வெறியாட்டு(பெருந்திணை): Difference between revisions

From Tamil Wiki
Jayashree (talk | contribs)
No edit summary
; Added info on Finalised date
 
(2 intermediate revisions by 2 users not shown)
Line 18: Line 18:


==உசாத்துணை==
==உசாத்துணை==
[https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0214-html-d0214662-19946  பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்]  
[https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0214-html-d0214662-19946  பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்]


{{Finalised}}
{{Fndt|31-Jul-2025, 18:56:20 IST}}


{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 03:44, 1 August 2025

வெறியாட்டு புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று. தலைவியிடம் காதலால் ஏற்படும் மாற்றங்கள் கண்ட தாய் முருகன் குற்றமெனக் கருதி வெறியாட்டு என்ற சடங்கை நிகழ்த்துவது பழைய மரபு. தலைவி பெருந்திணைக் காதலால் வெறிக்கூத்தாடுவதைக் கூறுவது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் தலைவி, தலைவனது அருளைப் பெறக் கருதி, அதனைத் தாய் அறியாதபடி வேங்கை மரங்கள் பூத்திருக்கும் தன் வீட்டில் முருகன் அருள் வேண்டும் வெறிக்கூத்தை ஆடுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

தேம்கமழ் கோதை செம்மல் அளி நினைந்து
ஆங்கு அந்நிலைமையாய் அறியாமை
வேங்கையம் சிலம்பற்கு வெறிஆடின்று(கொளு 17.10)

வெண்பா

வெய்ய நெடிது உயிரா வெற்பன் அளிநினையா
ஐயைநனி நீங்க ஆடினாள் - மையல்
அயன்மனைப் பெண்டிரோடு அன்னைசொல் அஞ்சி
வியன் மனையுள் ஆடும் வெறி (334)

பொருள்: காதல் ஏக்கத்தால் வெப்பமான பெருமூச்சினை விட்டுத் தலைவன் வருவானோ, வரமாட்டானோ என்ற ஐயம் நீங்கத் தலைவி அவனது அருளைப் பெற விரும்பினாள் ; பக்கத்து வீட்டுப் பெண்களும் தாயும் அறியாதபடி தன் வீட்டிடத்தில் வெறிக்கூத்தை ஆடினாள்.

உசாத்துணை

பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Jul-2025, 18:56:20 IST