under review

சுமங்கலி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
(24 intermediate revisions by 6 users not shown)
Line 1: Line 1:
சுமங்கலி (1984) பெண்களின் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு வெளியாகும் இதழ். பராசக்தி சுமங்கலி இதழின் ஆசிரியர்.
சுமங்கலி (1984-1995) பெண்களுக்காக வெளியான இருமாத இதழ். சுமங்கலி இதழின் ஆசிரியர் பராசக்தி.
== வெளியீடு ==
== பதிப்பு, வெளியீடு ==
சுமங்கலி இதழ் 1984இல் தொடங்கப்பட்டது. பராசக்தி சுமங்கலி இதழின் ஆசிரியர். பெண்களின் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு வெளியான இதழ். சுமங்கலி தொடர்ந்து வெளிவராமல் நின்றது.
சுமங்கலி இதழ் ஏப்ரல் 1984-ல் தொடங்கப்பட்ட பெண்களுக்கான இதழ். சுமங்கலி இதழின் ஆசிரியர் பராசக்தி. இணை ஆசிரியர் சாரதி. வெளியீட்டாளர் முரசொலி மாறன்.
== நோக்கம் ==
== நோக்கம் ==
சுமங்கலி, வாழ்க்கையின் சிக்கல்களை உணர்ந்து அவற்றைத் தீர்த்துக்கொள்ளும் வழிமுறைகளை மகளிர்க்கு உணர்த்தவேண்டும் என்னும் அடிப்படையைக் குறிக்கோளாகக் கொண்டது. சொல்லால் மட்டுமன்றிச் செயலாலும் பெண்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபடவேண்டும் என விழைந்தது.  
சுமங்கலி பெண்களுக்கான இதழ். பெண்கள் முன்னேற்றத்தையும், விழிப்புணர்ச்சியையும், மேம்பாட்டையும், இல்லற வாழ்விற்கு அறிவுரை(மருத்துவ, சட்ட) வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டது.
== உள்ளடக்கம் ==
==உள்ளடக்கம்==
* மகளிர்க்குப் பயன்படும் இலவசச் சட்ட அறிவுரை, மருத்துவ அறிவுரை போன்ற பகுதிகள். சுமங்கலியில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் பெண்களுக்காகவும் அவர்களின் நிறைகுறைகளைக் கூறும் போக்கிலும் வெளியிடப்பட்டன.  
சுமங்கலி இதழில் கட்டுரைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், செய்திகள், துணுக்குகள், பிறர்கருத்துகள், சட்ட அறிவுரைகள், மருத்துவர் பதில்கள், மருத்துவ அறிவுரைகள், சமையற்கலை, சந்தா விவரம், விளம்பரங்கள் முதலியன இடம் பெற்றன. சில இதழ்களில் விமர்சனங்கள், பரிசுத்திட்டங்கள், மாதர் சங்கப் பகுதிகள் முதலியனவும் இடம் பெற்றன. அத்துடன் கலந்துரையாடல், உண்மைக் கதைகள், உலக நடப்புகள், சுமங்கலி கிளப், சுமங்கலி உறுப்பினர்கள், அழகுக்கலை , பேட்டி, கோலப்பகுதி, புகழ் பெற்ற பெண்கள் தொடர்பான கட்டுரைகள், கவிதைக் கொத்து, போன்ற பகுதிகளும் இடம்பெற்றன. பெண்களுக்கு ஆதரவான பிறமொழி இதழ்கள், பிற இதழ்கள், இவற்றிலிருந்து வெளியான செய்திகள், உலக நடப்புகள், பேட்டிகள் ஆகியனவும் சுமங்கலியில் இடம் பெற்றன.
* பல்வேறு துறைகளில் புகழ்பெற்று விளங்கும் மகளிரைப் பேட்டி கண்டு அவர்களைப் பற்றி சிறப்புக்கட்டுரைகள் வெளியிடப்பட்டன.
 
