முரச வாகை: Difference between revisions
No edit summary |
; Added info on Finalised date |
||
| (5 intermediate revisions by 2 users not shown) | |||
| Line 14: | Line 14: | ||
வழங்கும் தடக்கையான் வான் தோய் நகருள் | வழங்கும் தடக்கையான் வான் தோய் நகருள் | ||
முழங்கும் அதிரும் முரசு (158) | முழங்கும் அதிரும் முரசு (158) | ||
</poem>பொருள்: | </poem>பொருள்: பகையுள்ள காலத்தே அதிரும் முரசு, திங்களையொத்த உயர்ந்த கொற்றக் குடையினை உடைய அரசர்கள் பலரும் பணிந்து புகழ்மாலையினைச் சூட்ட, செல்வத்தை இரவலர்க்கு வழங்கும். பெரிய கையினையுடைய நம் அரசனது, விண்ணைத் தொடுமளவு உயரத்தைக் கொண்டதான மாளிகையில், இப்பொழுது வெற்றிமுழக்கத்தை எழுப்புகிறது. | ||
==உசாத்துணை== | ==உசாத்துணை== | ||
[https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0214-html-d0214223-19847 வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்] | [https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0214-html-d0214223-19847 வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்] | ||
{{Finalised}} | |||
{{Fndt|28-Jul-2025, 18:21:38 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Latest revision as of 03:44, 29 July 2025
முரச வாகை வாகைத் திணையின் துறைகளில் ஒன்று. வெற்றி பெற்ற அரசனின் முரசின் சிறப்பைக் கூறுவது.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் ஒலிக்கின்ற சூழல் அணிந்த அரசனின் அகன்ற அரண்மனையில் உள்ள வீரரிடத்துப் பலியைப் பெறும் முரசின் தன்மையைக் கூறுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
ஒலிகழலான் அகல்அருள்
பலிபெறு முரசின் பண்பு உரைத்தன்று(கொளு 8.4)
வெண்பா
மதிஏர் நெடும்குடை மன்னர் பணிந்து
புதிய புகழ்மாலை வேய - நிதியம்
வழங்கும் தடக்கையான் வான் தோய் நகருள்
முழங்கும் அதிரும் முரசு (158)
பொருள்: பகையுள்ள காலத்தே அதிரும் முரசு, திங்களையொத்த உயர்ந்த கொற்றக் குடையினை உடைய அரசர்கள் பலரும் பணிந்து புகழ்மாலையினைச் சூட்ட, செல்வத்தை இரவலர்க்கு வழங்கும். பெரிய கையினையுடைய நம் அரசனது, விண்ணைத் தொடுமளவு உயரத்தைக் கொண்டதான மாளிகையில், இப்பொழுது வெற்றிமுழக்கத்தை எழுப்புகிறது.
உசாத்துணை
வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 28-Jul-2025, 18:21:38 IST