மூதின் முல்லை: Difference between revisions
No edit summary |
(Corrected typo errors;) |
||
| (8 intermediate revisions by 3 users not shown) | |||
| Line 10: | Line 10: | ||
<poem> | <poem> | ||
வந்தபடை நோனான் வாயில் முலைபறித்து | வந்தபடை நோனான் வாயில் முலைபறித்து | ||
வெந்திறல் | வெந்திறல் எ.கம் இறைக் கொளீஇ - முந்தை | ||
முதல்வர்கல் தான் காட்டி மூதில் மடவாள் | முதல்வர்கல் தான் காட்டி மூதில் மடவாள் | ||
புதல்வனைச் செல்க என்றாள் போர்க்கு (175) | புதல்வனைச் செல்க என்றாள் போர்க்கு (175) | ||
| Line 16: | Line 16: | ||
பொருள்: பகைப்படை தன்நாட்டின்மீது எதிர்த்து வருதலைப் பொறாதவளாய்ப் பாலுண்ணும் தன் பிள்ளையிடம், வீட்டிலிருந்த வேலினை வளைவு நிமிர்த்திக் கையில் கொடுத்து, தன் முன்னோர் வீரமரணம் எய்தி நடுகல்லில் தெய்வமாக நிற்கும் மாட்சியை அவனுக்குக் காட்டி, அவனைப் போர்க்களம் நோக்கிச் செல்ல விடுப்பாள் வீரத்தாய். | பொருள்: பகைப்படை தன்நாட்டின்மீது எதிர்த்து வருதலைப் பொறாதவளாய்ப் பாலுண்ணும் தன் பிள்ளையிடம், வீட்டிலிருந்த வேலினை வளைவு நிமிர்த்திக் கையில் கொடுத்து, தன் முன்னோர் வீரமரணம் எய்தி நடுகல்லில் தெய்வமாக நிற்கும் மாட்சியை அவனுக்குக் காட்டி, அவனைப் போர்க்களம் நோக்கிச் செல்ல விடுப்பாள் வீரத்தாய். | ||
==புறநானூற்றில் மூதின் முல்லை== | ==புறநானூற்றில் மூதின் முல்லை== | ||
புறநானூற்றில் 15 பாடல்கள் மூதின் முல்லைத் துறையைச் சேர்ந்தவை. | புறநானூற்றில் 15 பாடல்கள் மூதின் முல்லைத் துறையைச் சேர்ந்தவை. 279, 288, 306, 308, 326, 327, 328, 329, 330, 331, 332, 333, 334, 335 | ||
344, 345 | |||
== எடுத்துக்காட்டு == | |||
=====புறநானூறு 279===== | |||
<poem> | |||
கெடுக சிந்தை; கடிதுஇவள் துணிவே; | |||
மூதின் மகளிர் ஆதல் தகுமே; | |||
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை, | |||
யானை எறிந்து களத்துஒழிந் தனனே; | |||
நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன், | |||
பெருநிரை விலங்கி ஆண்டுப்பட் டனனே; | |||
இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி | |||
வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடீஇப் | |||
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி | |||
ஒருமகன் அல்லது இல்லோள் | |||
செருமுக நோக்கிச் செல்கஎன விடுமே. | |||
</poem> | |||
இவளது சிந்தை கெடுக; இவளது துணிவு மிகவும் கடுமையானது. முதுமையான மறக்குலப் பெண் என்று சொன்னால் அதற்கு இவள் தகுதியானவள். முந்தாநாள், இவளுடைய தந்தை, யானையை எதிர்த்துப் போரிட்டு, அப்போரில் இறந்தான். நேற்று நடைபெற்ற போரில், இவள் கணவன் ஆநிரைகளை பகைவர்களிடமிருந்து மீட்கும் போரில் இறந்தான். இன்று மீண்டும் போர்ப்பறை ஒலிக்கிறது. அதைக்கேட்டுப், போரில் வெற்றிபெற வேண்டும் என்ற விருப்பத்தால் அறிவு மயங்கித் தன்னுடைய ஒரே மகனாகிய சிறுவனை அழைத்து, அவனுக்கு வெண்ணிற ஆடையை உடுத்தி, அவனுடைய பரட்டைத் தலையில் எண்ணெய் தடவி, சீவி முடித்து, கையில் வேலைக் கொடுத்துப் "போர்க்களத்தை நோக்கிச் செல்க" என்று அனுப்பினாள். | |||
