ஆரணி சுதாகர்: Difference between revisions
(Corrected typo errors; Corrected year suffix text; ; Added info on Finalised date) |
No edit summary |
||
| (One intermediate revision by the same user not shown) | |||
| Line 26: | Line 26: | ||
ஆரணி சுதாகர் மற்றும் அவர் மனைவி வித்யா இருவரும் தனிமுயற்சியால் இலக்கியம் சார்ந்த களப்பணிகளை முன்னெடுக்கிறார்கள். | ஆரணி சுதாகர் மற்றும் அவர் மனைவி வித்யா இருவரும் தனிமுயற்சியால் இலக்கியம் சார்ந்த களப்பணிகளை முன்னெடுக்கிறார்கள். | ||
==உசாத்துணை== | ==உசாத்துணை== | ||
*[https://www.andhimazhai.com/literature/book-fair-as-one-man-show ஆரணி சுதாகர் அந்திமழை பேட்டி] | *[https://www.andhimazhai.com/literature/book-fair-as-one-man-show ஆரணி சுதாகர் அந்திமழை பேட்டி] | ||
Latest revision as of 15:48, 12 October 2026
ஆரணி சுதாகர் ( 1979) இலக்கியச் செயல்பாட்டாளர். சிற்றிதழாளர். ஆரணி புத்தக விழாவின் ஒருங்கிணைப்பாளர். ஆரணியில் இலக்கியச் செயல்பாடுகளை முன்னெடுப்பவர்.
பிறப்பு, கல்வி
ஆரணி சுதாகர் ஆரணியில் சம்பத்- லலிதா இணையருக்கு 1979 ல் பிறந்தார். அண்ணன், அக்கா என்று உடன்பிறந்தவர்கள் இருவர். ஆரணியில் பள்ளிக்கல்வி. ஆரணியில் தொழில்பயிற்சி கல்வி பெற்றார்.
தனிவாழ்க்கை
சுதாகர் 1999 முதல் 2007 வரை ஃபிட்டராக வேலை பார்த்தார். பின் கணிப்பொறி கருவி சீரமைக்கும் பணி செய்தார். 2013-ல் 'ழ புத்தகக் கூடு' என்னும் கடையை நடத்தி வருகிறார். சுதாகரின் மனைவி வித்யா அழகுநிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். அனுஷ்கா, அகல்யா என்று இரண்டு மகள்கள்
இதழியல்
சுதாகர் 2012-ல் 'ஆரணி டைம்ஸ்' என்னும் இதழை ஆரம்பித்து நடத்தினார். பின்னர் அது நின்றுவிட்டது.
அறப்பணிகள்
சுதாகரின் மனைவி வித்யா தன் 'அறம் செய்வோம்' என்கிற அமைப்பின் மூலம் முதியோர்கள் நூறு பேருக்கு தினசரி உணவளிக்கிறார்.
இலக்கியச் செயல்பாடுகள்
இலக்கிய நிகழ்வுகள்
ஆரணி சுதாகர் தன் புத்தக விற்பனை நிலையம் சார்பில் 2013 முதல் மாதம் ஒருமுறை இலக்கியவாதிகளை வரவழைத்து இலக்கியச் சந்திப்பு நிகழ்வுகளை நடத்தி வருகிறார்.
புத்தக விழா
ஆரணி சுதாகர் 2018-ல் இருந்து ஆரணியில் புத்தகவிழாவை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார்.
அறிவியக்க இடம்
ஆரணி சுதாகர் மற்றும் அவர் மனைவி வித்யா இருவரும் தனிமுயற்சியால் இலக்கியம் சார்ந்த களப்பணிகளை முன்னெடுக்கிறார்கள்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Sep-2026, 13:08:43 IST