கிரிசாந்: Difference between revisions
SakthivelS (talk | contribs) |
(Corrected typo errors;) |
||
| (4 intermediate revisions by 2 users not shown) | |||
| Line 1: | Line 1: | ||
[[File:Krishanth.jpg|thumb|கிரிசாந்]] | [[File:Krishanth.jpg|thumb|கிரிசாந்]] | ||
கிரிசாந் (பிறப்பு: ஜனவரி 14, 1994) | கிரிசாந் (பிறப்பு: ஜனவரி 14, 1994) இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர். சிற்றிதழ் சார்ந்த தளத்திலும் தொடர்ச்சியாகச் செயல்பட்டுவருகிறார். | ||
==பிறப்பு, கல்வி== | ==பிறப்பு, கல்வி== | ||
கிரிசாந் இலங்கை யாழ்பாணம் திருநெல்வேலியில் முத்துக்குமாரசாமி சிவசுப்பிரமணியம் - சி. பாக்கியலட்சுமி இணையருக்கு ஜனவரி 14, 1994-ல் பிறந்தார். தம்பி சி. பிரசாந். தங்கை சுகிர்தா ஹரிலோஜூனன். தாயார் முதுகுத் தண்டில் ஏற்பட்ட நோய் காரணமாக 2009-ம் ஆண்டு மறைந்தார். புகைப்பட கலைஞரான தம்பி சி.பிரசாந் புற்றுநோய் காரணமாக 2025-ல் மறைந்தார். தங்கை சுகிர்தா ஹரிலோஜூனன் வழக்கறிஞர். | கிரிசாந் இலங்கை யாழ்பாணம் திருநெல்வேலியில் முத்துக்குமாரசாமி சிவசுப்பிரமணியம் - சி. பாக்கியலட்சுமி இணையருக்கு ஜனவரி 14, 1994-ல் பிறந்தார். தம்பி சி. பிரசாந். தங்கை சுகிர்தா ஹரிலோஜூனன். தாயார் முதுகுத் தண்டில் ஏற்பட்ட நோய் காரணமாக 2009-ம் ஆண்டு மறைந்தார். புகைப்பட கலைஞரான தம்பி சி.பிரசாந் புற்றுநோய் காரணமாக 2025-ல் மறைந்தார். தங்கை சுகிர்தா ஹரிலோஜூனன் வழக்கறிஞர். | ||
| Line 20: | Line 20: | ||
==இலக்கிய வாழ்க்கை== | ==இலக்கிய வாழ்க்கை== | ||
கிரிசாந்தின் முதல் படைப்பு 'மழைத்தீ' என்னும் கவிதை 2012-ம் ஆண்டு தீராநதி இதழில் வெளிவந்தது. கிரிசாந் தொடர்ந்து தனது இணையப்பக்கத்திலும் மின்னிதழ்களிலும் கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் வடிவங்களில் எழுதி வருகிறார். [[ | கிரிசாந்தின் முதல் படைப்பு 'மழைத்தீ' என்னும் கவிதை 2012-ம் ஆண்டு தீராநதி இதழில் வெளிவந்தது. கிரிசாந் தொடர்ந்து தனது இணையப்பக்கத்திலும் மின்னிதழ்களிலும் கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் வடிவங்களில் எழுதி வருகிறார். இரண்டு கவிதை தொகுதிகளும் கல்விரல் என்னும் நாவலும் வெளிவந்துள்ளது. | ||
== இலக்கிய இடம் == | |||
"கிரிசாந்தின் மொழி புனைவுக்கு ஏதுவாகக் குழைந்து விரைகிறது. யாழ்ப்பாணக்குடும்ப வாழ்வியல் அதற்கான மொழியுடன் அழகாகப் பதிவாகி இருக்கிறது. எல்லாவற்றையும் விட முக்கியமாக புலிகள் ஆதரவு அல்லது எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை விட்டு நகர்ந்து உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படைப்புகளை எழுதுகிறார்" என்று [[சரவணன் மாணிக்கவாசகம்]] குறிப்பிடுகிறார். | |||
==நூல்கள்== | ==நூல்கள்== | ||
| Line 38: | Line 41: | ||
*[https://thonmayaththirai.blogspot.com/?m=1 தொன்ம யாத்திரை குறித்த பா. அகிலனின் கட்டுரை: மரபுரிமையக் காப்பதும் ஓர் அரசியற் செயற்பாடுதான்] | *[https://thonmayaththirai.blogspot.com/?m=1 தொன்ம யாத்திரை குறித்த பா. அகிலனின் கட்டுரை: மரபுரிமையக் காப்பதும் ஓர் அரசியற் செயற்பாடுதான்] | ||
*[https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D விதை குழுமம் ஆவணங்கள்:நூலகம் ஆவணக்காப்பகம்] | *[https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D விதை குழுமம் ஆவணங்கள்:நூலகம் ஆவணக்காப்பகம்] | ||
*[https://saravananmanickavasagam.wordpress.com/2025/06/05/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D/ கொடிரோஸ் பற்றி சரவணன் மாணிக்கவாசகம்] | |||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|04-Jun-2026, 17:44:19 IST}} | {{Fndt|04-Jun-2026, 17:44:19 IST}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Latest revision as of 03:44, 3 July 2026
கிரிசாந் (பிறப்பு: ஜனவரி 14, 1994) இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர். சிற்றிதழ் சார்ந்த தளத்திலும் தொடர்ச்சியாகச் செயல்பட்டுவருகிறார்.
