under review

சிவ. சங்கரபண்டிதர்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "சிவ. சங்கரபண்டிதர் (சி. சங்கரபண்டிதர்)(1821 - 1891) ஈழத்து தமிழ் அறிஞர். == வாழ்க்கைக் குறிப்பு == சிவ. சங்கரபண்டிதர் யாழ்ப்பாணம், சுன்னாகத்தில் சிவகுருநாதருக்கு மகனாக 1821-ல் பிறந்தார். தமிழ...")
 
(Added First published date)
 
(10 intermediate revisions by 4 users not shown)
Line 1: Line 1:
சிவ. சங்கரபண்டிதர் (சி. சங்கரபண்டிதர்)(1821 - 1891) ஈழத்து தமிழ் அறிஞர்.
சிவ. சங்கரபண்டிதர் (சி. சங்கரபண்டிதர்)(1821 - 1891) ஈழத்து தமிழ் அறிஞர், சைவ அறிஞர், ஆசிரியர். சைவ நூல்கள் பல எழுதினார். சைவம் சார்ந்த வடமொழி நூல்களுக்கு தமிழுரை எழுதினார்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
சிவ. சங்கரபண்டிதர் யாழ்ப்பாணம், சுன்னாகத்தில் சிவகுருநாதருக்கு மகனாக 1821-ல் பிறந்தார். தமிழிலக்கண இலக்கியங்களைத் வேதாரண்யம் சுவாமிநாத தேசிகரிடத்தில் சமஸ்கிருத வியாகரணம், தருக்கம், காவியம் முதலியவற்றைக் கற்றார்.
சிவ. சங்கரபண்டிதர் யாழ்ப்பாணம், சுன்னாகத்தில் சிவகுருநாதர், தெய்வானையம்மாள் இணையருக்கு மகனாக 1821-ல் பிறந்தார். யாழ்ப்பாணத்து கந்தரோடையைச் சேர்ந்த வித்துவ சிரோமணி சேனாதிராய முதலியாரின் மாணவரான அப்பாபிள்ளையிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். வேதாரண்யம் வை. சுவாமிநாததேசிகரிடத்தில் சமஸ்கிருத வியாகரணம், தர்க்கம், காவியம் ஆகிவற்றைக் கற்றார். அவரிடம் உபதேசம் பெற்றார். நீர்வேலியில் வாழ்ந்ததால் நீர்வேலிச் சிவசங்கரபண்டிதர் என்று அழைக்கப்பட்டார்.  
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
சிவ. சங்கரபண்டிதர் சைவப்பிரகாசனம், சத்த சங்கிரகம், அகநிர்ணயத் தமிழுரை, சிவபூசையந்தாதி உரை, கிறிஸ்துமதகண்டனம், சிவ தூஷண கண்டனம், அனுட்டான விதி போன்றன இயற்றிய நூல்களாகும்.
சிவ. சங்கரபண்டிதர் சைவப்பிரகாசனம், சத்த சங்கிரகம், அகநிர்ணயத் தமிழுரை, சிவபூசையந்தாதி உரை, கிறிஸ்துமதகண்டனம், சிவ தூஷண கண்டனம், அனுட்டான விதி போன்றன இயற்றிய நூல்களாகும். சைவப்பிரகாசனம் நூலில் தர்க்க பிராமண இயல்புகள், சுருதியிலக்கணம், சமயவிலக்கணம், சைவ சமய் நிரூபணம், முப்பொருளிலக்கணம் ஆகியவை உள்ளன.
 