=====புறநானூறு 308===== | |||
<poem> | |||
களிறுபொரக் கலங்கு கழல்முள் வேலி | |||
அரிதுஉண் கூவல் அங்குடிச் சீறூர் | |||
ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை | |||
நடுகல் கைதொழுது பரவும் ஒடியாது; | |||
விருந்து எதிர் பெறுகதில் யானே; என்ஐயும் 5 | |||
ஒ .. .. .. .. .. .. வேந்தனொடு | |||
நாடுதரு விழுப்பகை எய்துக எனவே. | |||
</poem> | |||
யானைகள் படிந்ததால் கலங்கிச் சேறாகி, உண்ணும் நீர் சிறிதளவே உள்ள நீர்த்துறையையும், முள்ளையுடைய கழற்கொடிகளாலாகிய வேலி சூழ்ந்த அழகிய சிறுகுடிகளையுமுடைய சிற்றூரில் வாழும், தழைத்த மெல்லிய கூந்தலையும் ஒளி பொருந்திய நெற்றியையும் உடைய பெண் ஒருத்தி, நாளும் தவறாமல் தன் முன்னோர்களின் நடுகல்லைத் தொழுது, "நாள்தோறும் விருந்தினர் என் இல்லத்திற்கு வர வேண்டும்; என் கணவனும் ..... அவன் தலைவனாகிய வேந்தனும் பிற நாடுகளை வென்று பொருள் பெற உதவும் பெரும்பகையை அடைவானாகுக" என்று அவள் நடுகல்லை வழிபட்டாள். | |||
==உசாத்துணை== | ==உசாத்துணை== | ||
[https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0214-html-d0214223-19847 வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்] | [https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0214-html-d0214223-19847 வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்] | ||
{{Finalised}} | |||
{{Fndt|11-Sep-2025, 19:55:14 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Latest revision as of 16:05, 22 November 2025
மூதின் முல்லை வாகைத் திணையின் துறைகளில் ஒன்று.போரிட்டுப் பெற்ற வெற்றியாக இல்லாமல் இயல்பாகப் பெறும் மேம்பாடான வெற்றியை முல்லை என்று குறிப்பிடுவர். அரசன் முதலானோர் பெறும் மேம்பாட்டினை வாகைத் திணை கூறுகிறது. பழைய மறக்குடியில் பிறந்தோரது மேம்பாடு என்பது மூதில் முல்லை. குறிப்பாகப் பெண்களின் மறப்பண்பினைக் கூறுவது.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் வேலையுடைய ஆடவர்க்கு மட்டுமன்றி வீரக்குடியில் பிறந்த பெண்டிர்க்கும் வீரப் பெருமிதம் உண்டு என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
அடல்வேல் ஆடவர்க்கு அன்றியும் அவ்வில்
மடவரன் மகளிர்க்கு மறம் மீகத்தன்று(கொளு 8.21)
வெண்பா
வந்தபடை நோனான் வாயில் முலைபறித்து
வெந்திறல் எ.கம் இறைக் கொளீஇ - முந்தை
முதல்வர்கல் தான் காட்டி மூதில் மடவாள்
புதல்வனைச் செல்க என்றாள் போர்க்கு (175)
பொருள்: பகைப்படை தன்நாட்டின்மீது எதிர்த்து வருதலைப் பொறாதவளாய்ப் பாலுண்ணும் தன் பிள்ளையிடம், வீட்டிலிருந்த வேலினை வளைவு நிமிர்த்திக் கையில் கொடுத்து, தன் முன்னோர் வீரமரணம் எய்தி நடுகல்லில் தெய்வமாக நிற்கும் மாட்சியை அவனுக்குக் காட்டி, அவனைப் போர்க்களம் நோக்கிச் செல்ல விடுப்பாள் வீரத்தாய்.
