அனுராதா ஆனந்த்: Difference between revisions
(Removed Category:Spc) |
No edit summary |
||
| Line 42: | Line 42: | ||
* [https://neeli.co.in/3686/ அனுராதா ஆனந்த் கட்டுரை, நீலி இதழ்] | * [https://neeli.co.in/3686/ அனுராதா ஆனந்த் கட்டுரை, நீலி இதழ்] | ||
* [https://vasagasalai.com/padhinezhavadhu-niram-short-story-by-anuradha-anandh/ பதினேழாவது நிறம் அனுராதா ஆனந்த்] | * [https://vasagasalai.com/padhinezhavadhu-niram-short-story-by-anuradha-anandh/ பதினேழாவது நிறம் அனுராதா ஆனந்த்] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|28-Jul-2023, 20:48:39 IST}} | {{Fndt|28-Jul-2023, 20:48:39 IST}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:கவிஞர்]] | [[Category:கவிஞர்]] | ||
Latest revision as of 15:23, 12 October 2026
- ஆனந்த் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ஆனந்த் (பெயர் பட்டியல்)
- அனுராதா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: அனுராதா (பெயர் பட்டியல்)
அனுராதா ஆனந்த் தமிழில் எழுதிவரும் கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு கவிதைகள், சிறுகதைகள் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். படைப்பிலக்கியத்திலும் ஈடுபட்டு வருகிறார்.
பிறப்பு, கல்வி
அனுராதா ஆனந்த் சென்னையில் பி.எம். சங்கர், செல்லம்மாள் இணையருக்குப் பிறந்தார். சென்னை ஐவஹர் வித்யாலயாவிலும், ஃபாத்திமா கான்வென்டிலும் பள்ளிக்கல்வி பயின்றார். சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலைப் பட்டமும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கணினித் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
தனிவாழ்க்கை
அனுராதா ஆனந்த் மகன் ப்ரணவ், மகள் நயனிகாவுடன் சென்னையில் வசிக்கிறார். குடும்ப நிறுவனத்தில் இணைய வர்த்தகத் துறையில் வேலை செய்கிறார்.
இலக்கிய வாழ்க்கை
அனுராதா ஆனந்தின் கவிதைகளும், கவிதை மொழிபெயர்ப்புகளும் அவரது கல்லூரி காலகட்டத்தில் பத்திரிக்கைகளில் வெளிவந்தன. 2015 முதல் அவரது கவிதைகளும், மொழிபெயர்ப்புக் கவிதைகளும் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக வெளிவந்தன. 2017-ல் விகடன் தடம் இதழில் பதினாறு சமகால கவிஞர்களின் கவிதை மொழிப்பெயர்ப்புகள் ஒரே இதழில் பிரசுரமானது. இந்தக் கவிதைகள் 'எண் ஏழு(7) போல் வளைபவர்கள்' என்ற தொகுப்பாக வெளிவந்தது.
அனுராதா ஆனந்தின் முதல் சிறுகதை 'மஞ்சள் குருவி' 2017-ல் வெளிவந்தது. இவரின் மொழிபெயர்ப்புகள், கவிதைகள், சிறு கதைகள், கட்டுரைகள், விகடன், விகடன் தடம், உயிர்மை, கல்கி, குங்குமம், குமுதம், கல்குதிரை, ஓலைச்சுவடி, மங்கையர் மலர், புரவி, நம் நற்றிணை, நீலம் போன்ற பத்திரிகைகளிலும் வாசகசாலை, கனலி, வனம், நுட்பம் போன்ற இணைய இதழ்களிலும் வெளிவந்துள்ளன. சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் கவிதை வாசிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அறுபது கவிஞர்களுள் ஒருவர்.
விருதுகள்
- 2018-ல் 'எண் 7 ஏழு போல் வளைபவர்கள்' தொகுப்பிற்காக ஆத்மாநாம் விருது
- 2019-ல் 'கறுப்பு உடம்பு' தொகுப்பிற்கு சிறந்த மொழிபெயர்ப்பிற்காக விகடன் இலக்கிய விருது
- 2021-ல் 'ஆணின் சிரிப்பு' என்ற தொகுப்பிற்காக வாசகசாலை விருது
இலக்கிய இடம்
அனுராதா ஆனந்த் படைப்பிலக்கியத்திலும் மொழியாக்கத்திலும் ஈடுபட்டு வருகிறார். பெண்களின் வாழ்க்கையின் சிக்கல்களை புனைவுகளில் கருப்பொருளாகக் கொண்டுள்ளார்.
நூல்கள் பட்டியல்
சிறுகதைத் தொகுப்பு
- மயிற்பீலி (2025, சால்ட்)
மொழிபெயர்ப்பு
- அழிக்க முடியாத ஒரு சொல் (சிறுகதைகள்)
- நிக்கனோர் பர்ரா: 27 எதிர் கவிதைகள்
- ஆணின் சிரிப்பு (கவிதை)
- கறுப்பு உடம்பு (கவிதை)
- கற்பனைகளால் நிறைந்த துளை (கவிதை)
- எண்: 7 போல் வளைபவர்கள் (கவிதை)
- எமிலி டிக்கின்சன் கவிதைகள்
இணைப்புகள்
- அனுராதா ஆனந்த் ஏற்புரை | எமிலி டிக்கின்சன் (மொழிபெயர்ப்பு சிறுகதைகள்)
- கவிஞர் ஆத்மாநாம் விருது 2018 | அனுராதா ஆனந்த் ஏற்புரை
- 'பாடுகளின் இறுதியில் ஒரு கதவிருந்தது: லூயி க்ளக்கின் கவிதைகள் பேசியது என்ன?: அனுராதா ஆனந்த்
- பூர்வகுடி கவிஞர் Natalie Diaz-க்கு புலிட்சர் விருது... இவர் கவிதைகள் கலங்கடிப்பது ஏன்?: ஆனந்தவிகடன்
- அனுராதா ஆனந்த் கவிதைகள் வாசகசாலை
- அனுராதா ஆனந்த் கட்டுரை, நீலி இதழ்
- பதினேழாவது நிறம் அனுராதா ஆனந்த்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
28-Jul-2023, 20:48:39 IST