== இலக்கிய இடம் ==
கவிதைகள் அனைத்தும் புதுக்கவிதை வடிவத்திலேயே அமைந்தன. திருமண உறவு, காதல், வரதட்சணை போன்றவற்றைப் பாடுபொருளாகக் கொண்டு கவிதைகள் வெளிவந்தன. சிறுகதைகளில் மகளிர் நிலை பல்வேறு கோணங்களில் கற்பனை ஓவியங்களாக வரையப்பட்டன. குடும்ப உறவு நிலையை மையமாகக் கொண்டு அதிக அளவிலும் கல்லூரி, அலுவலகம் போன்ற இடங்களில் ஏற்படும் சிக்கல்களை மையமாகக் கொண்டு குறைந்த அளவிலும் சிறுகதைகள் புனையப்பட்டன. உண்மைக்கதைகள் என்ற தலைப்பில் கதைகள் வெளிவந்தன. சுமங்கலியில் வெளியான கட்டுரைகள் அனைத்தும் பெண்களுக்காகவும் அவர்களின் நிறைகுறைகளைக் கூறும் போக்கிலும் வெளியிடப்பட்டன. பல்வேறு துறைகளில் புகழ்பெற்று விளங்கும் மகளிரைப் பேட்டி கண்டு அவர்களைப் பற்றி சிறப்புக்கட்டுரைகள் வெளியிடப்பட்டன. சுமங்கலி இதழ் ஒவ்வொன்றிலும் உலக நடப்புகளைத் தெரிவிக்கும் வண்ணம் இரண்டு முதல் இருபது வரையிலான துணுக்குகள் இடம் பெற்றன.
சுமங்கலியில் வெளியான கட்டுரைகள் அனைத்தும் பெண்களை முதன்மைப்படுத்தி ஒரு முழுமையான வாழ்க்கை வாழ்வதற்குரிய வாய்ப்புகளை உருவாக்கின. இலவசச் சட்ட அறிவுரைப்பகுதி மகளிருக்குரிய பல்வேறு சிக்கல்களைத் தீர்ப்பதற்குப் பெரும் உதவி புரிந்தது. மணமுறிவு பற்றிய சிக்கல்களுக்கும் பல்வேறு தீர்வுகளைச் சுமங்கலி இதழ் தந்தது.  
===== ஓவியங்கள்=====
புனைகதைகளில் வெளிவந்த படங்களை ஓவியர்கள் ஜெயராஜ், மாயா, மாருதி, ராமு போன்றோர் வரைந்தனர்.
=====டாக்டர் பதில்கள் =====
ஒவ்வோர் இதழிலும் டாக்டர் பதில்கள் என்னும் பகுதியில் வாசகர்களுக்கு அப்பல்லோ மருத்துவமனைப் பெண்கள் நலப்பிரிவின் மருத்துவராகப் பணியாற்றிய வசந்தி பதில் அளித்தார்.
=====விளம்பரங்கள்=====
சுமங்கலி இதழில் வெளியான விளம்பரங்கள் உடைகள், நகைகள், பெண்களின் அழகு சாதனப் பொருட்கள், வீட்டுக்குறிப்புகள், பெண்கல்வி, மருத்துவம், இதழ்கள் தொடர்பானவை, திரைப்படங்கள், சேமிப்பு ஆகியவை பற்றி அமைந்தன. விளம்பரங்களில் பெண்கள் பயன்படுத்தும் நகைகள் பற்றிய விளம்பரங்களே அதிக அளவில் அமைந்திருந்தன.
==முடிவு==
1995-ம் ஆண்டிற்குப் பிறகு சுமங்கலி இதழ் வெளிவரவில்லை. வியாபார நோக்கில் பிற இதழ்களோடு நிற்க முடியாமல் பின்னோக்கித் தள்ளப்பட்டதாகக் கருதப்படுகிறது.
==இலக்கிய இடம்==
சுமங்கயில் வெளியான கட்டுரைகள் பெண்களை முதன்மைப்படுத்தின. இலவசச் சட்ட அறிவுரைப்பகுதி மகளிருக்குரிய பல்வேறு சிக்கல்களைத் தீர்ப்பதற்கு உதவி புரிந்தது. மணமுறிவு பற்றிய சிக்கல்களுக்கும் பல்வேறு தீர்வுகளைச் சுமங்கலி இதழ் தந்தது. நடைமுறை உலகில் மகளிர் நிலையையும், மகளிர் எதிர்கொள்கின்ற சிக்கல்களையும், சிக்கல்களுக்கான தீர்வுகளையும் படைப்பிலும் வெளிப்படுத்தியது. பெண்கள் முன்னேற்றம் பற்றிய கருத்துக்களையும் வழங்கியது.
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
• [https://archive.org/stream/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM8luQy.TVA_BOK_0005864/TVA_BOK_0005864_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_djvu.txt மகளிர் இதழ்கள்: உலக தமிழாராய்ச்சி நிறுவனம்: இதழியல் ஆய்வு தொகுதி 9: முனைவர் சா. கிருட்டினமூர்த்தி]
• [https://archive.org/stream/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM8luQy.TVA_BOK_0005864/TVA_BOK_0005864_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_djvu.txt மகளிர் இதழ்கள்: உலக தமிழாராய்ச்சி நிறுவனம்: இதழியல் ஆய்வு தொகுதி 9: முனைவர் சா. கிருட்டிணமூர்த்தி]
 