சிவ. சங்கரபண்டிதர் தமிழ் இலக்கண இலக்கியங்களை கற்பித்ததோடு சைவ சமயப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். இவர் பரிசோதித்து வைத்திருந்த அமர நிகண்டின் பிரதம காண்டம் சிவபிரகாச பண்டிதரால் வெளியிடப்பட்டது. இவர் பரிசோதித்து வைத்திருந்த பெளஷ்கராகம விருத்தியும் அகோர சிவாச்சாரிய பத்ததி நிர்மலமணி வியாக்கியானமும் அம்பலவாண நாவலருக்கும், [[ஞானப்பிரகாச சுவாமிகள்|ஞானபிரகாச முனிவ]]ரின் சங்கத நூல்கள் கைலாச பிள்ளைக்கும் அவற்றை பதிப்பிக்க உதவின.
===== மாணவர்கள் =====
* கீரிமலைச்சபாபதி குருக்கள்
* சுன்னாகத்து முருகேச பண்டிதர்
* மாதகல் சு. ஏரம்பையார்
* கோப்பாய் சு. சபாபதி நாவலர்
* ஆவரங்கால் சு. நமச்சிவாயப் புலவர்
* வடகோவை 
* பீ. சபாபதிப்பிள்ளை
== விவாதங்கள் ==
[[ஆறுமுக நாவலர்|ஆறுமுக நாவல]]ரின் சைவதூஷண பரிகாரத்தின் உபோற்காதமும் பெரிய புராண சூசனத்தில் உள்ள மொழிபெயர்ப்புகளும் சிவ. சங்கரபண்டிதருடையது என சங்கர பண்டிதர் சற்பிரசங்கம் கூறுகிறது.
சுவாமி நாதபண்டிதரின் சிவஞானபோத மாபாடியப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ள வடமொழி சிவஞான போதத் தமிழுரை சிவ. சங்கரபண்டிதருடையது என பொ. பூபாலசிங்கம் குறிப்பிடுகிறார்.  
== மறைவு ==
== மறைவு ==
சிவ. சங்கரபண்டிதர் 1891-ல் காலமானார்
சிவ. சங்கரபண்டிதர் 1891-ல் காலமானார்
Line 14: Line 27:
* சிவ தூஷண கண்டனம்
* சிவ தூஷண கண்டனம்
* அனுட்டான விதி  
* அனுட்டான விதி  
* மிலேச்சமத விகற்பம்
* பாலசிட்ஷை (1880)
* சமஸ்கிருத இரண்டாம் புத்தகம்
* தாதுமாலை (1909)
* சத்த சங்கிருகத்தின் பூர்வார்த்தம் (1890)
===== தமிழுரை எழுதிய நூல்கள் =====
* பிரசாத சட்சுலோகி
* சித்தாந்த சாராவளி
* அகநிர்ணயம்
* அகபஞ்ச சட்டி
* வடமொழிச் சிவஞானபோதம்
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* ஈழத்து தமிழ் அறிஞர்கள்: கவிஞர் த. துரைசிங்கம்: உமா பதிப்பகம்: கொழும்பு
* ஈழத்து தமிழ் அறிஞர்கள்: கவிஞர் த. துரைசிங்கம்: உமா பதிப்பகம்: கொழும்பு
* ஆளுமை:சங்கரபண்டிதர், சி: noolaham
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%9A%E0%AE%BF. ஆளுமை:சங்கரபண்டிதர், சி: noolaham]
 
{{Finalised}}
 
{{Fndt|13-Mar-2023, 18:36:32 IST}}

[[Category:Being Created]]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 12:02, 13 June 2024

சிவ. சங்கரபண்டிதர் (சி. சங்கரபண்டிதர்)(1821 - 1891) ஈழத்து தமிழ் அறிஞர், சைவ அறிஞர், ஆசிரியர். சைவ நூல்கள் பல எழுதினார். சைவம் சார்ந்த வடமொழி நூல்களுக்கு தமிழுரை எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

சிவ. சங்கரபண்டிதர் யாழ்ப்பாணம், சுன்னாகத்தில் சிவகுருநாதர், தெய்வானையம்மாள் இணையருக்கு மகனாக 1821-ல் பிறந்தார். யாழ்ப்பாணத்து கந்தரோடையைச் சேர்ந்த வித்துவ சிரோமணி சேனாதிராய முதலியாரின் மாணவரான அப்பாபிள்ளையிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். வேதாரண்யம் வை. சுவாமிநாததேசிகரிடத்தில் சமஸ்கிருத வியாகரணம், தர்க்கம், காவியம் ஆகிவற்றைக் கற்றார். அவரிடம் உபதேசம் பெற்றார். நீர்வேலியில் வாழ்ந்ததால் நீர்வேலிச் சிவசங்கரபண்டிதர் என்று அழைக்கப்பட்டார்.

