under review

யான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன்?: Difference between revisions

From Tamil Wiki
(changed template text)
 
Line 5: Line 5:
கடலில் விழுந்து சாகப்போன காமாட்சியை கண்ணன் காப்பாற்றுகிறான். அவள் தன் கதையைச் சொல்கிறாள். அவள் இளம்விதவை. 14 வயதில் திருமணமான மூன்றாம் நாளிலேயே கணவனை இழந்தவள். தன் இல்லத்திற்கு வரும் காந்தியவாதியான ஆன்மநாதனுடன் உறவுகொள்கிறாள். அவ்வுறவை குடும்பத்தார் அறிந்து கண்டிக்கிறார்கள். ஆன்மநாதன் வராமலாகும்போது பாலியல்தேவைக்காக பிற ஆடவரை நாடுகிறாள். அதை குடும்பத்தவர் அறியவே வீட்டைவிட்டு வெளியேறி தற்கொலைக்கு முயல்கிறாள். அவள் கண்ணன் இல்லத்தில் இருப்பதை அறிந்து தேடிவரும் ஆன்மநாதன் பாலியல்தேவை ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒன்றே என உணர்ந்து அவளை மணக்கிறான்

== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
வெளிவந்தபோது கடுமையான எதிர்ப்பை பெற்ற இந்நாவல் பெண்ணின் பாலியல்தேவை தவிர்க்கமுடியாத ஒரு இயற்கை உந்துதல் என்றும் அது ஆணுக்கும் பெண்ணுக்கும் நிகரே என்றும் வாதிட்டது. காமாட்சியை ஒழுக்கமற்றவளாக காட்டுகிறார். மறுமணம்புரியாத விதவைகள் ஒழுக்கமிழப்பார்கள் என்கிறார் என்றெல்லாம் குற்றம்சாட்டப்பட்டது. பாலியல்தேவையை ஒழுக்கத்துக்கும் மேல் வைத்த நாவல் இது. பிரச்சாரநாவல். அழகியலோ உளநுட்பங்களோ அற்றது. ஆண்பார்வையிலேயே எழுதப்பட்டது, பெண்ணின் உணர்வுகள் இயல்பாக வெளிப்படாமையால் பெண்ணை பாலியல்சார்ந்தே அணுகுவது என தோற்றமளித்தது.  
வெளிவந்தபோது கடுமையான எதிர்ப்பை பெற்ற இந்நாவல் பெண்ணின் பாலியல்தேவை தவிர்க்கமுடியாத ஒரு இயற்கை உந்துதல் என்றும் அது ஆணுக்கும் பெண்ணுக்கும் நிகரே என்றும் வாதிட்டது. காமாட்சியை ஒழுக்கமற்றவளாக காட்டுகிறார், மறுமணம்புரியாத விதவைகள் ஒழுக்கமிழப்பார்கள் என்கிறார் என்றெல்லாம் குற்றம்சாட்டப்பட்டது. பாலியல்தேவையை ஒழுக்கத்துக்கும் மேல் வைத்த நாவல் இது. பிரச்சாரநாவல். அழகியலோ உளநுட்பங்களோ அற்றது. ஆண்பார்வையிலேயே எழுதப்பட்டது, பெண்ணின் உணர்வுகள் இயல்பாக வெளிப்படாமையால் பெண்ணை பாலியல்சார்ந்தே அணுகுவது என தோற்றமளித்தது.  
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZU0kJQy&tag=%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF#book1/61 நாரண துரைக்கண்ணன் வாழ்க்கை வரலாறு]

{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 17:52, 14 July 2023

யான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன்? (1934) நாரண துரைக்கண்ணன் எழுதிய நாவல். விதவை மறுமணத்தை வலியுறுத்தி எழுதப்பட்டது.

எழுத்து, பிரசுரம்

இந்நாவல் நாரண துரைக்கண்ணனால் 1932-ல் திராவிடன் இதழில் எழுதப்பட்டு பின்னர் தமிழரசு இதழில் நிறைவுற்றது. 1934-ல் நூல்வடிவம் பெற்றது.

கதைச்சுருக்கம்

கடலில் விழுந்து சாகப்போன காமாட்சியை கண்ணன் காப்பாற்றுகிறான். அவள் தன் கதையைச் சொல்கிறாள். அவள் இளம்விதவை. 14 வயதில் திருமணமான மூன்றாம் நாளிலேயே கணவனை இழந்தவள். தன் இல்லத்திற்கு வரும் காந்தியவாதியான ஆன்மநாதனுடன் உறவுகொள்கிறாள். அவ்வுறவை குடும்பத்தார் அறிந்து கண்டிக்கிறார்கள். ஆன்மநாதன் வராமலாகும்போது பாலியல்தேவைக்காக பிற ஆடவரை நாடுகிறாள். அதை குடும்பத்தவர் அறியவே வீட்டைவிட்டு வெளியேறி தற்கொலைக்கு முயல்கிறாள். அவள் கண்ணன் இல்லத்தில் இருப்பதை அறிந்து தேடிவரும் ஆன்மநாதன் பாலியல்தேவை ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒன்றே என உணர்ந்து அவளை மணக்கிறான்

இலக்கிய இடம்

வெளிவந்தபோது கடுமையான எதிர்ப்பை பெற்ற இந்நாவல் பெண்ணின் பாலியல்தேவை தவிர்க்கமுடியாத ஒரு இயற்கை உந்துதல் என்றும் அது ஆணுக்கும் பெண்ணுக்கும் நிகரே என்றும் வாதிட்டது. காமாட்சியை ஒழுக்கமற்றவளாக காட்டுகிறார், மறுமணம்புரியாத விதவைகள் ஒழுக்கமிழப்பார்கள் என்கிறார் என்றெல்லாம் குற்றம்சாட்டப்பட்டது. பாலியல்தேவையை ஒழுக்கத்துக்கும் மேல் வைத்த நாவல் இது. பிரச்சாரநாவல். அழகியலோ உளநுட்பங்களோ அற்றது. ஆண்பார்வையிலேயே எழுதப்பட்டது, பெண்ணின் உணர்வுகள் இயல்பாக வெளிப்படாமையால் பெண்ணை பாலியல்சார்ந்தே அணுகுவது என தோற்றமளித்தது.

உசாத்துணை

✅Finalised Page