புறநானூற்றில் மூதின் முல்லை
புறநானூற்றில் 15 பாடல்கள் மூதின் முல்லைத் துறையைச் சேர்ந்தவை. 279, 288, 306, 308, 326, 327, 328, 329, 330, 331, 332, 333, 334, 335
344, 345
எடுத்துக்காட்டு
புறநானூறு 279
கெடுக சிந்தை; கடிதுஇவள் துணிவே;
மூதின் மகளிர் ஆதல் தகுமே;
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை,
யானை எறிந்து களத்துஒழிந் தனனே;
நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன்,
பெருநிரை விலங்கி ஆண்டுப்பட் டனனே;
இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடீஇப்
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுக நோக்கிச் செல்கஎன விடுமே.
இவளது சிந்தை கெடுக; இவளது துணிவு மிகவும் கடுமையானது. முதுமையான மறக்குலப் பெண் என்று சொன்னால் அதற்கு இவள் தகுதியானவள். முந்தாநாள், இவளுடைய தந்தை, யானையை எதிர்த்துப் போரிட்டு, அப்போரில் இறந்தான். நேற்று நடைபெற்ற போரில், இவள் கணவன் ஆநிரைகளை பகைவர்களிடமிருந்து மீட்கும் போரில் இறந்தான். இன்று மீண்டும் போர்ப்பறை ஒலிக்கிறது. அதைக்கேட்டுப், போரில் வெற்றிபெற வேண்டும் என்ற விருப்பத்தால் அறிவு மயங்கித் தன்னுடைய ஒரே மகனாகிய சிறுவனை அழைத்து, அவனுக்கு வெண்ணிற ஆடையை உடுத்தி, அவனுடைய பரட்டைத் தலையில் எண்ணெய் தடவி, சீவி முடித்து, கையில் வேலைக் கொடுத்துப் "போர்க்களத்தை நோக்கிச் செல்க" என்று அனுப்பினாள்.
புறநானூறு 308
களிறுபொரக் கலங்கு கழல்முள் வேலி
அரிதுஉண் கூவல் அங்குடிச் சீறூர்
ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை
நடுகல் கைதொழுது பரவும் ஒடியாது;
விருந்து எதிர் பெறுகதில் யானே; என்ஐயும் 5
ஒ .. .. .. .. .. .. வேந்தனொடு
நாடுதரு விழுப்பகை எய்துக எனவே.
யானைகள் படிந்ததால் கலங்கிச் சேறாகி, உண்ணும் நீர் சிறிதளவே உள்ள நீர்த்துறையையும், முள்ளையுடைய கழற்கொடிகளாலாகிய வேலி சூழ்ந்த அழகிய சிறுகுடிகளையுமுடைய சிற்றூரில் வாழும், தழைத்த மெல்லிய கூந்தலையும் ஒளி பொருந்திய நெற்றியையும் உடைய பெண் ஒருத்தி, நாளும் தவறாமல் தன் முன்னோர்களின் நடுகல்லைத் தொழுது, "நாள்தோறும் விருந்தினர் என் இல்லத்திற்கு வர வேண்டும்; என் கணவனும் ..... அவன் தலைவனாகிய வேந்தனும் பிற நாடுகளை வென்று பொருள் பெற உதவும் பெரும்பகையை அடைவானாகுக" என்று அவள் நடுகல்லை வழிபட்டாள்.
உசாத்துணை
வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-Sep-2025, 19:55:14 IST