இலக்கிய வாழ்க்கை

சிவ. சங்கரபண்டிதர் சைவப்பிரகாசனம், சத்த சங்கிரகம், அகநிர்ணயத் தமிழுரை, சிவபூசையந்தாதி உரை, கிறிஸ்துமதகண்டனம், சிவ தூஷண கண்டனம், அனுட்டான விதி போன்றன இயற்றிய நூல்களாகும். சைவப்பிரகாசனம் நூலில் தர்க்க பிராமண இயல்புகள், சுருதியிலக்கணம், சமயவிலக்கணம், சைவ சமய் நிரூபணம், முப்பொருளிலக்கணம் ஆகியவை உள்ளன.

சிவ. சங்கரபண்டிதர் தமிழ் இலக்கண இலக்கியங்களை கற்பித்ததோடு சைவ சமயப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். இவர் பரிசோதித்து வைத்திருந்த அமர நிகண்டின் பிரதம காண்டம் சிவபிரகாச பண்டிதரால் வெளியிடப்பட்டது. இவர் பரிசோதித்து வைத்திருந்த பெளஷ்கராகம விருத்தியும் அகோர சிவாச்சாரிய பத்ததி நிர்மலமணி வியாக்கியானமும் அம்பலவாண நாவலருக்கும், ஞானபிரகாச முனிவரின் சங்கத நூல்கள் கைலாச பிள்ளைக்கும் அவற்றை பதிப்பிக்க உதவின.

மாணவர்கள்
  • கீரிமலைச்சபாபதி குருக்கள்
  • சுன்னாகத்து முருகேச பண்டிதர்
  • மாதகல் சு. ஏரம்பையார்
  • கோப்பாய் சு. சபாபதி நாவலர்
  • ஆவரங்கால் சு. நமச்சிவாயப் புலவர்
  • வடகோவை
  • பீ. சபாபதிப்பிள்ளை

விவாதங்கள்

ஆறுமுக நாவலரின் சைவதூஷண பரிகாரத்தின் உபோற்காதமும் பெரிய புராண சூசனத்தில் உள்ள மொழிபெயர்ப்புகளும் சிவ. சங்கரபண்டிதருடையது என சங்கர பண்டிதர் சற்பிரசங்கம் கூறுகிறது. சுவாமி நாதபண்டிதரின் சிவஞானபோத மாபாடியப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ள வடமொழி சிவஞான போதத் தமிழுரை சிவ. சங்கரபண்டிதருடையது என பொ. பூபாலசிங்கம் குறிப்பிடுகிறார்.

மறைவு

சிவ. சங்கரபண்டிதர் 1891-ல் காலமானார்

நூல் பட்டியல்

  • சைவப்பிரகாசனம்
  • சத்த சங்கிரகம்
  • அகநிர்ணயத் தமிழுரை
  • சிவபூசையந்தாதி உரை
  • கிறிஸ்துமதகண்டனம்
  • சிவ தூஷண கண்டனம்
  • அனுட்டான விதி
  • மிலேச்சமத விகற்பம்
  • பாலசிட்ஷை (1880)
  • சமஸ்கிருத இரண்டாம் புத்தகம்
  • தாதுமாலை (1909)
  • சத்த சங்கிருகத்தின் பூர்வார்த்தம் (1890)
தமிழுரை எழுதிய நூல்கள்
  • பிரசாத சட்சுலோகி
  • சித்தாந்த சாராவளி
  • அகநிர்ணயம்
  • அகபஞ்ச சட்டி
  • வடமொழிச் சிவஞானபோதம்

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 13-Mar-2023, 18:36:32 IST