{{Finalised}}
 
{{Fndt|07-May-2023, 19:10:09 IST}}
 
[[Category:Being Created]]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:பெண்கள் இதழ்கள்]]
[[Category:பெண்கள் இதழ்கள்]]
[[Category:இதழ்கள்]]

Latest revision as of 12:04, 13 June 2024

சுமங்கலி (1984-1995) பெண்களுக்காக வெளியான இருமாத இதழ். சுமங்கலி இதழின் ஆசிரியர் பராசக்தி.

பதிப்பு, வெளியீடு

சுமங்கலி இதழ் ஏப்ரல் 1984-ல் தொடங்கப்பட்ட பெண்களுக்கான இதழ். சுமங்கலி இதழின் ஆசிரியர் பராசக்தி. இணை ஆசிரியர் சாரதி. வெளியீட்டாளர் முரசொலி மாறன்.

நோக்கம்

சுமங்கலி பெண்களுக்கான இதழ். பெண்கள் முன்னேற்றத்தையும், விழிப்புணர்ச்சியையும், மேம்பாட்டையும், இல்லற வாழ்விற்கு அறிவுரை(மருத்துவ, சட்ட) வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டது.

உள்ளடக்கம்

சுமங்கலி இதழில் கட்டுரைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், செய்திகள், துணுக்குகள், பிறர்கருத்துகள், சட்ட அறிவுரைகள், மருத்துவர் பதில்கள், மருத்துவ அறிவுரைகள், சமையற்கலை, சந்தா விவரம், விளம்பரங்கள் முதலியன இடம் பெற்றன. சில இதழ்களில் விமர்சனங்கள், பரிசுத்திட்டங்கள், மாதர் சங்கப் பகுதிகள் முதலியனவும் இடம் பெற்றன. அத்துடன் கலந்துரையாடல், உண்மைக் கதைகள், உலக நடப்புகள், சுமங்கலி கிளப், சுமங்கலி உறுப்பினர்கள், அழகுக்கலை , பேட்டி, கோலப்பகுதி, புகழ் பெற்ற பெண்கள் தொடர்பான கட்டுரைகள், கவிதைக் கொத்து, போன்ற பகுதிகளும் இடம்பெற்றன. பெண்களுக்கு ஆதரவான பிறமொழி இதழ்கள், பிற இதழ்கள், இவற்றிலிருந்து வெளியான செய்திகள், உலக நடப்புகள், பேட்டிகள் ஆகியனவும் சுமங்கலியில் இடம் பெற்றன.