பிறப்பு, கல்வி
கிரிசாந் இலங்கை யாழ்பாணம் திருநெல்வேலியில் முத்துக்குமாரசாமி சிவசுப்பிரமணியம் - சி. பாக்கியலட்சுமி இணையருக்கு ஜனவரி 14, 1994-ல் பிறந்தார். தம்பி சி. பிரசாந். தங்கை சுகிர்தா ஹரிலோஜூனன். தாயார் முதுகுத் தண்டில் ஏற்பட்ட நோய் காரணமாக 2009-ம் ஆண்டு மறைந்தார். புகைப்பட கலைஞரான தம்பி சி.பிரசாந் புற்றுநோய் காரணமாக 2025-ல் மறைந்தார். தங்கை சுகிர்தா ஹரிலோஜூனன் வழக்கறிஞர்.
கிரிசாந் ஆரம்பக் கல்வியை யாழ். புனித சென் ஜோன்ஸ் பொஸ்கோ பள்ளியிலும் பின்னர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் பயின்றார். உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆங்கிலத்தில் டிப்ளமோ பெற்றார்.
தனிவாழ்க்கை
கிரிசாந் இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பக் கல்வி ஆங்கில ஆசிரியராக 2021-ம் ஆண்டு முதல் பணியாற்றுகிறார்.
கிரிசாந் பிரிந்தாவை மார்ச் 24, 2019-ல் திருமணம் செய்து கொண்டார். பிரிந்தா யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கலை வரலாற்றுத் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.
அரசியல்
கிரிசாந் 2012 - 2013 ஆண்டுகளில் நண்பர்களுடன் இணைந்து 'யாழின் கரங்கள்' என்னும் சமூக சேவை அமைப்பை நடத்தினார். 2012 முதல் 2014 வரை நவீன இலக்கியம் சார்ந்த குழுவான யாழ். இலக்கியக் குவியம் என்னும் அமைப்பில் இணைந்து செயல்பட்டார். 2014 முதல் 2023 வரை 'விதை குழுமம்' என்னும் அமைப்பை நண்பர்களுடன் இணைந்து நடத்தினார். விதை குழுமம் சுன்னாகம் நிலத்தடி நீர் பிரச்சனை, மாற்றுப் பாலின அரசியல், மரபுரிமை, வரலாறு, கலை, இலக்கியம் ஆகிய துறைகளில் செயல்வாதம், போராட்டங்கள், அறிவியக்கம் போன்றவற்றை ஒருங்கிணைத்தது. மரபுரிமைகளை அறிவதற்கும் விளங்கிக் கொள்வதற்குமான ஒரு பயண செயல்வாதத்தை 'தொன்ம யாத்திரை' எனும் பெயரில் விதை குழுமத்தினூடாக நண்பர்களுடன் இணைந்து ஒருங்கிணைத்தார்.
இதழியல்
புதிய சொல் எனும் கலை இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர். புதிய சொல் 2016 - 2021 வரை பத்து இதழ்கள் வெளிவந்து நின்றுவிட்டது.
பிற பணிகள்
கிரிசாந் தனது தம்பி பிரசாந் மரணமடைந்த பின்பு அவரது ஒளிப்படங்களின் கண்காட்சியை 'சிறிதினும் சிறிது' என்ற பெயரில் நடத்தினார். பிரசாந்தின் ஒளிப்படங்களும் அவரது ஆக்கங்கள் மற்றும் தனித்த வாழ்வு பற்றிய நூலும் வெளியிடப்பட்டது.
இலக்கிய வாழ்க்கை
கிரிசாந்தின் முதல் படைப்பு 'மழைத்தீ' என்னும் கவிதை 2012-ம் ஆண்டு தீராநதி இதழில் வெளிவந்தது. கிரிசாந் தொடர்ந்து தனது இணையப்பக்கத்திலும் மின்னிதழ்களிலும் கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் வடிவங்களில் எழுதி வருகிறார். இரண்டு கவிதை தொகுதிகளும் கல்விரல் என்னும் நாவலும் வெளிவந்துள்ளது.
இலக்கிய இடம்
"கிரிசாந்தின் மொழி புனைவுக்கு ஏதுவாகக் குழைந்து விரைகிறது. யாழ்ப்பாணக்குடும்ப வாழ்வியல் அதற்கான மொழியுடன் அழகாகப் பதிவாகி இருக்கிறது. எல்லாவற்றையும் விட முக்கியமாக புலிகள் ஆதரவு அல்லது எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை விட்டு நகர்ந்து உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படைப்புகளை எழுதுகிறார்" என்று சரவணன் மாணிக்கவாசகம் குறிப்பிடுகிறார்.
நூல்கள்
கவிதை தொகுப்புகள்
- மயான காண்டம் (கூட்டுத் தொகுப்பு, ஆகாயம் பதிப்பகம், 2014)
- வாழ்க்கைக்குத் திரும்புதல் (குமாரதேவன் வாசகர் வட்டம், 2024)
குறுநாவல்
- கொடிறோஸ் (ஆக்காட்டி பதிப்பகம், 2025)
நாவல்
- கல்விரல் (கருப்பு பிரதிகள், 2026)
தொகுப்பாசிரியர்
- ஷோபாசக்தி (தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளும் நேர்காணலும், தன்னறம் வெளியீடு, 2024) : தர்மு பிரசாத் & கிரிசாந்
இணைப்புகள்
- கிரிசாந் இணையதளம்
- புதிய சொல் இதழ்கள்: நூலகம் ஆவணக்காப்பகம்
- தொன்ம யாத்திரை குறித்த பா. அகிலனின் கட்டுரை: மரபுரிமையக் காப்பதும் ஓர் அரசியற் செயற்பாடுதான்
- விதை குழுமம் ஆவணங்கள்:நூலகம் ஆவணக்காப்பகம்
- கொடிரோஸ் பற்றி சரவணன் மாணிக்கவாசகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Jun-2026, 17:44:19 IST