கலீர் கலீர்: Difference between revisions

From Tamil Wiki
Jeyamohan (talk | contribs)
No edit summary
Jeyamohan (talk | contribs)
No edit summary
 
Line 1: Line 1:
[[File:Aada Vandha Deivam 1960.jpg|thumb]]
கலீர் கலீர் (1959) எல்லார்வி எழுதிய நாவல். இசை மற்றும் நாட்டியத்தை அடிப்படையாகக் கொண்ட படைப்பு. ஆடவந்த தெய்வம் என்ற பெயரில் சினிமாவாக எடுக்கப்பட்டது  
கலீர் கலீர் (1959) எல்லார்வி எழுதிய நாவல். இசை மற்றும் நாட்டியத்தை அடிப்படையாகக் கொண்ட படைப்பு. ஆடவந்த தெய்வம் என்ற பெயரில் சினிமாவாக எடுக்கப்பட்டது  



Latest revision as of 16:55, 25 September 2026

கலீர் கலீர் (1959) எல்லார்வி எழுதிய நாவல். இசை மற்றும் நாட்டியத்தை அடிப்படையாகக் கொண்ட படைப்பு. ஆடவந்த தெய்வம் என்ற பெயரில் சினிமாவாக எடுக்கப்பட்டது

எழுத்து, வெளியீடு

கலீர் கலீர் நாவல் எல்லார்வி எழுதியது. 1959 ல் குமுதம் இதழில் 21 வாரங்களாக வெளிவந்தது. 10 ஜூன் 1959ல் இதை அல்லையன்ஸ் பதிப்பகம் நூலாக வெளியிட்டது.

பின்னணி

இந்நாவல் மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளை என்னும் வயலின் கலைஞரின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது என ஆசிரியர் குறிப்பிடுகிறார். சென்னையைச் சேர்ந்த செல்வந்தக் குடும்பத்து இளைஞர் ஒருவருக்கு மூளைக்கோளாறு ஏற்பட்டு பிற சிகிழ்ச்சைகள் பயனளிக்காதபோது மருத்துவர் ஒருவரின் ஆலோசனைப்படி மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளை அவர் அருகே தினமும் வயலின் வாசித்து அவரை மெல்ல குணமாக்கினார். அதற்காக அவருக்கு பெரிய பரிசுகள் அளிக்கப்பட்டன. இந்த நிகழ்வை எல்லார்வி ஒரு கட்டுரையாக எழுதினார். பின்னர் ஆடும் தெய்வம் என்ற பேரில் ஒரு குறுநாவலாக எழுதினார். குமுதம் இதழ் கேட்டுக்கொண்டபடி அதை தொடராக கலீர் கலீர் என்ற பேரில் வெளியிட்டார்.

கதைச்சுருக்கம்

இந்நாவல் பவானி என்னும் நாட்டிய மங்கையை பெரியநத்தம் ஜமீந்தாரின் மகன் கோபாலனின் மூளைக்கோளாறு நீங்கும்பொருட்டு நடனம் ஆடசெய்வதையும், அவர்களுக்குள் உருவாகும் உறவையும் சொல்கிறது.

திரைவடிவம்

கலீர் கலீர் நாவல் இயக்குநர் ப. நீலகண்டனால் பதிப்புரிமை பெறப்பட்டு 1960-ல் டி.ஆர். மகாலிங்கம் இயக்கத்தில் ஆடவந்த தெய்வம் என்ற பேரில் திரைப்படமாக வெளியாகியது.

இலக்கிய இடம்

மிக எளிமையான கட்டமைப்பு கொண்ட இந்நாவல் தமிழில் இசை, நடனம் ஆகியவற்றை பின்னணியாகக் கொண்டு வெளிவந்த நாவல்களில் ஒன்றாகக் கருதத் தக்கது.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Apr-2025, 05:46:14 IST