலங்கை அரசின் சாகித்திய மண்டலம் – 1960 (கௌதமபுத்தர் அடிச்சுவட்டில்)
  • சென்னை தமிழ்வளர்ச்சிக் கழகப் பரிசு – 1955 (ஒலிபரப்புக்கலை)

நூல்பட்டியல்

Imag12.png
  • மாணிக்கவாசகர் அடிச்சுவட்டில் - 1947, அல்லயன்ஸ் கம்பனி, சென்னை
  • ஒலிபரப்புக்கலை - 1954, அமுதம் வெளியீடு; 1957, வானதி பதிப்பகம்
  • கௌதமபுத்தர் அடிச்சுவட்டில் - 1960
  • தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும் - 1977
  • சேக்கிழார் அடிச்சுவட்டில் - 1978
  • தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும் - 1989, க்ரியா வெளியீடு

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:34:20 IST