under review

நாதமுனி முதலியார்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected Category:சைவ அறிஞர்கள் to Category:சைவ அறிஞர்Corrected Category:புலவர்கள் to Category:புலவர்Corrected Category:மொழிபெயர்ப்பாளர்கள் to Category:மொழிபெயர்ப்பாளர்)
 
(3 intermediate revisions by the same user not shown)
Line 1: Line 1:
[[File:மயிலை நாதமுனி.jpg|thumb|மயிலாப்பூர் புராணம்]]
[[File:மயிலை நாதமுனி.jpg|thumb|மயிலாப்பூர் புராணம்]]
நாதமுனி முதலியார் (இருபதாம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர், சைவ சமயப் பற்றாளர், சொற்பொழிவாளர், மொழிபெயர்ப்பாளர் என பலதுறைகளில் செயல்பட்டவர். திருமயிலைப் புராணம் முக்கியமான படைப்பு.
நாதமுனி முதலியார் (இருபதாம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர், சைவ சமயப் பற்றாளர், சொற்பொழிவாளர், மொழிபெயர்ப்பாளர் என பலதுறைகளில் செயல்பட்டவர். திருமயிலைப் புராணம் முக்கியமான படைப்பு.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
மயிலை வேளாளர் குலத்தில் நாராயண முதலியாருக்கும், அங்கம்மாளுக்கும் நாதமுனி பிறந்தார். பள்ளிக் கல்வியும், புலமைக் கல்வியும் கற்றார். மயிலை தணிகாசல முதலியாரிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்றார்.  
மயிலை வேளாளர் குலத்தில் நாராயண முதலியாருக்கும், அங்கம்மாளுக்கும் நாதமுனி பிறந்தார். பள்ளிக் கல்வியும், புலமைக் கல்வியும் கற்றார். மயிலை தணிகாசல முதலியாரிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்றார்.  
Line 31: Line 31:
* [[திருமயிலைப் புராணம்]]
* [[திருமயிலைப் புராணம்]]
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2kupd#book1/3 தமிழ்ப்புலவர் வரிசை: சு.அ. ராமசாமிப்புலவர்]
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2kupd#book1/3 தமிழ்ப் புலவர் வரிசை: சு.அ. ராமசாமிப்புலவர்]
* [https://archive.org/details/ThiruMyilaiThalaPuranam/mode/2up திருமயிலை புராணம். இணையநூலகம்]
* [https://archive.org/details/ThiruMyilaiThalaPuranam/mode/2up திருமயிலை புராணம். இணையநூலகம்]
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM8luIy&tag=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%2C+%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88#book1/ திருமயிலை தலபுராணம் இணையநூலகம்]

* [https://www.ebookmela.co.in/download/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE திருமயிலை தலபுராணம் இணையநூலகம் பிடிஎஃப்]

{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|12-Dec-2022, 18:31:02 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்கள்]]
[[Category:புலவர்]]
[[Category:சைவ அறிஞர்கள்]]
[[Category:சைவ அறிஞர்]]
[[Category:மொழிபெயர்ப்பாளர்]]

Latest revision as of 13:55, 17 November 2024

மயிலாப்பூர் புராணம்

நாதமுனி முதலியார் (இருபதாம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர், சைவ சமயப் பற்றாளர், சொற்பொழிவாளர், மொழிபெயர்ப்பாளர் என பலதுறைகளில் செயல்பட்டவர். திருமயிலைப் புராணம் முக்கியமான படைப்பு.

வாழ்க்கைக் குறிப்பு

மயிலை வேளாளர் குலத்தில் நாராயண முதலியாருக்கும், அங்கம்மாளுக்கும் நாதமுனி பிறந்தார். பள்ளிக் கல்வியும், புலமைக் கல்வியும் கற்றார். மயிலை தணிகாசல முதலியாரிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்றார்.

இலக்கிய வாழ்க்கை

சொற்பொழிவாளர். புராணரத்தினாகாரனம் எனும் சிறப்புப் பெயரையுடையவர். சிந்தாதிரிப்பேட்டை அங்கம்மாள் கோயிலில் தமிழும் சைவமும் பற்றி பதினைந்தாண்டுகள் சொற்பொழிவாற்றினார். திருமயிலைப்புராணம் நூலை 1924-ல் இயற்றினார். பன்னிரெண்டு படலங்களையும், ஐந்நூறு செய்யுளையும் கொண்டது.

சிறப்புப் பாயிரம் பாடியவர்கள்

  • கோமளேசுரன்பேட்டை ம.இராசகோபாலபிள்ளை
  • வேதாந்த தருக்கபோதகாசிரியர் கோ. வடிவேலுச்செட்டியார்
  • ஆனூர் சிங்காரவேலு முதலியார்
  • கி.குப்புச்சாமி முதலியார்
  • பண்டிதரத்தினம்
  • புழலை கு.க.திருநாவுக்கரசு முதலியார்
  • வல்லி - ப. தெய்வ காயக முதலியார்
  • கோரஞ்சூழூர் தி.க. கிருபாசங்கரராசு
  • மோசூர் சண்முக முதலியார்

பாடல் நடை

மயிலையென வாழ்த்துவர்கள் மாதர்கரு வாரார்
மயிலையென வேபுகல்வர் மறலிபயம் நீப்பார்
மயிலையெனப் போற்றமவர் மாதவசி யாவர்
மயிலையினில் வாழ்பவர்கள் மாண்கயிலை சேர்வார்

ஆதலான் மேலோர் போற்றும் அருள்தரு மயிலையே போல்
மாதலம் இருக்கும் என்ற மனத்திலுங் கருத வேண்டாம்
பூதலத் திதனின் மாயாப் போகநாள் தீதன் றாயின்
நாதனார் கைலைவிட்டு நண்ணியே நிலைகொள் வாரே

நூல் பட்டியல்

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Dec-2022, 18:31:02 IST