கவிதைகள் அனைத்தும் புதுக்கவிதை வடிவத்திலேயே அமைந்தன. திருமண உறவு, காதல், வரதட்சணை போன்றவற்றைப் பாடுபொருளாகக் கொண்டு கவிதைகள் வெளிவந்தன. சிறுகதைகளில் மகளிர் நிலை பல்வேறு கோணங்களில் கற்பனை ஓவியங்களாக வரையப்பட்டன. குடும்ப உறவு நிலையை மையமாகக் கொண்டு அதிக அளவிலும் கல்லூரி, அலுவலகம் போன்ற இடங்களில் ஏற்படும் சிக்கல்களை மையமாகக் கொண்டு குறைந்த அளவிலும் சிறுகதைகள் புனையப்பட்டன. உண்மைக்கதைகள் என்ற தலைப்பில் கதைகள் வெளிவந்தன. சுமங்கலியில் வெளியான கட்டுரைகள் அனைத்தும் பெண்களுக்காகவும் அவர்களின் நிறைகுறைகளைக் கூறும் போக்கிலும் வெளியிடப்பட்டன. பல்வேறு துறைகளில் புகழ்பெற்று விளங்கும் மகளிரைப் பேட்டி கண்டு அவர்களைப் பற்றி சிறப்புக்கட்டுரைகள் வெளியிடப்பட்டன. சுமங்கலி இதழ் ஒவ்வொன்றிலும் உலக நடப்புகளைத் தெரிவிக்கும் வண்ணம் இரண்டு முதல் இருபது வரையிலான துணுக்குகள் இடம் பெற்றன.

ஓவியங்கள்

புனைகதைகளில் வெளிவந்த படங்களை ஓவியர்கள் ஜெயராஜ், மாயா, மாருதி, ராமு போன்றோர் வரைந்தனர்.

டாக்டர் பதில்கள்

ஒவ்வோர் இதழிலும் டாக்டர் பதில்கள் என்னும் பகுதியில் வாசகர்களுக்கு அப்பல்லோ மருத்துவமனைப் பெண்கள் நலப்பிரிவின் மருத்துவராகப் பணியாற்றிய வசந்தி பதில் அளித்தார்.

விளம்பரங்கள்

சுமங்கலி இதழில் வெளியான விளம்பரங்கள் உடைகள், நகைகள், பெண்களின் அழகு சாதனப் பொருட்கள், வீட்டுக்குறிப்புகள், பெண்கல்வி, மருத்துவம், இதழ்கள் தொடர்பானவை, திரைப்படங்கள், சேமிப்பு ஆகியவை பற்றி அமைந்தன. விளம்பரங்களில் பெண்கள் பயன்படுத்தும் நகைகள் பற்றிய விளம்பரங்களே அதிக அளவில் அமைந்திருந்தன.

முடிவு

1995-ம் ஆண்டிற்குப் பிறகு சுமங்கலி இதழ் வெளிவரவில்லை. வியாபார நோக்கில் பிற இதழ்களோடு நிற்க முடியாமல் பின்னோக்கித் தள்ளப்பட்டதாகக் கருதப்படுகிறது.

இலக்கிய இடம்

சுமங்கயில் வெளியான கட்டுரைகள் பெண்களை முதன்மைப்படுத்தின. இலவசச் சட்ட அறிவுரைப்பகுதி மகளிருக்குரிய பல்வேறு சிக்கல்களைத் தீர்ப்பதற்கு உதவி புரிந்தது. மணமுறிவு பற்றிய சிக்கல்களுக்கும் பல்வேறு தீர்வுகளைச் சுமங்கலி இதழ் தந்தது. நடைமுறை உலகில் மகளிர் நிலையையும், மகளிர் எதிர்கொள்கின்ற சிக்கல்களையும், சிக்கல்களுக்கான தீர்வுகளையும் படைப்பிலும் வெளிப்படுத்தியது. பெண்கள் முன்னேற்றம் பற்றிய கருத்துக்களையும் வழங்கியது.

உசாத்துணை

மகளிர் இதழ்கள்: உலக தமிழாராய்ச்சி நிறுவனம்: இதழியல் ஆய்வு தொகுதி 9: முனைவர் சா. கிருட்டிணமூர்த்தி

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-May-2023, 19:10:09 IST