பரத்தை கூறல்(பெருந்திணை): Difference between revisions

From Tamil Wiki
Jayashree (talk | contribs)
No edit summary
; Added info on Finalised date
 
(One intermediate revision by one other user not shown)
Line 19: Line 19:
[https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0214-html-d0214662-19946  பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்]
[https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0214-html-d0214662-19946  பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்]


{{Second review completed}}
{{Finalised}}
{{Fndt|01-Aug-2025, 19:29:45 IST}}
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 03:44, 2 August 2025

பரத்தை கூறல் புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று. தலைவன் தன்னிடம் வருதலைக் குறித்து பரத்தை கூறுதல். இருபால் கூற்றில் அமைந்தது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் மணம் கமழும் மலையில் தலைவன் அணிந்திருக்கும் மாலையைப் பெறுவது எளிது எனத் தன்னைச் சார்ந்தவர் கேட்கப் பரத்தை சொல்லுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

தேம்கமழ் சிலம்பன் தார் எமக்கு எளிது எனப்
பாங்கவர் கேட்ப பரத்தை மொழிந்தன்று(கொளு 17.12 )

வெண்பா

பலஉரைத்துக் கூத்தாடிப் பல்வயல் ஊரன்
நிலவுரைக்கும் பூணவர் சேரிச் - செலவுரைத்து
வெம்கண் களியால் விறலி விழாக் கொள்ளல்
எம்கண் கவன்றார் எளிது (336)

பொருள்: விறலியே ! பல பொய்களையும் சொல்லித் தலைவன் வருவான் என்று தலைவியிடம் கூறிக் (அவளிடம் பொருள்பெற்று) கொண்டாடுகிறாய் ; ஆனால் தலைவன் எம்மிடம் வருதல் உறுதி.

உசாத்துணை

பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Aug-2025, 19:29:45 IST