under review

உரைகேட்டு நயத்தல்(பெருந்திணை): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(; Added info on Finalised date)
 
(2 intermediate revisions by 2 users not shown)
Line 17: Line 17:


==உசாத்துணை==
==உசாத்துணை==
[https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0214-html-d0214662-19946  பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்]  
[https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0214-html-d0214662-19946  பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்]


{{Finalised}}
{{Fndt|29-Jul-2025, 18:55:58 IST}}


{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 03:44, 30 July 2025

உரைகேட்டு நயத்தல் புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று. பெண்பால் கூற்றாக அமைந்தது. பெருந்திணைக் காதல் கொண்ட தலைவி தலைவனது பேச்சைக் கேட்டு மகிழ்தலைக் கூறும் துறை.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் துன்பத்தோடு இருந்த தொடியணிந்த தோளினாள் உயர்ந்த மலைநாடனின் சொற்களைக் கேட்டு மகிழ்ச்சி அடைதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

துயரொடு வைகிய சூழ்வளைத் தோளி
உயர்வரை நாடன் உரை கேட்டு நயந்தன்று(கொளு 16.16)

வெண்பா

ஆழ விடுமோ அலரொடு வைகினும்
தாழ்குரல் ஏனல் தலைகொண்ட - நூழில்
விரையால் கமழும் விறல்மலை நாடன்
உரையால் தளிர்க்கும் உயிர் (321)

பொருள்: முற்றிய கதிர்களால் வளைந்த தினைத்தாளில் நூழில் என்னும் கொடி சுற்றும் மலைநாடனுடைய சொற்களைக் கேட்பதால் இனி என் உயிர் துயரத்தில் ஆழாது தளிர்க்கும்.

உசாத்துணை

பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Jul-2025, 18:55:58 IST